தினசரி நடப்பு நிகழ்வுகள் 8.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 8.7.2021 (Daily Current Affairs)

இந்தியா

Spinal Muscular Atrophy எனும் அரியவகை மரபணு நோய்க்கு இந்தியாவிலேயே மருந்து அறிமுகம்..!!

🔷Spinal Muscular Atrophy எனும் அரியவகை மரபணு நோய்க்கான மருந்து இந்தியாவிலேயே அறிமுகம் செய்யப்படவுள்ளது.

🔷நாட்டில் இந்த மரபணு நோயால் பாதிக்கப்படும் பல குழந்தைகளுக்கும் உலகிலேயே மிகவும் விலை அதிகமானதாக அறியப்படும் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜோல்ஜென்ஸ்மா மருந்து அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டு செலுத்தப்பட்டு வந்தது.

🔷இந்த நிலையில், Spinal Muscular Atrophy என்றழைக்கப்படும் முதுகு தண்டு வட சிதைவுக்கு Roche நிறுவனம் கண்டுபிடித்துள்ள Risdiplam என்ற மருந்துக்கு அமெரிக்க மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. வரும் 10 ஆம் தேதி முதல், இந்திய சந்தையில் இந்த மருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அகில இந்திய வானொலியின் இயக்குநர் ஜெனரலாக என் வேணுதர் ரெட்டி பொறுப்பேற்றார்..!!

🔷இந்திய தகவல் சேவையான அகில இந்திய வானொலியின் இயக்குநர் ஜெனரலாக 1988 பேட்சின் IIS அதிகாரி என்.வேணுதர் ரெட்டி பொறுப்பேற்றார்.

🔷தற்போது அகில இந்திய வானொலியின் செய்தி சேவைகள் பிரிவின் முதன்மை DG யாக பணிபுரிந்து வரும் இவருக்கு அமைச்சரவையின் நியமனக் குழுவின் ஒப்புதலின் பேரில் AIR ரின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

🔷அகில இந்திய வானொலி, அதிகாரப்பூர்வமாக 1957 முதல் ஆகாஷ்வானி என்று அழைக்கப்படுகிறது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராக அனுராக் தாகூர் பொறுப்பேற்பு..!!

🔷மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராக அனுராக் தாகூர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

🔷தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அமித் காரே, அமைச்சருக்கு அவரது அறையில் வரவேற்பு அளித்தார். பல்வேறு ஊடகப் பிரிவுகள் மற்றும் பிரசார் பாரதியின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், அனைத்து ஊடகங்களின் தலைவர்களுடன் குழுவாக இணைந்து பணியாற்ற முயற்சிகள் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார்.

மின்சாரத்துக்கான தேவையில் புதிய உச்சம் - 200 ஜிகாவாட்டை தாண்டி சாதனை..!!

🔷தற்போது மின்சாரத்துக்கான தேவை 200 ஜிகாவாட்டை தாண்டியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத உச்சபட்ச அளவாகும் என மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

🔷பருவமழை தாமதத்தின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெப்ப நிலை அதிகரித்து வருவது எதிரொலியாக மின்சாரத்துக்கான தேவை 200.57 ஜிகாவாட்டை எட்டியது.

🔷இது, முன்னெப்போதும் காணப்படாத வரலாற்று உச்ச அளவாகும். அதேபோன்று, மின்சாரத்துக்கான தேவை 197.07 ஜிகாவாட் என்ற புதிய உச்ச அளவில் இருந்ததாக மத்திய மின் துறை அமைச்சகம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

உலகம்

சீனாவில் 250 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு தடை..!!

🔷சீனாவில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வானுயர கட்டிடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

🔷ஷென்ஜென் நகரில் 300 மீட்டர் உயரத்தில் 71 தளங்களைக் கொண்ட ஷென்ஜென் எலெக்ட்ரானிக்ஸ் குரூப் பிளாசா கடந்த மே மாதம் 18 ஆம் தேதி திடீரென குலுங்கியதையடுத்து அந்த கட்டிடம் மூடப்பட்டது.

🔷இந்நிலையில் பொது பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் 250 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு தடை விதிக்குமாறு உள்ளூர் அதிகாரிகளுக்கு சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.

🔷மேலும் 100 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள கட்டிடங்களின் கட்டுமானம் தீயணைப்பு மீட்பு திறனுக்கு உட்பட்டு இருக்கவேண்டும் எனவும், அந்நகரத்தின் கட்டுமான உயர வழிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம்

கடலில் மிதக்கும் கழிவுகளை அகற்றும் ரோபோ பிரான்சில் அறிமுகம்..!!

🔷பிரான்சில் கடலில் மிதக்கும் கழிவுகளை அகற்றும் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

🔷ஜெல்லிபிஷ்போட் (Jellyfishbot) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, கடலில் மிதக்கும் கழிவுகள், குப்பைகளை உள்ளிழுத்து, தனக்குள் இருக்கும் பை போன்ற அமைப்பில் சேகரிக்கிறது.

🔷பார்ப்பதற்கு சிறிய படகு போன்று இருக்கும் இந்த ரோபோ முற்றிலும் பேட்டரியால் இயங்கக்கூடியது. காசிஸ் (cassis) நகரிலுள்ள துறைமுகத்தில் மிதக்கும் கழிவுப்பொருட்களை ஜெல்லி பிஷ்போட் சுத்தம் செய்துவருகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...