தினசரி நடப்பு நிகழ்வுகள் 11.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 11.4.2021 (Daily Current Affairs)

உலகம்

E9-முன்னெடுப்பு !!

🔷E9 நாடுகளின் கல்வி அமைச்சர்கள் ஆலோசனைச் சந்திப்பிற்கு இந்தியக் கல்வி அமைச்சர் தலைமை தாங்கினார்.

🔷இந்த சந்திப்பு, தரமான கல்வி எனும் நீடித்த மேம்பாட்டு இலக்கு எண் 4 என்பதனை அடைவதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்த டிஜிட்டல் கல்விமுறையை அதிகரித்தல் எனும் E9 முன்னெடுப்பு பற்றியதாகும்.

🔷ஐ.நா.வின் தலைமையில் 1993 ஆம் ஆண்டில் E9 கூட்டாண்மை முதன்முதலில் நிறுவப்பட்டது.

🔷வங்காளதேசம், பிரேசில், சீனா, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை E9 நாடுகளாகும்.

🔷இந்த முன்னெடுப்பு நீடித்த மேம்பாட்டு இலக்கு எண் 4 என்பதற்கான செயல்பாட்டு நிரல்களை (Agenda) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

🔷2020-ம் ஆண்டு மூன்று உலகளாவிய கல்வி மாநாட்டு முன்னுரிமைகளின் உள்ள கல்வி முறைகளில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இது மேற்கொள்ளப்பட்டது.

3,400 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு !!

🔷எகிப்து நாட்டில் அகழ்வாராய்ச்சியின் மூலம் சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான எகிப்தில் Luxor நகரத்துக்கு அருகே Kings பள்ளத்தாக்கில் மண்ணில் புதைந்திருந்த எகிப்தின் மிகப் பெரிய பண்டைய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

🔷இது சுமார் 3,400 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை ஆண்ட Pharaohs மன்னர் Tutankhamun ஆட்சியின் கீழ் இருந்த பெருநகரம் என கூறப்படுகிறது.

🔷அகழ்வாராச்சியில் அப்பகுதியில் ஏகப்பட்ட மனித மற்றும் விலங்குகளின் எச்சங்கள், மண் பாண்டங்கள் , நகைகள், முத்திரைகள் பதித்த செங்கற்கள் உள்ளிட்ட பல அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

🔷காலத்தால் மண்ணில் புதைந்துபோன அந்த நகரத்தில் குடியிருப்புகள், சேமிப்பு கிடங்குகள், கடைகள், உணவகங்கள், அடுப்புகள், சுவர்கள், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்ட அக்கருவிகள் உள்ளிட்ட பலவற்றை அகழ்வாராய்ச்சியில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா

உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் !!

🔷மத்திய அமைச்சரவை White goods(வெள்ளைப் பொருட்கள்) எனப்படும் மின்னணு சாதனங்களுக்கான (குளர்சாதனங்கள் மற்றும் பல்புகள் உற்பத்தி ஊக்குவிப்பு (Production linked Incentive - PLI) திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

🔷இத்திட்டம் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் எனவும் பெருமளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் எனவும் ஏற்றுமதிகளை கணிசமான அளவில் மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

🔷இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 4% முதல் 6% வரையிலான ஊக்கத் தொகையானது குளிர்சாதனங்கள் மற்றும் LED பல்புகள் போன்றவற்றின் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும்.

அறிவியல் தொழில்நுட்பம்

வைரஸை தடுக்கும் மின்னணு இன்குபேட்டர் கருவி !!

🔷கேரளாவில், ஒரு தனியார், 'ஸ்டார்ட் அப்' நிறுவனம், காற்றில் நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, மின்னணு, 'இன்குபேட்டர்' கருவியை தயாரித்து உள்ளது.

🔷கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த, கே.எஸ்.யு.எம்., எனப்படும், 'கேரள ஸ்டார்ட் அப் மிஷன்' நிறுவனம், நோய்த்தொற்று, காற்றில் பரவுவதை தடுக்க, ஒரு மின்னணு, 'இன்குபேட்டர்' கருவியை உருவாக்கி உள்ளது.

🔷'ஸ்பீக்கர்' போன்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருவிக்கு, 'வொல்ப் ஏர்மாஸ்க்' என, பெயர் வைக்கப்பட்டுள்ளது.

🔷இந்த கருவி பொருத்தப்பட்டுள்ள இடத்தில், காற்றில் நோய்த்தொற்று இருந்தால், அதை தடுக்கும். இந்த மின்னணு சாதனத்தை ஆர்.ஜி.சி.பி.,எனப்படும் ராஜிவ் காந்தி உயிரி தொழில்நுட்பவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர். அதில், இந்த கருவி சிறந்த செயல்திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டது.

🔷இந்த இன்குபேட்டர் கருவி 15 நிமிடங்களில், நோய்த்தொற்றை, 99 சதவீத அளவிற்கு குறைக்கும் திறன் உடையது. இதை, 'ஆன்' செய்துவிட்டால், 360 டிகிரி சுற்றி, ஒரு நாள் முழுதும் பாதுகாப்பு அரணாக, வைரசை ஊடுருவ விடாமல் காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெங்குவை விரைவில் கண்டறிதல் !!

🔷டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்பரப்பு மேம்படுத்தப்பட்ட இராமன் நிறப்பிரிவைச் சார்ந்த ஒரு கையடக்கமான கருவியை உருவாக்கியுள்ளனர்.

🔷இது டெங்குவை முன்கூட்டியே கண்டறிய உதவும். மேலும் இது ஒரு மணிநேரத்திற்குள் டெங்கு சோதனை முடிவுகளை வழங்கும்.

🔷டெங்குவை முன்கூட்டியே கண்டறிதல் என்பது நோயாளியின் உடல்நிலை மோசமடைவதைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய காரணியாகும்.

🔷இதற்கான ஆராய்ச்சிக்கு கல்வி அமைச்சகத்தின் IMPRINT இந்தியா எனும் திட்டம் நிதி உதவி வழங்குகிறது.

விருதுகள்

துரிங் விருது 2020 !!

🔷ஆல்பிரடு V. ஆஹோ அவர்கள் 2020 ஆம் ஆண்டிற்கான கணினி அமைப்புகள் கூட்டமைப்பின் A.M. துரிங் விருதினை வென்றுள்ளார்.

🔷ஆஹோ அவருடன் நீண்ட நாட்களாக இணைந்து பணி புரியும் ஜெஃப்ரி டேவிட் உல்மேன் என்பவருடன் இவ்விருதினைப் பகிர்ந்து கொள்கிறார்.

🔷இந்த துரிங் விருதானது கூகுள் நிறுவனம் வழங்கும் நிதி உதவியுடன் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை உள்ளடக்கியதாகும்.


Share Tweet Send
0 Comments
Loading...