தினசரி நடப்பு நிகழ்வுகள் 10.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 10.4.2021 (Daily Current Affairs)

இந்தியா

அன்னமயா முன்னெடுப்பு !!

🔷மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் சமீபத்தில் அன்னமயா எனப்படும் பழங்குடியினர் கூட்டமைப்பைத் தொடங்கி வைத்துள்ளார்.

🔷பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் இந்த முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.

🔷இந்த முன்னெடுப்பிற்கு பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பிரமல் அறக்கட்டளை ஆகியவை உதவி செய்யும்.

🔷இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கம் இந்தியாவில் வாழும் பழங்குடியினச் சமுதாயத்தினரின் சுகாதார மற்றும் ஊட்டச் சத்து முறையை மேம்படுத்துவதே ஆகும்.

மது கிராந்தி தளம் மற்றும் தேன் விற்பனை முனையங்கள் !!

🔷மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அவர்கள் இந்தியாவில் தேன் உற்பத்தித் திட்டத்தை மேம்படுத்த மது கிராந்தி தளம் மற்றும் இந்தியாவின் தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தையிடல் கூட்டமைப்பின் தேன் விற்பனை முனையங்களைத் தொடங்கி வைத்தார்.

🔷மது கிராந்தித் தளமானது தேசிய தேனீக்கள் வாரியத்தின் முன்னெடுப்பாகும்.

🔷இது தேசிய தேனி வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தித் திட்டத்தின் கீழ் இயக்கப்படுகிறது.

🔷இத்தளமானது டிஜிட்டல் தளத்தில் தேனின் மூலப்பொருள் மற்றும் தேன் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றினைக் கண்டறிய உதவும்.

🔷மேலும் தேனின் தரம் மற்றும் தேனில் கலப்படம் செய்ய பயன்படுத்தப்படும் மூலத்தைக் கண்டறியவும் இத்தளம் உதவும்.

🔷தேன் உற்பத்தி சந்தைப்படுத்துதல், தேனீ வளர்ப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் அனைத்துப் பங்குதாரர்களின் தகவல்களும் இத்தளத்தில் சேமிக்கப்படும்.

இராணுவம் / பாதுகாப்பு

ஓய்வுபெற்ற போர்குணமுள்ள நாயினங்களை சிகிச்சை நாய்களாக பயன்படுத்த முடிவு !!

🔷இந்தோ-திபெத்திய எல்லைக்காவல்படையானது ஓய்வுபெற்ற போர்குணமுள்ள நாயினங்களை ‘சிகிச்சை நாய்களாக’ பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

🔷மருத்துவ சிகிச்சையில் உட்பட்டிருக்கும் பணியாளர்களை விரைவாக மீட்க அவை உதவும். மேலும் அவை, சிப்பாய்களின் மாற்றுத் திறன்கொண்ட சிறார்களின் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படவுள்ளன.

🔷இந்தியாவிலேயே முதன்முறையாக, ஓய்வுபெற்ற நாயினங்கள் படையினருக்கு சேவை செய்ய பயன்படுத்தப்படவுள்ளன.

விளையாட்டு

அன்ஷு, சோனம் மாலிக் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி !!

🔷டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனைகளான 18 வயதான சோனம் மாலிக்கும், 19 வயதான அன்ஷு மாலிக்கும் தகுதி பெற்றனர்.

🔷கஜகஸ்தானின் அல்மாதியில் நடைபெற்று வரும் ஆசியத் தகுதிச்சுற்று மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அக்மேடோவைத் தோற்கடித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் அன்ஷு மாலிக்.

🔷62 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் கேசிமோவாவைப் தோற்கடித்து சோனம் மாலிக் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

🔷இதுவரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் தகுதி பெற்றுள்னர். ஏற்கெனவே வினேஷ் போகத் 53 கிலோ எடைப் பிரிவில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரின் வாயிலாக தகுதி பெற்றிருந்தார்.

🔷ஆடவர் பிரிவில் பஜ்ரங் புனியா (65 கிலோ), ரவி தாஹியா (57 கிலோ), தீபக் புனியா (86 கிலோ) ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.

மகளிர் ஆசிய கோப்பை - 2022 !!

🔷கடந்த 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பின், மகளிர் ஆசிய கோப்பை - 2022 போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது.

🔷அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரபுல் படேல், இப்போட்டியை 12 அணிகள் பங்கேற்கும் போட்டியாக அறிவித்தார். முந்தைய காலங்களில் வெறும் எட்டு அணிகள் மட்டுமே போட்டிகளில் இடம்பெற்றன.

🔷போட்டியை நடத்துவதால் இந்தியா நேரடியாக போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறும். இந்நிகழ்வு 2023 FIFA மகளிர் உலகக் கோப்பைக்கான தகுதிப்போட்டியாகவும் இருக்கும்.

விருதுகள்

அறிவியல்-ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருது !!

🔷பேராசிரியர் சுமன் சக்கரபர்த்தி, அறிவியல் ஆராய்ச்சிக்கான 30வது GD பிர்லா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

🔷பொறியியல் அறிவியல் மற்றும் கட்டுப்படியாகக் கூடிய சுகாதார வசதிகளுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அதன் பயன்பாடு ஆகியவற்றிற்காக அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

🔷இவர் கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயந்திரப் பொறியியல் துறையில் பணியாற்றும் ஒரு ஆசிரியராவார்.

🔷அறிவியல் அல்லது தொழில்நுட்பத்தின் எந்த ஒரு பிரிவிலும் மூலதன மற்றும் சிறப்பான பங்களிப்பினை ஆற்றும் 50 வயதிற்கு கீழ் உள்ள சிறந்த இந்திய அறிவியலாளர்களை அங்கீகரிப்பதற்காக அறிவியல் ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருது வழங்கப்படுகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...