தினசரி நடப்பு நிகழ்வுகள் 8.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 8.6.2021 (Daily Current Affairs)

நியமனங்கள்

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனூப் சந்திர பாண்டே (62) தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.

🔷முன்னதாக, தோ்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி ஓய்வுபெற்றதையடுத்து, சுஷீல் சந்திரா தலைமைத் தோ்தல் ஆணையராகப் பதவி உயா்வு பெற்றாா். இதனால் ஒரு தோ்தல் ஆணையா் பதவி காலியானது. அந்த இடத்துக்கு, தற்போது அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளாா்.

🔷வரும் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவருக்கு 65 வயது பூா்த்தியாகும் வரை அவா் தோ்தல் ஆணையராகப் பதவி வகிப்பாா். உத்தர பிரதேச தலைமைச் செயலா் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை அவா் வகித்துள்ளாா்.

உலகம்

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

🔷தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த Gosiame Thamara Sithole என்ற 37 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்திருந்த அவர் கடந்த 7ஆம் தேதி பிரசவத்திற்காக Pretoria நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

🔷அங்கு அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்தன. தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் 9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத டைனோசரின் எலும்புகூடு கண்டுபிடிப்பு..!!

🔷15 ஆண்டுகளுக்கு முன் குயின்ஸ்லாந்தில் மாடு மேய்ப்பவர்கள் சில ராட்சத எலும்புகளை பார்த்துள்ளனர். அவை டைனோசரின் எலும்புகள் என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்த அகழ்வாய்வில் ஆஸ்ட்ரலோடைடன் கூப்பெரென்சிஸ் (Australotitan cooperensis) என்றழைக்கப்படும் ராட்சத தாவர உண்ணி வகை டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

🔷இந்த டைனோசர் 90 அடி நீளமும், 20 அடி உயரமும் இருந்திருக்கக்கூடும் என அனுமானித்துள்ள விஞ்ஞானிகள் இதுவரை உலகளவில் கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய டைனோசர்களில் இதுவும் ஒன்று என்றனர்.

ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது..!

🔷ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. அதன் தலைமைப் பொறுப்பை வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியா ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூ 50,000 வழங்கும் திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு..!!

🔷30 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகள் இந்தியா மற்றும் அதன் பண்பாட்டை உலக அளவில் அறியும்படி இலக்கியப் படைப்புகளாக மாற்றுவதற்கு இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 75 இளம் படைப்பாளிகளுக்கு 6 மாத காலத்திற்கு மாதம் தோறும் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

🔷இதற்கு விண்ணப்பிக்க இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 75 இளம் எழுத்தாளர்கள் இத்திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

அஸ்ஸாம் அரசு ரைமோனா ரிசர்வ் வன பகுதியை ஆறாவது தேசிய பூங்காவாக அறிவித்தது..!!

🔷கோக்ராஜர் மாவட்டத்தில் உள்ள ரைமோனா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அசாமின் ஆறாவது தேசிய பூங்காவாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார்.

🔷வனத்தின் பகுதி பூட்டானின் எல்லையைத் தாண்டி போடோலாண்ட் பிராந்தியத்தின் (பி.டி.ஆர்) கீழ் வருகிறது. அசாமில் ஏற்கனவே ஐந்து தேசிய பூங்காக்கள் உள்ளன.

🔷இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோ இயற்கை உலக பாரம்பரிய தளம், யானை இருப்பு, புலி இருப்பு மற்றும் இந்தியாவின் அசாமில் உள்ள ஒரு உயிர்க்கோள இருப்பு ஆகும்.


Share Tweet Send
0 Comments
Loading...