தினசரி நடப்பு நிகழ்வுகள் 11.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 11.7.2021 (Daily Current Affairs)

செயற்கைக்கோள்/ஏவுகனை

விண்வெளிக்குச் சென்ற ரிச்சா்ட் பிரான்ஸன் குழு - இந்திய வம்சாவளி பெண்ணும் பயணம்..!

🔷விண்வெளிச் சுற்றுலாவின் முதல்படியாக இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் உள்பட 6 பேர் புவிமண்டலத்திற்கு மேலே சுமார் 85 கிலோ மீட்டர் உயரம் பயணித்து பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

🔷விண்வெளி சுற்றுலாவை மனதில் வைத்து சோதனை முயற்சியாக விர்ஜின் கேலக்டிக் நிறுவனத் தலைவர் ரிச்சர்டு பிரான்சன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் சிரிஷா பந்த்லா உள்ளிட்ட 6 பேர் விண்வெளிக்குப் பயணித்தனர். இதற்காக நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் இருந்து யுனிட்டி 22 என்ற விண்கலத்தை இரட்டை விமானங்கள் சுமந்து கொண்டு சென்றன.

🔷சுமார் 50 ஆயிரம் அடி உயரத்தை அடைந்ததும் அந்த இரட்டை விமானங்கள் யுனிட்டி 22 விண்கலத்தை கழற்றி விட்டன.

🔷இதையடுத்து நெருப்புப் பறக்க சீறிப்பாய்ந்த யுனிட்டி விண்கலம் வளிமண்டலத்தைத் தாண்டிச் சென்றது. 60 நொடிகளில் யுனிட்டி 22 விண்கலம் சுமார் 2 லட்சத்து 95 ஆயிரம் அடி உயரத்தை அதாவது கிட்டத்தட்ட 90 கிலோ மீட்டர் உயரத்தை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் பிரான்சன் உள்ளிட்ட குழுவினர் 85 கிலோ மீட்டர் உயரம் வரை பயணித்தனர்.

🔷புவியீர்ப்புப் பாதையைக் கடந்து விண்வெளியை அடைந்ததும், உடல் எடையற்ற தன்மையை அவர்கள் உணர்ந்தனர். அதன் பின்னர் 5 நிமிடங்கள் வரை பயணித்து பூமியின் அழகை ரசித்த பிரான்சன் குழுவினர் மீண்டும் பூமிக்குத் திரும்பினர். தாங்கள் புறப்பட்ட அதே நியூ மெக்ஸிகோ பாலைவனத்திலேயே அவர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.

🔷இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரான்சன், தங்கள் நிறுவனத்தின் 17 ஆண்டு கால உழைப்பிற்கு வெற்றி கிடைத்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்தியா

கேப்டன் குர்ஜீந்தர்சிங் சூரிக்கு போர் நினைவிடம்..!!

🔷இந்திய இராணுவமானது குல்மார்க்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே கேப்டன் குர்ஜீந்தர்சிங் சூரியின் நினைவாக ஒரு போர் நினைவிடத்தை அமைத்து உள்ளது.

🔷இது கேப்டன் குர்ஜீந்தர் சிங் சூரியின் பிறந்தநாளன்று திறக்கப்பட்டது.

🔷கேப்டன் குர்ஜீந்தர் சிங் சூரி 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற “பிர்சா முண்டா” எனும் ஒரு நடவடிக்கையின் போது உயிரிழந்தார்.

இரண்டு புதிய சிலந்தி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது..!!

🔷அசாமின் மேற்குப் பகுதியின் சிராங் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் (Chirang Reserve Forest) ஜார்பாரி வனப் பிரிவில் (Jharbari range) இரண்டு புதிய சிலந்தி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இரு சிலந்தி இனங்களும் ஒரே இடத்தில் வாழ்கின்றன.

🔷கிரேவெலியா போரோ என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தில் வலை அமைக்கும் சிலந்தி ஆகும். டெக்சிபஸ் க்ளெய்னி என்பது ஓரியண்டல் குதிக்கும் சிலந்தி (oriental jumping spider) ஆகும்.

🔷இந்த இரு சிலந்தி இனங்களும் போடோலாண்ட் பிராந்தியப் பகுதியில் கண்டறியப் பட்டுள்ளன. கிரேவெலியா போரோ இனமானது நெமிசிடே (Nemesiidae) குடும்பத்தைச் சேர்ந்தது.

🔷டெக்சிபஸ் களெய்னி இனமானது சால்டிசிடே (Salticidae) குடும்பத்தைச் சேர்ந்தது. சால்டிசிடே குடும்பமானது புவியிலுள்ள அனைத்து சிலந்தி இனங்களின் மிகப்பெரிய குடும்பமாகும்.

ஆயுஷ் துறை மந்திரியாக சர்பானந்தா சோனாவால் பொறுப்பேற்பு..!!

🔷ஆயுஷ் துறை மந்திரியாக சர்பானந்தா சோனாவால் பொறுப்பேற்றுக்கொண்டார்.

🔷பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் ஆயுஷ் துறையின் புதிய மந்திரியாக அசாம் முன்னாள் முதல்-மந்திரியான சர்பானந்தா சோனோவால் நியமிக்கப்பட்டார். அவர் ஆயுஷ் துறை அமைச்சகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

🔷புதிய ஆயுஷ் துறை மந்திரியாக பொறுப்பேற்றிருக்கும் சர்பானந்தா சோனோவாலுக்கு கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் துறையும் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் - ஆஷ்லி பா்டி சாம்பியன்..!!

🔷விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பா்டி சாம்பியன் ஆனாா்.

🔷விம்பிள்டனில் இது அவரது முதல் பட்டமாகும். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இது அவரது 2 ஆவது சாம்பியன் பட்டம். இதற்கு முன் 2019 பிரெஞ்சு ஓபனில் அவா் வாகை சூடியிருந்தாா்.

🔷லண்டனில் நடைபெற்ற இறுதிச்சுற்றில், உலகின் 13 ஆம் நிலையில் உள்ள செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிா்கொண்டாா், உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லி பா்டி. மைய ஆடுகளத்தில் பா்டி வெற்றி பெற்றாா்.


Share Tweet Send
0 Comments
Loading...