தினசரி நடப்பு நிகழ்வுகள் 9.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 9.7.2021 (Daily Current Affairs)

இந்தியா

ஆயுதப் பரிசோதனைத் தளம் - வித்யா பாலன் பெயர்..!!

🔷இந்திய ராணுவமானது குல்மார்க்கிலுள்ள ஆயுதப் பரிசோதனைத் தளத்திற்கு இந்தியத் திரைப்பட நடிகை வித்யா பாலனுடைய பெயரைச் சூட்டியுள்ளது.

🔷சின்னத்திரையில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் 20 வருடங்களுக்கும் மேலாக இந்தியத் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.

🔷திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த ஆயுதப் பரிசோதனைத் தளத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றாா் ஜோதிராதித்ய சிந்தியா..!!

🔷ஜோதிராதித்ய சிந்தியா, விமானப் போக்குவரத்துத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றாா்.

🔷மத்திய பிரதேசத்தின் முக்கிய அரசியல் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸில் இருந்து விலகி கடந்த ஆண்டு மாா்ச்சில் பாஜகவில் இணைந்தாா். பின்னா், மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட்டு எம்.பி.யான அவா், கடந்த 7 ஆம் தேதி மத்திய அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்தாா்.

🔷அவருக்கு விமானப் போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்ட நிலையில், அத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

🔷விமானப் போக்குவரத்துத் துறையின் இணையமைச்சராக வி.கே.சிங் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நியமனங்கள்

இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் கார்செட்டி நியமனம்..!!

🔷இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் கார்செட்டியை நியமித்து அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

🔷செனட் சபை ஒப்புதல் அளித்ததும் கார்செட்டி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. லாஸ் ஏஞ்சலிஸ் நகர மேயராக இருக்கும் எரிக் கார்செட்டி, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்.

🔷பைடன் பதவியேற்கும் போது எரிக்கிற்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுக்கு நடுவே மக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறிய எரிக், மேயராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

🔷பருவநிலை மாற்றம் குறித்து இந்தியாவின் கருத்தை ஆமோதித்து வரும் கார்செட்டி, இனி வரும் காலங்களில் இந்தியாவுக்கு சாதகமான பல முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

🔷அமெரிக்கக் கடற்படையில் 8 ஆண்டுகள் பணியாற்றிய இவர், தூதராக நியமிக்கப்படும் நிலையில் லாஸ் ஏஞ்சலிசின் 100 ஆண்டுகால வரலாற்றில் மேயராக இருந்து ராஜினாமா செய்யும் முதல் நபராக எரிக் கார்செட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு வாழ்ந்த சுறாக்களின் பற்கள் கண்டுபிடிப்பு..!!

🔷அமெரிக்காவின் புளோரிடா மாகாண கடற்கரை பகுதியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சுறாவின் 4அங்குல பற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

🔷ஏற்கனவே 3 வாரங்களுக்கு முன்பு இதே பகுதியில் தான் இந்த வகை சுறாவின் 3 அங்குல சிறிய பற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

🔷இந்த பற்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம் சுறாக்களின் தன்மை மற்றும் வாழ்ந்த காலம் உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ள முடியும் என்று உயிரியல் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.


Share Tweet Send
0 Comments
Loading...