தினசரி நடப்பு நிகழ்வுகள் 16.9.2021 ( Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள்  16.9.2021 ( Daily Current Affairs)

புத்தகம்

2022ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனைகள் அடங்கிய புத்தகம் வெளியீடு..!

🔷2022ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனைகள் அடங்கிய புத்தகம் வெளியடப்பட்டுள்ளது. கால்கள் இல்லாமல் பிறந்த அமெரிக்காவின் Zion Clark, 4.78 விநாடிகளில் 20 மீட்டர் தூரத்தை தன் இரு கைகளால் கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

🔷Ivory Coast-ஐ சேர்ந்த Laetitia Ky தன் நீண்ட கூந்தலை ஸ்கிப்பிங் கயிராக பயன்படுத்தி 30 வினாடிகளில் 60 ஸ்கிப்பிங் செய்து இடம்பிடித்துள்ளார்.

🔷உலகின் மிக குள்ளமான பாடி பில்டராக 102 சென்டி மீட்டர் உயரமுடைய இந்தியாவைச் சேர்ந்த PRATIK MOHITE-வும், மிக உயரமான ஆண் பாடி பில்டராக 218.3 சென்டி மீட்டர் உயரமுடைய நெதர்லாந்தைச் சேர்ந்த OLIVIER RICHTERS-ம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

விளையாட்டு

1500 மீ. ஓட்டத்தில் 19 வருட சாதனையை முறியடித்த இளம் வீராங்கனை..!!

🔷19 வருட சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார் பஞ்சாப்பைச் சேர்ந்த 23 வயது ஹர்மிலன் கெளர் பெயின்ஸ்.

🔷தெலங்கானாவின் வாரங்கலில் நடைபெற்ற 60 ஆவது தேசிய ஓபன் தடகள போட்டியில் 1500 மீ. ஓட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார் ஹர்மிலன் கெளர் பெயின்ஸ். 4 நிமிடம் 05.39 நொடிகளில் தூரத்தைக் கடந்த புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

🔷இதற்கு முன்பு 2002 ஆசிய விளையாட்டுப் போட்டியில் சுனிதா ராணி 4:06.03 நிமிடங்களில் 1500 மீ. தூரத்தைக் கடந்ததே சாதனையாக இருந்தது. அந்த 19 வருடச் சாதனையை முறியடித்துள்ளார் ஹர்மிலன்.

🔷ஜனவரி 2020 முதல், தேசிய அளவிலான 8 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று புதிய நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் ஹர்மிலன் கெளர்.

உலகம்

2022 -ல் இந்தியா உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டும்..!!

🔷அடுத்த ஆண்டில், இந்தியா, உலகிலேயே மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டும் என அமெரிக்க வர்த்தக வளர்ச்சி அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷இந்தியா 6.7 சதவிகித வளர்ச்சியை எட்டும் எனவும், அதற்கு அடுத்ததாக 5.7 சதவிகித வளர்ச்சியுடன் சீனா இரண்டாவது இடத்தை பிடிக்கும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🔷ஆனால் நடப்பு 2021 இல் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3 ஆகவும், அதற்கு அடுத்த இடத்தில் 7.2 சதவிகித ஜிடிபி வளர்ச்சியுடன் இந்தியா 2 ஆவது இடத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷2021 இல் உலக நாடுகளின் சராசரி பொருளாதார வளர்ச்சி 5.3 சதவிகிதமாக இருக்கும் எனவும், கடந்த 50 ஆண்டுகளில் இதுவே மிகவும் விரைவான வளர்ச்சி என்றும் அமெரிக்க வர்த்தக வளர்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய குழு

தேசிய மாணவர் படையை மேம்படுத்த மத்திய அரசு அமைத்த குழுவில் மகேந்திர சிங் தோனி..!!

🔷தேசிய மாணவர் படையை மேம்படுத்த அமைக்கப்பட்ட 15 பேர் கொண்ட குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பெற்றுள்ளார்.

🔷தேசிய மாணவர் படையை மேம்படுத்த 15 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், முன்னாள் எம்பி பைஜயந்த் பாண்டா உயர்மட்ட ஆய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷இந்த குழுவில் உறுப்பினர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் முன்னாள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டு உயர்வு..!!

🔷தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்சவரம்பு 30 ஆண்டுகளில் இருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

🔷மனிதவள மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால், வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டு 32 வயதாக உயர்த்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

🔷இந்த அளவுக்கும் குறைவான, அதிகமான வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கும் உச்ச வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்குத் தற்போது நடைமுறையில் உள்ள வயது உச்சவரம்பு மாற்றமின்றித் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...