தினசரி நடப்பு நிகழ்வுகள் 10.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 10.7.2021 (Daily Current Affairs)

விருதுகள்

பொருளாதாரத்திற்கான ஹம்போல்ட் ஆராய்ச்சி விருது..!

🔷இந்தியப் பொருளாதார வல்லுநர் கௌசிக் பாசுவிற்குப் பொருளாதாரத்திற்கான ஹம்போல்ட் ஆராய்ச்சி (Humboldt Research) என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

🔷இந்த விருதானது உலகெங்கிலும் உள்ள அறிவியலாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களுக்கு அவர்களது சிறந்த பணிக்காக கௌரவம் அளிக்கிறது.

🔷உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார வல்லுநரான பாசு தற்போது மத்திய பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

🔷மேலும் 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும் அவர் பணியாற்றினார்.

🔷மேலும் இவர் இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்ம பூசண் விருதினையும் பெற்றவராவார்.

கோபா அமெரிக்கா - மெஸ்ஸிக்கு தங்க காலணி விருது..!!

🔷கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த லயோனல் மெஸ்ஸிக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டுள்ளது.

🔷கோபா அமெரிக்கா கோப்பையின் இறுதி ஆட்டதில் ஆர்ஜென்டீனாவும் பிரெசிலும் மோதிக்கொண்டன. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் வெற்றி பெற்ற ஆர்ஜென்டீனா கோப்பையைக் கைப்பற்றியது.

🔷இந்த ஆட்டதில் மெஸ்ஸி எந்த கோலும் போடவில்லை. இருப்பினும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய மெஸ்ஸி அடித்த கோல்களின் மொத்த எண்ணிக்கை 4. இதற்காக அவருக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டிருக்கிறது.

🔷அணி கேப்டனாக இருந்து அவர் பெற்றுத் தரும் முதல் கோபா கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

கர்நாடக புதிய ஆளுநராக தாவா்சந்த் கெலாட் பதவியேற்பு..!!

🔷கா்நாடகத்தின் 19 ஆவது ஆளுநராக தாவா்சந்த் கெலாட் பதவியேற்றுக் கொண்டார். பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய ஆளுநராக தாவா்சந்த் கெலாட் பதவியேற்றுக் கொண்டார்.

🔷கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஓகா அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.

இந்தியாவில் 35 சதவீத புலிகள் வனப்பகுதிக்கு வெளியே வசிப்பது ஆய்வில் கண்டுபிடிப்பு..!!

🔷இந்தியாவில் 35 விழுக்காடு புலிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே வசிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

🔷ஐ.நா. வின் சுற்றுச்சூழல் துறையும், சர்வதேச வனநிதியமும் நடத்திய ஆய்வறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் புலிகள் வாழுமிடம் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று துண்டிக்கப்பட்டுள்ளதால், அவைகள் உணவுக்காக மனிதனைச் சார்ந்த இடங்களுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் நிலம் மற்றும் இயற்கை வளங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வனப்பகுதிகள் துண்டாடப்படுவதாகவும், இதனால் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான மோதல் அதிகமாக நடப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நியமனங்கள்

இந்தியாவில் வினய் பிரகாஷ் என்பவரை குறைதீர்க்கும் அதிகாரியாக ட்விட்டர் நியமனம்..!!

🔷இந்தியாவில் வினய் பிரகாஷ் என்பவரை குறைதீர்க்கும் அதிகாரியாக நியமித்துள்ளதாக டுவிட்டர் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

🔷மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்களைகளை ஏற்பது தொடர்பாக மத்திய அரசுடன் உரசல் போக்கை மேற்கோண்ட டுவிட்டர் நிறுவனம் அதற்காக வழக்கு விசாரணையையும் சந்தித்து வருகிறது.

🔷கடந்த 8 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் புதிய விதிகளின் படி இந்தியர் ஒருவரை குறைதீர்க்கும் அதிகாரியாக நியமிக்கவில்லை என்றால் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என டுவிட்டருக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

🔷இந்த நிலையில் வினய் பிரகாஷை அந்த பதவிக்கு நியமித்துள்ள டுவிட்டர் grievance-officer-in @ twitter.com என்ற இணைய முகவரியில் அவரை தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.

🔷அத்துடன் அரசு விதிகளை ஏற்றதற்கான ஒரு மாத கால வெளிப்படைத்தன்மை அறிக்கையையும் டுவிட்டர் வெளியிட்டுள்ளது.

விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் - கோப்பையை வென்ற இந்திய வம்சாவளி வீரர் சமிர் பானர்ஜீ..!!

🔷விம்பிள்டன் டென்னிஸ் சிறுவர் பிரிவின் ஒற்றையர் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த சமிர் பானர்ஜீ கைப்பற்றினார்.

🔷விம்பிள்டன் டென்னிஸ் சிறுவர் பிரிவின் ஒற்றையர் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த சமிர் பானர்ஜீ நேற்று கைப்பற்றினார்.

🔷ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நீடித்த இந்த இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சமிர் பானர்ஜீ சக நாட்டவரான விக்டர் லிலோவை வீழ்த்தி கோப்பையை வென்றார். 17 வயதான சமிர் பானர்ஜீ இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.


Share Tweet Send
0 Comments
Loading...