தினசரி நடப்பு நிகழ்வுகள் 8.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 8.8.2021 (Daily Current Affairs)

விருதுகள்

Order of British Columbia விருது..!!

💠இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவர் அஜய் தில்வாரிக்கு கனடாவின் மதிப்பு மிக்க விருதான ‘Order of British Columbia’ என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.

💠திரு. தில்வாரி கனடாவின் மிகப்பெரிய வாகன உற்பத்திக் குழுமத்தின் (தில்வாரி குழுமம்) உரிமையாளர் ஆவார்.

💠இவர் தற்போது ‘Order of British Columbia’ விருதினைப் பெற்ற 16 சிறந்த நபர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

தமிழ்நாடு

கீழடி அருகே 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான உறைகிணறு கண்டுபிடிப்பு..!!

💠சிவகங்கை மாவட்டம், கீழடி அடுத்துள்ள அகரம் அகழாய்வு தளத்தில் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

💠கீழடி, அகரம் , மணலூர், கொந்தகை ஆகிய நான்கு இடங்களில் தொல்பழங்கால தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.

💠இந்நிலையில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய உறைகிணறு ஒன்று அகரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

விளையாட்டு

மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார்..!!

💠மல்யுத்தத்தில் ஆடவருக்கான 65 கிலோ பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா (27) வெண்கலப் பதக்கம் வென்றாா்.

💠முன்னதாக அரையிறுதியில் வீழ்ந்த பஜ்ரங் புனியா, வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் கஜகஸ்தானின் தௌலத் நியாஸ்பெகோவை வீழ்த்தினாா்.

💠டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு இது 2 ஆவது பதக்கமாகும். முன்னதாக, ரவி தாஹியா ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் வெள்ளி வென்ற நிலையில், தற்போது புனியா வெண்கலம் வென்றுள்ளாா். இருவருக்குமே இது முதல் ஒலிம்பிக் என்பது குறிப்பிடத்தக்கது.

💠ஏற்கெனவே, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா இதேபோல் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 2 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக உள்ளது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் சுஷீல் குமாா் வெள்ளியும், யோகேஷ்வா் தத் வெண்கலமும் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்தியா

இந்தியாவின் முதல் இதய செயலிழப்பு உயிரி வங்கி..!!

💠இந்தியாவின் முதல் இதய செயலிழப்பு உயிரி வங்கி, கேரள மாநிலத்தில் உள்ள ஶ்ரீ சித்ரா திருநல் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் துவங்கப்பட்டுள்ளது.

💠இரத்தம், சீரம், திறந்த இதய அறுவை சிகிச்சையின் போது பெறப்பட்ட திசு மாதிரிகள் மற்றும் புற இரத்த மோனோநியூக்ளியர் செல்கள் (பிபிஎம்சி) மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இதய செயலிழப்பு நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மரபணு டிஎன்ஏ ஆகியவை உயிரி மாதிரிகளில் சேமித்து வைக்கும் வசதி உள்ளது.

நெகிழி கலக்கப்பட்ட கைவினைக் காகிதம்..!!

💠காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையமானது (KIVC - Khadi and Village Industries Commission) தனது புதுமைமிக்க நெகிழி கலக்கப்பட்ட கைவினை காகிதத்திற்கான காப்புரிமையை பெற்றுள்ளது.

💠இந்த காகிதமானது REPLAN (REducing PLAstic from Nature - இயற்கையிலிருந்து நெகிழியை நீக்குதல்) என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

💠சுவச் பாரத் அபியான் திட்டத்திற்கான KVIC அமைப்பின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் இவ்வகையிலான முதல் திட்டமாகும்.

💠கைவினைக் காகிதம் உருவாக்கப்படும் போது நெகிழிப் பொருட்கள் சிதைக்கப்பட்டு, தரம் குறைக்கப்பட்டு, நீர்மமாக்கப்பட்டு காகிதக் கூழுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன.


Share Tweet Send
0 Comments
Loading...