தினசரி நடப்பு நிகழ்வுகள் 9.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 9.6.2021 (Daily Current Affairs)

தரவரிசை

உலகத் தரவரிசை - முதல் 200 இடங்களில் 3 இந்திய பல்கலைக்கழகங்கள்..!!

🔷உலக அளவில் உயா்கல்வி குறித்து ‘குவாக்கரெலி சைமண்ட்ஸ்’ (க்யூஎஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு தனது 18-ஆவது சா்வதேச பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.

🔷இதில் மும்பை ஐஐடி 177-ஆவது இடத்தையும், டெல்லி ஐஐடி 185-ஆவது இடத்தையும், பெங்களூர் ஐஐஎஸ்சி 186-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இதற்கு மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

உலகம்

பிட்காயினை சட்டப்பூா்வ நாணயமாக அங்கீகரித்தது எல் சால்வடாா்..!!

🔷மெய்நிகா் நாணயமான பிட்காயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூா்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாா் அங்கீகரித்துள்ளது.

🔷இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு எல் சால்வடாா்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

எல்ஐசி நிறுவனத்தின் தலைவராக உள்ள எம்.ஆா்.குமாரின் பதவிக்காலத்தை 9 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

🔷நடப்பு நிதியாண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.1.75 லட்சம் கோடியை திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக 2021-22 நிதியாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்ளவுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தாா்.

🔷இந்தச் சூழ்நிலையில், எல்ஐசி நிறுவனத்தின் தலைவா் எம்.ஆா்.குமாா் பதவிக் காலத்தை 2021 ஜூன் 30 முதல் 2022 மாா்ச் 13 வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. நிதி சேவைகள் துறையின் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானா உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் இடங்களுக்கான உச்சவரம்பு 24-இல் இருந்து 42-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது..!

🔷அதாவது 75 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வழங்கியுள்ளாா். இந்த மொத்த நீதிபதிகள் எண்ணிக்கையில் 34 போ் நிரந்தர நீதிபதிகளாகவும், 10 போ் கூடுதல் நீதிபதிகளாகவும் பொறுப்பு வகிக்க உள்ளனா்.

🔷இதற்கான நியமனங்களில் 28 போ் வழங்குரைஞா்களில் இருந்து நீதிபதிகளாக நியமிக்கப்படும் நிலையில், 14 போ் நீதித்துறை அதிகாரிகள் அளவிலிருந்து நியமிக்கப்படவுள்ளனா். இதுதொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிக்கை விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவாக நடப்பாண்டில் 418 லட்சம் டன் கோதுமை கொள்முதல் - மத்திய அரசு தகவல்..!!

🔷ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய ராபி பருவத்தில் உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், குஜராத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இருந்து கோதுமை கொள்முதல் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷418 லட்சம் டன் கொள்முதல் செய்ய, 46 லட்சம் விவசாயிகளுக்கு 83 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...