தினசரி நடப்பு நிகழ்வுகள் 1.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 1.3.2021 (Daily Current Affairs)

இந்தியா

கோவாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இரண்டாவது ரயில்பாதைத் திட்டம் !!

⭐கோவாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்  இரண்டாவது ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்கு 140 எக்டேர் காடுகளை ஒப்படைக்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

⭐கர்நாடகத்தின் கேசில்ராக், கோவாவின் மர்கோவா நிலைங்யங்களுக்கு இடையே 60 கிலோமீட்டர் தொலைவுக்கு இரண்டாவது ரயில்பாதை அமைக்கும் திட்டத்தில் மகாவீரர் வனவிலங்கு காப்பகம், மொல்லம் தேசியப் பூங்கா ஆகியன பாதிப்புக்குள்ளாகும் என்பதால் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

⭐140 எக்டேர் காப்புக்காடுகளை ரயில்வே துறைக்கு ஒப்படைக்க, அதற்குச் சமமான தொகையைக் காடுவளர்ப்புக்கு வழங்க வேண்டும் என்னும் நிபந்தனையுடன் இத்திட்டத்துக்கு மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களவை - மாநிலங்களவை தொலைக்காட்சிகள் இணைந்து புதிய சேனல் !!

⭐மக்களவை தொலைக்காட்சி மற்றும் மாநிலங்களவை தொலைக்காட்சி இரண்டும் இணைந்து சன்சத் தொலைக்காட்சி என்ற புதிய சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.

⭐இந்த தொலைக்காட்சி சேனலுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவி கபூர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

⭐மக்களவை செயல்படும் போது அதன் நேரலையை மக்களவைத் தொலைக்காட்சியிம், மாநிலங்களவையின் நடவடிக்கைகளை மாநிலங்களவைத் தொலைக்காட்சியும் வழக்கம் போல ஒளிபரப்பும்.

⭐அதே வேளையில், இரு அவைகளுன் கூட்டு நடவடிக்கை மற்றும் அவை நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில், இரண்டு தொலைக்காட்சிகளிலும் ஒரே நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். மக்களவையில் ஒரு நிகழ்ச்சி ஹிந்தியிலும், மாநிலங்களவையில் அதே நிகழ்ச்சி ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுளள்து.

அறிவியல் தொழில்நுட்பம்

ரஷ்ய மொழி பொறிக்கப்பட்ட டைட்டானியம் பந்து கண்டுபிடிப்பு !!

⭐கரீபியன் தீவில் ,பஹாமாஸ் நாட்டில் உள்ள ஒரு கடற்கரையில் 41 கிலோகிராம் எடையுள்ள ஒரு மர்மமான டைட்டானியம் பந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

⭐இந்த பந்தில் ரஷ்ய எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய மொழி பொறிக்கப்பட்ட 41 கிலோ எடையுள்ள அடையாளம் தெரியாத டைட்டானியம் பந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

⭐மேலும் இந்த பந்து விண்கலத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சாதனைகள்

இன்ஸ்டகிராமில் 100 மில்லியன் ரசிகர்கள் : விராட் கோலி சாதனை !!

பிரபல கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, நெய்மர், மெஸ்ஸி, ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன், அமெரிக்கப் பாடகி பியான்சே, பாடகியும் நடிகையுமான அரியனா கிராண்ட் ஆகியோரை இன்ஸ்டகிராம் தளத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.

இந்நிலையில் இன்ஸ்டகிராமில் 100 மில்லியன் (10 கோடி) ரசிகர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்கிற பெருமை விராட் கோலிக்குத் தற்போது கிடைத்துள்ளது.

கிளிமஞ்சாரோவில் ஏறி ஆந்திர சிறுமி சாதனை !!

⭐ஆப்ரிக்காவின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறி, ஆந்திராவைச் சேர்ந்த, 9 வயது சிறுமி, ரித்விகா ஸ்ரீ சாதனை படைத்துள்ளார்.

⭐அந்த சிறுமி, ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலைச் சிகரத்தில் ஏறி, சாதனை படைத்துள்ளார். இது, ஆப்ரிக்க கண்டத்தின் மிக உயரமான மலைச் சிகரம்.

⭐கடல் மட்டத்தில் இருந்து, 5,681 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலையின் கில்மன் சிகரத்தை, அவர் அடைந்துள்ளார்.

⭐கிளிமஞ்சாரோ மலைச் சிகரத்தில், இவ்வளவு இளம் வயதில் ஏறிய, உலகின் இரண்டாவது நபர், ஆசியாவின் முதல் நபர் என்ற பெருமையையும் ரித்விகா ஸ்ரீ பெற்றுள்ளார்.

விருதுகள்

கோல்டன் குளோப் விருது 2021 !!

⭐அமெரிக்காவில், 'ஹாலிவுட் பாரின் பிரெஸ் அசோசியேஷன்' என்ற தன்னார்வ அமைப்பு, ஆண்டுதோறும், சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு 'கோல்டன் குளோப்' விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.

⭐கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டிற்கான 'கோல்டன் குளோப்' விருது வழங்கும் விழா, நேற்று முன்தினம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. இதில், சிறந்த திரைப்பட, 'டிராமா'வுக்கான கோல்டன் குளோப் விருது, நொமட்லேண்ட் திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டது.

⭐சிறந்த இயக்குனருக்கான விருதையும், இதே படத்தின் இயக்குனர் சோலி ஜாவோ, தட்டிச்சென்றார்.இதில், சிறந்த நடிகருக்கான விருது, மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம் படத்தில் நடித்த, மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேனிற்கு அறிவிக்கப்பட்டது.

⭐இசை மற்றும் நகைச்சுவை பிரிவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது, போரத் சப்ஸிகுவன்ட் மூவி பில்ம் படத்திற்கு வழங்கப்பட்டது. இந்த படத்தில் நடித்த சச்சா பரோன் கோஹனுக்கு, சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

⭐சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதையும்; சிறந்த பின்னணி இசைக்கான விருதையும், 'சோல்' திரைப்படம் வென்றது.

நியமனங்கள்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு புதிய நிா்வாக இயக்குநா் பொறுப்பேற்பு !!

⭐பொதுத் துறையைச் சோ்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய நிா்வாக இயக்குநராக மாடம் வெங்கட ராவ் பொறுப்பேற்றுள்ளாா்.

⭐சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக மாடம் வெங்கட ராவ் 2021 மாா்ச் 1-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா்.

⭐இவா் அந்தப் பதவியில் 3-ஆண்டுகளுக்கு நீடிப்பாா் என சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

⭐ராவ் இதற்கு முன்பு கனரா வங்கியின் செயல் இயக்குநராக பணியாற்றியவா்.

ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதராக மன்பிரீத் வோரா நியமனம் !!

⭐ஆஸ்திரேலிய நாட்டுக்கான இந்தியத் தூதராக மூத்த ஐஎஃப்எஸ் அதிகாரி மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா்.

⭐1988-ஆம் ஆண்டு பிரிவு ஐஎஃப்எஸ் அதிகாரியான வோரா, இப்போது மெக்ஸிகோவுக்கான தூதராக உள்ளாா்.

⭐இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நட்புறவு சமீப காலத்தில் சிறப்பான நிலையை எட்டியுள்ளது. முக்கியமாக, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.

⭐அண்மையில் லடாக் எல்லைப் பிரச்சனையில் இந்தியாவுக்கு ஆதரவாகவும் சீனாவுக்கு எதிராகவும் ஆஸ்திரேலியா கருத்து தெரிவித்தது. முக்கியமாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சா் மாரிஸ் பெய்ன் இது தொடா்பாக பேசியது சா்வதேச அளவில் கவன ஈா்ப்பைப் பெற்றது.


Share Tweet Send
0 Comments
Loading...