தினசரி நடப்பு நிகழ்வுகள் 1.4.2021 ( Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 1.4.2021 ( Daily Current Affairs)

இந்தியா

சாகித் அஷ்பக் உல்லா கான் விலங்கியல் பூங்கா !!

🔷சமீபத்தில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் சாகித் அஷ்பக் உல்லா கான் விலங்கியல் பூங்காவினைத் திறந்து வைத்தார்.

🔷இது பூர்வாஞ்சலில் அமைந்த முதலாவது மற்றும் அந்த மாநிலத்தின் மூன்றாவது விலங்கியல் பூங்காவாகும்.

🔷இந்தப் பூங்காவிற்கு சுதந்திரப் போராட்ட வீரரான சாகித் அஷ்பக் உல்லா கானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சிறைச்சாலை வானொலி !!

🔷”டின்கா டின்கா" என்ற அறக்கட்டளையானது மாநில அரசுடன் இணைந்து ஹரியானா சிறைச்சாலைகளில் ”சிறைச்சாலை வானொலி” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

🔷சிறைச்சாலை வானொலி என்பது கைதிகளால் சிறைச்சாலைக்கு உள்ளேயே இயக்கப் பட்டு நடத்தப் படுகின்ற ஒரு வானொலியாகும்.

🔷வளாகத்திற்குள்ளேயே உள்ள காட்சிப்படக் கூடத்திலிருந்து ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் கைதிகள் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள ஒலிப்பெருக்கிகள் மூலம் அவர்களைச் சென்றடையும்.

🔷கைதிகளின் படைப்பாற்றலை வெளிக் கொணர்வதும், அர்த்தமுள்ள வகையில் ஓர்  ஈடுபாட்டினை அவர்களுக்கு வழங்குவதும் இதன் நோக்கமாகும்.

பசுமை திறன் நகரங்களைக் கொண்டுள்ள மாநிலம் பீகார் !!

🔷இந்தியாவிலேயே முதல் மாநிலமாக , இரண்டு பசுமை திறன் நகரங்களைக் கொண்டுள்ள மாநிலம் எனும்பெருமையை பீகார் பெற்றுள்ளது.

🔷அம்மாநிலத்தின் ராஜ்கிர் (Rajgir) மற்றும் போத்கயா (BodhGaya) ஆகிய இரண்டு நகரங்களும் பசுமை திறன் நகரங்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

🔷இந்த நகரங்களை நடத்துவதற்குத் தேவையான பசுமை எரிசக்தி விநியோகத்தை இந்திய சூரிய ஆற்றல் கழகம் (Solar Energy Corporation of India (SECI)) தயாரித்து வழங்கும்.

அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கிய முதல் மாநிலம் ராஜஸ்தான் !!

🔷மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கிய முதல் இந்திய மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றுள்ளது.

🔷அந்த மாநில காங்கிரஸ் அரசு அமல்படுத்தியுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.

🔷ஏழை, பணக்காரா்கள் என்ற எந்தவித வேறுபாடுமின்றி ராஜஸ்தானில் உள்ள அனைத்து குடும்பத்துக்கும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

🔷மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் இதுபோன்ற இலவச காப்பீட்டுத் திட்டங்களை அளித்திருந்தாலும், அது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அண்மையில் ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்த அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட், மாநிலத்தில் அனைத்து குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச காப்பீடு அளிக்கப்படும் என்று அறிவித்தாா்.

🔷அத்திட்டம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டை இலவசமாகப் பெற முடியும்.

🔷‘மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுதோறும் தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.

🔷இந்தியாவிலேயே இப்படியொரு சிறப்பான திட்டத்தை அமல்படுத்திய மாநிலம் ராஜஸ்தான் மட்டுமே. இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்ட அனைவரும் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற முடியும்.

நியமனங்கள்

பொதுத் துறை நிறுவனங்கள் தோ்வு வாரியத்தின் தலைவராக மல்லிகா ஸ்ரீநிவாசன் நியமனம் !!

🔷டாஃபே நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான மல்லிகா ஸ்ரீநிவாசன் பொதுத் துறை நிறுவனங்கள் தோ்வு வாரியத்தின் (பிஇஎஸ்பி) தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

🔷தனியாா் துறையைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் பிஇஎஸ்பி வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறை.

🔷இவரது நியமனத்துக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதலை வழங்கியுள்ளது. இவா் அப்பதவியில் மூன்றாண்டு காலத்துக்கு இருப்பாா் என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

🔷மேலும் பிஇஎஸ்பி வாரிய உறுப்பினராக ஐஏஎஸ் அதிகாரியான சைலேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

🔷இவா் தற்போது, பொது நிறுவன துறையின் செயலராக உள்ளாா். இந்த வாரியத்தில் எம்.கே.குப்தா மற்றும் ரியல் அட்மிரல் சேகா் மிட்டல் (ஓய்வு) ஆகியோா் ஏற்கனவே உறுப்பினா்களாக உள்ளனா்.

🔷பிஇஎஸ்பி வாரியம் ஒரு தலைவா் மற்றும் மூன்று முழு நேர உறுப்பினா்களை உள்ளடக்கிய அமைப்பாகும்.

விருதுகள்

சரஸ்வதி சம்மான் விருது 2020 !!

🔷புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர் டாக்டர் சரண்குமார் லிம்பாலே 2020 ஆம் ஆண்டிற்கான ”சரஸ்வதி சம்மான்” என்ற விருதினைப் பெற உள்ளார்.

🔷இந்த விருது அவருடைய Sanatan எனும் புத்தகத்திற்காக வழங்கப்பட உள்ளது.

🔷இந்த விருது ரூ.15 லட்ச ஒரு சான்றிதழ், கவுரவ மாலை (Plaque) ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த விருது நாட்டின் மிகவும் மதிப்பு மிக்க மற்றும் உயரிய இலக்கிய விருதாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு விருதாகும்.

🔷1991 ஆம் ஆண்டில் KK பிர்லா அறக்கட்டளையால் தொடங்கப்பட்டதாகும்.

🔷டாக்டர் லிம்பாலேவின் புத்தகம் 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

🔷பட்டியல் இனத்தவர்களின் போராட்டங்கள் குறித்த ஒரு முக்கிய சமூக மற்றும் வரலாற்று ஆவணமாகும்.

ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

இந்தியா-மொரீஷியஸ் ஒப்பந்தம் !!

🔷இந்தியா-மொரீஷியஸ் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தம் (India-Mauritius Comprehensive Economic Cooperation and Partnership Agreemen) இன்று (1 ஏப்ரல் 2021) முதல் நடைமுறைக்கு வருகிறது .

🔷22 பிப்ரவரி 2021 அன்று செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தமானது, ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள ஒரு நாட்டோடு இந்தியா கையெழுத்திட்ட முதல் வர்த்தக ஒப்பந்தமாகும்.


Share Tweet Send
0 Comments
Loading...