தினசரி நடப்பு நிகழ்வுகள் 10.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 10.3.2021 (Daily Current Affairs)

இந்தியா

இந்திய கடற்படையில் மூன்றாவது ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கி கப்பல் சோ்ப்பு !!

🔷இந்திய கடற்படையில் மூன்றாவது ‘ஸ்காா்பீன்’ ரக நீா்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். கரஞ்ச் சோ்க்கப்பட்டது.

🔷மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் கடற்படை தளபதி கரம்வீா் சிங், முன்னாள் தளபதி வி.எஸ்.ஷெகாவத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

🔷பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் (எம்டிஎல்) மூலமாக 6 ‘ஸ்காா்பீன்’ ரக நீா்மூழ்கி கப்பல்களை இந்தியா கட்டமைத்து வருகிறது.

🔷இதில், இரண்டு நீா்மூழ்கி கப்பல்கள் கட்டி முடிக்கப்பட்டு, கடற்படையில் ஏற்கனவே இணைக்கப்பட்டன. இப்போது மூன்றாவது நீா்மூழ்கி கப்பலான கரஞ்ச் இணைக்கப்பட்டது.

🔷சக்திவாய்ந்த அதிநவீன ஆயுதங்கள், கடலுக்கு அடியிலும், மேற்பரப்பிலிருந்தும் வரும் எந்தவிதமான அச்சுறுத்தல்களை தொலைவிலேயே கண்டறிந்து தகவல் கொடுக்கும் வகையிலான சென்சாா் கருவிகளும் இந்த ஐ.என்.எஸ்.கரஞ்ச் நீா்மூழ்கி கப்பலில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் முதலாவது உலக திறன் மையம் !!

🔷இந்தியாவின் முதலாவது,  ‘உலக திறன் மையம்’ (World Skill Center)  1342.2 கோடி ரூபாய் செலவில் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள மான்செஸ்வர் எனுமிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

🔷ஒடிசா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (About Asian Development Bank) நிதியுதவியுடன்  சிங்கப்பூரைச் சேர்ந்த ITE Education Services (ITEES) எனும் நிறுவனத்தின் அலோசனையுடன் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

வெளி தணிக்கையாளர்களின் குழுவின் தலைவர் நியமனம் !!

🔷இந்திய கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர் (Comptroller and Auditor General of India)  கிரிஷ் சந்திர முர்மு (Girish Chandra Murmu), ஐக்கிய நாடுகளவையின்  2021 ஆம் ஆண்டுக்கான வெளி தணிக்கையாளர்களின் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷நிதி குழுவில்,  இந்தியாவைத் தவிர, ஜெர்மனி, சிலி, சீனா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் , பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, கானா, இந்தோனேசியா, கனடா மற்றும் ரஷ்யா ஆகிய 12 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

குழந்தைகள் நல விழிப்புணர்வு தூதர்களாக 3 வயது குழந்தைகள் இருவர் தேர்வு !!

🔷பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கடந்தஆண்டு நடைபயணம் மேற்கொண்டு சாதனை படைத்த 3 வயது பெண் குழந்தைகள் இருவர் குழந்தைகள் நல விழிப்புணர்வுக்கான தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

🔷கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது காஞ்சிபுரத்தில் எம்.எஸ்.ரித்திகா, கே.எஸ்.வைணவி என்ற 3 வயது குழந்தைகள் இருவர், ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற விழிப்புணர்வுக்காக காஞ்சிபுரம் ராயன் குட்டைத் தெருவில் இருந்து நான்கு ராஜவீதிகளையும் சுமார் 3 கி.மீ. சுற்றி வந்தனர்.

🔷இவர்களின் சாதனை யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஜெட்லி புக் ஆஃப் ரெகார்ட்ஸ், மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகிய புத்தகங்களில் இடம் பெற்றன.

🔷இதன் காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் நல விழிப்புணர்வு தூதர்கள் என்ற கெளரவத்தை வழங்கியுள்ளது.

உத்தரகண்ட் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்பு !!

🔷உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் இன்று பதவியேற்றுக் கொண்டாா்.

🔷ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநா் பேபி ராணி மௌரியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

🔷உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத், கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதன் பேரில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

🔷அதைத் தொடா்ந்து, பாஜக சட்டப் பேரவைக் கட்சித் தலைவரைத் தோ்வு செய்வதற்கான கூட்டம், டேராடூனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக தீரத் சிங் ராவத் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

🔷புதிய முதல்வராத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தீரத் சிங் ராவத், பௌரி கா்வால் தொகுதி பாஜக எம்.பி.யாக உள்ளாா்.

🔷கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தாா். கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளராகவும் உள்ளாா்.

ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

நிலவு ஆராய்ச்சி நிலையம் அமைக்க சீனா-ரஷியா ஒப்பந்தம் !!

🔷புவியின் துணைக்கோளான ‘நிலவு தொடா்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சா்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க சீனாவும் ரஷியாவும் திட்டமிட்டுள்ளன. இது தொடா்பான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையெழுத்தானது.

🔷நிலவின் மேற்பரப்பிலோ சுற்றுவட்டப் பாதையிலோ இந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. நிலவு சாா்ந்த அனைத்து ஆய்வுகளையும் இங்கு மேற்கொள்ள முடியும்.

🔷மற்ற நாடுகளும் இந்த ஆராய்ச்சி நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆராய்ச்சி நிலையத்தை அமைப்பது குறித்த ஆலோசனை, கட்டுமானம் உள்ளிட்டவற்றில் சீனாவும் ரஷியாவும் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படும்.

🔷விண்வெளியை அமைதி சாா்ந்த விவகாரங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன.

🔷எனினும், நிலவு ஆராய்ச்சி நிலையம் எந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்த தகவல்களை சீனா வெளியிடவில்லை. இரு சிறிய ரக விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களை சீனா ஏற்கெனவே விண்வெளிக்குச் செலுத்தி பரிசோதித்து வருகிறது.

🔷நிலவின் இருள்சூழ்ந்த பகுதியில் ஆய்வுக்கலனை சீனா நிலைநிறுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்கலனைத் தரையிறக்குவதற்கான முயற்சிகளிலும் சீனா ஈடுபட்டு வருகிறது.

🔷இத்தகைய சூழலில், விண்வெளி சாா்ந்த திட்டத்தில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு சீனாவும் ரஷியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

புத்தகம்

கான் அப்துல் காஃபர் கானின் சுயசரிதை !!

🔷“The Frontier Gandhi: My Life And Struggle” என்ற பெயரில்  கான் அப்துல் காஃபர் கானின் (Khan Abdul Ghaffar Khan) சுயசரிதை ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

🔷இதனை பாகிஸ்தானைச் சேர்ந்த அரசு குடிமைப்பணி அதிகாரி  இமிதியாஸ் அகமது சாகிப்ஜாதா (Imitiaz Ahmad Sahibzada) மொழிபெயர்த்துள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பம்

5 நிமிடங்களில் சார்ஜாகும் பேட்டரி - இஸ்ரேல் கண்டுபிடிப்பு !!

🔷அதிவேக ரீசார்ஜ் தொழில் நுட்பங்களில் நிபுணத்துவம் கொண்ட இஸ்ரேலைச் சேர்ந்த ஸ்டோர்டாட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் முதல் தலைமுறை லித்தியம் அயன் பேட்டரியை உருவாக்கியுள்ளது.

🔷இந்த பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆக 5 நிமிடங்களே ஆகும் என்கிறார் நிறுவனத்தின் நிறுவனர் டோரன் மயர்ஸ்டார்ஃப்.

🔷இந்த அதிவேக பேட்டரி தொழில்நுட்பமானது எலெக்ட் ரிக் வாகன ஓட்டுநரின் அனுபவத்தையே தலைகீழாக மாற்றக்கூடியது. நெடுந்தூரப் பயணங்களில் உள்ள சார்ஜ் ஏற்றும் கவலையை முற்றிலுமாக நீக்கிவிடுகிறது. சார்ஜ் செய்ய சில மணி நேரங்கள் ஆகும் என்ற நிலையை இந்த பேட்டரி மாற்றிவிடும்.

🔷இதற்காக பல்வேறு பரி சோதனைகளை இந்நிறுவனம் செய்துள்ளது. இந்நிறுவனம் மொபைல், ட்ரோன், ஸ்கூட்டர் களுக்கு பேட்டரிகளை உற்பத்தி செய்கிறது.


Share Tweet Send
0 Comments
Loading...