கண்டுபிடிப்பு
கீழடியில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் சுவர் கண்டுபிடிப்பு..!
🔷கீழடி அருகே அமைந்துள்ள அகரத்தில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் கொண்ட சுவர் கண்டறியப்பட்டுள்ளது.
🔷அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
🔷கீழடியை தொடர்ந்து அகரத்தில் முதல் முறையாக மூன்று வரிசை கொண்ட சுடுமண் செங்கல் சுவர் கண்டறியப்பட்டுள்ளது.
🔷இது கீழடியில் கிடைத்த செங்கல் நீளம், அகலம் கொண்டதாக இருந்தது. ஆனால் அகரத்தில் செங்கற்கள் சதுர வடிவில் உள்ளன. மூன்று வரிசையாக செங்கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்து கட்டிடம் கட்டியுள்ளனர். பிடிமானத்திற்காக களிமண் பயன்படுத்தி இருப்பதாக ஆராய்ச்சியளர்கள் கூறுகின்றனர்.
🔷அகரத்தில் இதுவரை 4 அடி ஆழத்திற்கு மட்டும் அகழாய்வு பணிகள் நடந்துள்ள நிலையில் தற்போது சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு சுவர் கிடைத்துள்ளது. இதன் மூலம் பழந்தமிழர்களின் நாகரிக வாழ்க்கை தமிழர்களின் வரலாற்றை மேலும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.
உலகம்
வியாழன் கோளின் நிலவில் ஆய்வு - ஸ்பேஸ்-எக்ஸுடன் நாசா ஒப்பந்தம்..!!
🔷வியாழன் கோளின் 80 நிலவுகளில் ஒன்றான யூரோப்பாவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அந்த நாட்டின் தனியாா் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
🔷உயிரினங்கள் வசிப்பதற்கு யூரேப்பா ஏற்றதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அந்த நிலவுக்கு ஆய்வுக் கலனை வரும் 2024 செலுத்துவதற்கான இந்தத் திட்டத்தில், ஸ்பேஸ்-எக்ஸின் ஃபால்கன் கனரக ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது.
🔷23 அடுக்குகளைக் கொண்ட, ஓரளவு மீண்டும் பயன்படுத்தத்தக்க ஃபால்கன்தான் உலகில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் என்று கூறப்படுகிறது.
இந்தியா
நாட்டிலேயே முதல் மாநிலம் - திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கிய கர்நாடக அரசு..!!
🔷அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை கர்நாடகா பெற்றுள்ளது.
🔷கர்நாடகாவில் மாநில சிறப்பு ரிசர்வ் கான்ஸ்டபிள் படையில் திருநங்கையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக சங்கமா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டது. அதன்படி, அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
🔷அதில், கர்நாடக சிவில் சர்வீஸ் விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. அதாவது, கடந்த ஜுலை 6 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அனைத்து அரசு வேலைகளிலும் பொதுப் பிரிவு மற்றும் இதர பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு ஒரு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியது.
🔷மேலும், அரசு விண்ணப்பங்களில் பாலினம் தொடர்பான கேள்வியில் ஆண், பெண் மற்றும் மற்றவர்கள் என்னும் பிரிவையும் சேர்க்க அந்த அரசாணையில் உத்தரவிடப்பட்டிருந்தது. திருநங்கைகள் யாரும் வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் அதே பிரிவில் இருக்கும் ஆண் அல்லது பெண்களுக்கு வழங்கப்படலாம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
🔷இது தொடர்பாகத் தனியாக வழக்கு தொடர்ந்தால், அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவது குறித்து பரிசிலினை செய்யப்படும் எனக் கூறி, கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு 2025 வரை நீடித்துள்ளது..!!
🔷பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்.டி. பட்டியல் மக்களில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு 2025 வரை நீட்டித்துள்ளது.
🔷இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2016 இல் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர் மற்றும் பெண்கள் கடன் வாங்குபவர்களுக்கு கடன் வழங்குவதற்காக தொடங்கினார்.
🔷ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்திற்கான கடன் தொகை திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளால் (எஸ்சிபி) 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை பெறலாம்.
விளையாட்டு
13 வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்று ஜப்பான் வீராங்கனை சாதனை..!!
🔷டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்கேட்போர்டிங் மகளிர் பிரிவில் ஜப்பானின் இளம் வீராங்கனை மோமிஜி நிஷியா தங்கம் வென்று 13 வயதில் தங்கம் வென்ற சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.
🔷டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்கேட்போர்டிங் மகளிர் பிரிவில் ஜப்பானின் இளம் வீராங்கனை மோமிஜி நிஷியா தங்கம் வென்று 13 வயதில் தங்கம் வென்ற சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.
🔷மோமிஜி நிஷியாதான் சிறு வயதில் தங்கம் வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை. 13 வயதில் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றதே ஒரு உலக சாதனை, இதில் தங்கம் வென்று மேலும் சாதனை வரலாறு படைத்துள்ளதோடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
🔷ஜப்பானின் ஸ்கேட்போர்டிங் பிரிவில் முதல் தங்கப் பதக்கமாகும் இது. ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த மோமிஜி நிஷியா மற்றொரு 13 வயது வீராங்கனையான ராய்சா லீல் என்பவரை வென்றார்.
இந்தியாவுக்கு முதல் பதக்கம் வெள்ளி வென்றார் மீராபாய் சானு..!!
🔷டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். அவர் மகளிர் பளு தூக்கும் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
🔷டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பளு தூக்கும் போட்டி 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு இறுதிச் சுற்றில் 84 கிலோ, 87 கிலோ எடைகளை வெற்றிகரமாகத் தூக்கினார். 89 கிலோ எடையைத் தூக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை.
🔷அதேநேரத்தில் சீன வீராங்கனை ஹூ சிகு 94 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் வென்றார். அவர் ஒலிம்பிக்கில் புதிய சாதனையையும் படைத்துள்ளார். இரண்டாமிடம் பெற்ற இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கமாகும்.
🔷மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு 2017 ஆம் ஆண்டு உலகச் சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கங்கள் வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஹங்கேரியில் இளையோருக்கான உலகச் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக் தங்கப்பதக்கம் பெற்றார்..!!
🔷ஹங்கேரியில் இளையோருக்கான உலகச் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
🔷புடாபெஸ்ட் நகரில் 17 வயதுக்குட்பட்ட இளையோருக்கான உலகச் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது.
🔷இந்தப் போட்டியில் 73 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக், பெலாரஸ் வீராங்கனையைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கம் பெற்றார்.