தினசரி நடப்பு நிகழ்வுகள் 7.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 7.8.2021 (Daily Current Affairs)

விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி நிறைவு - அமெரிக்கா முதலிடம்..!!

💠டோக்கியோ ஒலிம்பிப் போட்டி வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 113 பதக்கங்களுடன் அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்றது..

💠டோக்கியோ தேசிய விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் கொடிகளுடன் அந்தந்த நாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்தியாவின் சார்பில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடியேந்திக் கலந்துகொண்டார். நிறைவுவிழாவில் நடைபெற்ற ஆட்டம் பாட்டம் சாகச நிகழ்ச்சிகள் கண்ணைக் கவர்ந்தன.

💠39 தங்கம் பெற்றுப் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றபோதும், ஐந்தாண்டுகளுக்கு முன் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கையைவிட இப்போது குறைவாகவே பெற்றுள்ளது. அதை நெருங்கும் வகையில் 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா இரண்டாமிடம் பெற்றது.

💠27 தங்கம் வென்ற ஜப்பான் மூன்றாமிடத்திலும், 22 தங்கம் வென்ற பிரிட்டன் நான்காமிடத்திலும் உள்ளன. 20 தங்கம் வென்ற ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி ஐந்தாமிடத்திலும், 17 தங்கம் வென்ற ஆஸ்திரேலியா ஆறாமிடத்திலும் உள்ளன. அதே நேரத்தில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்ற இந்தியா 48ஆவது இடம் பெற்றுள்ளது.

விருதுகள்

டிஜிட்டல் வங்கியில் புதுமைக்கான விருது..!!

💠டிஜிட்டல் வங்கி முறைகளில் புதுமைகளை புகுத்தியதற்கான “2021 ஆம் ஆண்டின் சிறந்த டிஜிட்டல் வங்கி புதுமைக்கான” விருது “டி.பி.எஸ் வங்கிக்கு” (DBS) வழங்கப்பட்டது.

💠பாதுகாப்பான அணுகல் மற்றும் தொலைதூர வேலை தீர்வுக்காக சைபர் பாதுகாப்பு பிரிவு ஆகிவற்றிற்காக “ஆசிய பசிபிக் விருதினையும்” வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

இந்தியா

7 பதக்கங்கள் - டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா சாதனை..!!

💠டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்கள் கிடைத்தன. இதையடுத்து ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய அணிக்கு அதிகப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

💠2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்திய அணி அதிகபட்சமாக 6 பதக்கங்களை வென்றது. அதற்கு அடுத்து நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்ஸில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 2 பதக்கங்களை மட்டுமே வென்றது.

💠இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அதிகபட்சமாக 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. 1 தங்கம் 2 வெள்ளி 4 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 47 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா

முதல் முறையாக லண்டன் மற்றும் பக்ரைனுக்கு ஏற்றுமதியாகும் டிராகன் பழம்..!!

💠முதல் முறையாக இந்தியாவில் இருந்து லண்டன் மற்றும் பக்ரைனுக்கு டிராகன் பழங்கள் (கமலம்) ஏற்றுமதி செய்யப்பட்டன.

💠லண்டன் நகருக்கு குஜராத்தின் கட்ச் பகுதியில் இருந்தும், பக்ரைன் பகுதிக்கு மேற்குவங்காளத்தின் மிட்னாபூர் பகுதியில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

💠டிராகன் பழத்தில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. இளஞ்சிவப்பு தோல் கொண்ட வெள்ளை சதை, இளஞ்சிவப்பு தோல் கொண்ட சிவப்பு சதை, மற்றும் மஞ்சள் தோல் கொண்ட வெள்ளை சதை ஆகும்.

💠இந்த பழம் பெரும்பாலும் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஆந்திரா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வளர்க்கப்படுகிறது.

இந்தியா

கோபால்பூர் துறைமுகத்திற்கு சென்ற முதல் இந்திய போர்க்கப்பல்..!!

💠கோபால்பூர் துறைமுகத்திற்கு சென்ற முதல் இந்திய போர்க்கப்பல் என்ற சிறப்பை “ஐ.என்.எஸ் கஞ்சர்” கப்பல் பெற்றுள்ளது.

💠ஐடிஎஸ் கஞ்சர் ஒடிசாவில் உள்ள பாரம்பரிய கடற்கரை துறைமுகமான கோபால்பூருக்கு அழைப்பு விடுத்த முதல் இந்திய கடற்படை கப்பலாகும்.

💠கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடல்சார் செயல்பாடுகள் குறித்து உள்ளூர் மக்களுடன் உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டது இந்த வருகை.

இந்தியா

ஏஜென்சி வங்கியாக செயல்பட அனுமதி பெற்றுள்ள இந்தஸ்இந்த் வங்கி..!!

💠இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான “இந்தஸ்இந்த் வங்கிக்கு” (IndusInd Bank) மத்திய ரிசர்வ வங்கி, “ஏஜென்சி வங்கி” என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

💠அரசாங்க வணிகங்கள் தொடர்பான பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக “ஏஜென்சி வங்கி” ஆக செயல்பட, ரிசர்வ் வங்கி இவ்வங்கிக்கு அனுமதி அளித்துள்ளது.

ஒப்பந்தம் புரிந்துணர்வு (MoU)

சர்வதேச சூரியக் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 5 ஆவது நாடு..!!

💠ஜெர்மனி சர்வதேச சூரிய கூட்டணி கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 5 ஆவது நாடு ஆனது.

💠இக்கூட்டமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் உருவாக்கப்பட்டது. இக்கூட்டமைப்பில் கையெழுத்திட்ட முதல் நாடு டென்மார்க் ஆகும்.

💠இந்தியாவுக்கான ஜெர்மனியின் தூதர் வால்டர் ஜே. சர்வதேச சூரிய கூட்டணி கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கையெழுத்திட்ட பிரதிகளை லிண்ட்னர் வெளியுறவுதுறை அமைச்சகத்துடன் டெபாசிட் செய்தார்.


Share Tweet Send
0 Comments
Loading...