தினசரி நடப்பு நிகழ்வுகள் 7.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 7.9.2021 (Daily Current Affairs)

விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா..!

💠இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

💠ஓவல் மைதானத்தில் நடந்த 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொத்தமாக 4 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டி டிரா ஆனது. இதன் மூலம் இந்திய அணி 54.17 சதவீத வெற்றி விகிதம் மற்றும் 26 புள்ளிகளுடன், பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

💠50 சதவீத வெற்றி விகிதத்துடன் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 ஆவது மற்றும் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளன.

உலகம்

பூமிக்கு அருகே வந்த 1000 ஆவது குறுங்கோளை கண்டுபிடித்தது நாசா..!!

💠பூமிக்கு அருகே வரும் ஆயிரமாவது குறுங்கோளை நாசா கண்டுபிடித்துள்ளது. 2021 PJ1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குறுங்கோள் பூமியில் இருந்து சுமார் 17 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில், கடந்து சென்றதாக நாசா தெரிவித்துள்ளது.

💠இந்த குறுங்கோள் மிகவும் சிறியது என்பதால் ரேடார்களில் அது பதிவாகவில்லை. எனவே அதன் படமும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 1 புள்ளி 4 கிலோ மீட்டர் அகலமுள்ள குறுங்கோளை நாசா கண்டுபிடித்தது.

💠அது மணிக்கு சுமார் 94 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை கடந்து சென்றது. நாசா கண்டுபிடித்த சில குறுங்கோள்கள், 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் டினோசர்களை அழித்தது போன்று பூமிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் அளவிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம்

உலகில் முதன்முதலாக எல் சால்வடார் நாட்டில் கரன்சியாக பிட்காயினுக்கு அங்கீகாரம்..!!

💠உலகில் முதன்முதலாக எல் சால்வடாரில் அரசின் அங்கீகரிக்கப்பட்ட கரன்சியாக பிட்காயின் அறிவிக்கப்பட்டுள்ளது.

💠பிட்காயின்கள் அறிமுகமாகி 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், முதன் முதலாக ஒரு நாட்டில் அது கரன்சியாக ஏற்கப்பட்டுள்ளது.

💠அமெரிக்க டாலர் புழக்கத்தில் உள்ள எல் சால்வடாரில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பிட்காயினை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால் என்ன விதமான நன்மைகள் அந்த நாட்டுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

💠முதல்கட்டமாக எல் சால்வடார் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள 400 பிட்காயின்களை வாங்கி புழக்கத்தில் விட முடிவு செய்து தற்போது 200 பிட்காயின்களை வாங்கி உள்ளது. எல் சால்வடாரில் 200 பிட்காயின் ஏடிஎம்களும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு பிட்காயின்களை அமெரிக்க டாலராக மாற்றிக் கொள்ளலாம்.

செயற்கைக்கோள் / ஏவுகணை

சுற்றுச்சூழல் கண்காணிப்பு செயற்கைக் கோளை வெற்றிகரமாக ஏவியது சீனா..!!

💠புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது. வளிமண்டலம், நீர் மற்றும் நிலப்பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க Gaofen-5 02 எனப்படும் ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் வகை செயற்கைக் கோளை சீனா ஏவியது.

💠லாங் மார்ச் 4 சி விண்கலம் மூலம் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது.

💠முப்பரிமாண முறையை விட அதிநவீனமாகப் படம் பிடிக்கும் ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் செயற்கைக் கோள் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீனா அறிவித்துள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...