தினசரி நடப்பு நிகழ்வுகள் 8.9.2021 ( Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 8.9.2021 ( Daily Current Affairs)

இந்தியா

உத்தரகண்ட் ஆளுநா் பேபி ராணி மௌரியா ராஜிநாமா..!!

💠உத்தரகண்ட் மாநில ஆளுநா் பேபி ராணி மௌரியா தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

💠உத்தரகண்ட் ஆளுநராக இருந்த கிருஷ்ணகாந்த் பாலின் பதவிக் காலம் கடந்த 2018 இல் முடிவுக்கு வந்ததை அடுத்த, புதிய ஆளுநராக பேபி ராணி மௌரியா அந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி பதவியேற்றாா்.

💠ஆளுநா் பதவியில் அவா் 3 ஆண்டுகளை கடந்த மாதம் நிறைவு செய்தாா். பதவிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், அவா் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

💠பாஜகவுடன் நீண்ட காலம் தொடா்பில் இருக்கும் பேபி ராணி மௌரியா, கடந்த 1995 முதல் 2000 வரை ஆக்ராவின் மேயராக இருந்தாா். அந்த நகரின் முதல் பெண் மேயா் என்ற பெருமையையும் பெற்றாா்.

💠கடந்த 2002 முதல் 2005 வரை தேசிய மகளிா் ஆணையத்தின் உறுப்பினராகவும் அவா் இருந்தாா்.

இந்தியா

பாராலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்திற்கு ரூ.6 கோடி பரிசு - ஒடிசா அரசு..!!

💠பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒடிசாவை சேர்ந்த பிரமோத் பகத்திற்கு 6 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

💠டோக்யோவில் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மின்டன் இறுதிப் போட்டியில் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார்.

💠முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஏற்கனவே அறிவித்தபடி, பிரமோத் பகத்திற்கு 6 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அத்துடன், குரூப் ஏ பிரிவில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய விமானப்படைக்கு 56 விமானங்களை வாங்க நடவடிக்கை..!!

💠இந்திய விமானப்படைக்கு 56 புதிய விமானங்களைக் கொள்முதல் செய்ய பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

💠16 புதிய ஏர்பஸ்களை தயார் நிலையில் ஸ்பெயின் நிறுவனத்திடம் வாங்கவும் இதர 40 ஏர்பஸ்களை உள்நாட்டில் தனியார் நிறுவன கூட்டுறவில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

💠இரண்டரை பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த கொள்முதல் மூலம் சரக்குகள் மற்றும் வீரர்களை ஏற்றிச் செல்ல பழைய விமானங்களுக்கு மாற்றாக புதிய விமானங்கள் வாங்கப்படுகின்றன.

💠40 புதிய விமானங்கள் டாட்டா அட்வான்ஸ் சிஸ்டம் நிறுவனத்தின் கூட்டுறவில் உள்நாட்டில் தயாரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரஷ்யா-இந்தியா இடையே ஒப்பந்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

💠புவி அறிவியல் துறையில் இந்தியா, ரஷ்யா இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

💠அதன்படி, இந்திய புவியியல் ஆய்வு நிறுவனமும், ரஷ்யாவின் ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி ராஸ்ஜியாலோஜியா நிறுவனமும் இணைந்து கனிம வள ஆராய்ச்சி, வான் புவி இயற்பியல் தரவுகளின் ஆய்வு, பிளாட்டினம் குழும கூறுகள் (பிஜிஇ) மற்றும் அரிய பூமிக் கூறுகளின் (ஆா்இஇ) ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்படும்.


Share Tweet Send
0 Comments
Loading...