தினசரி நடப்பு நிகழ்வுகள் 19.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 19.8.2021 (Daily Current Affairs)

தமிழ்நாடு

நான்கு விரல்களால் ஒரு நிமிடத்தில் 100 தண்டால் - கின்னஸ் சாதனை..!!

💠மதுரையை சேர்ந்த 12 வகுப்பு மாணவன் நான்கு விரல்களால் ஒரு நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

💠முல்லை நகரை சேர்ந்த ஷரீஸ்பாபு அங்குள்ள தனபால் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 17 வயதான இவர் நான்கு விரல்களால் ஒரு நிமிடத்தில் 100 தண்டால் எடுத்தார்.

💠இதற்கு முன் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நபர் நான்கு விரல்களால் 1 நிமிடத்தில் 85 தண்டால் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது.

இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்த 2 ஆம் வகுப்பு மாணவன்..!!

💠தேனி பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் பிரதீஷ், 4 நிமிடம் 12 வினாடிகளில் 198 நாடுகளின் பெயர்கள், அதன் தலைநகரங்களை கூறியதுடன், அந்நாட்டு கொடிகளையும் அடையாளம் காட்டி இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு 2021இல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளான்.

விளையாட்டு

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் சின்னம் அறிமுகம்..!!

💠ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் சின்னம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

💠சுமார் 23 மீட்டர் அகலமும், 17 மீட்டர் நீளமும் கொண்ட இந்த சின்னம், ஓடைபா மரைன் பூங்காவிற்கு முன்பு, 3 இழுவைப் படகுகள் மூலம் இழுத்து வரப்பட்டது. இரவில் ஒளிரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பாரா ஒலிம்பிக் சின்னம், போட்டிகள் முடியும் வரை ரெயின்போ பாலம் அருகே காட்சிக்கு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

💠பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியா

கர்நாடகாவில் ஒரு நாள் கைதி திட்டம் அறிமுகம்..!!

💠சிறை கைதிகளின் வாழ்க்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு நாள் கைதி திட்டம் கர்நாடகாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

💠பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில், 500 ரூபாய் கொடுத்தால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

💠இங்கு வருபவர்களுக்கு கைதியின் சீருடை, கைதி எண், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, கைதிகள் செய்யும் வேலைகள் ஆகியவை வழங்கப்படும். அவர்களும் கைதிகள் போலவே நடத்தப்படுவதோடு, எந்த சலுகைகையும் அளிக்கப்படாது.


Share Tweet Send
0 Comments
Loading...