விருதுகள்
2021 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த விமான நிறுவனம் விருது..!!
🔷விமானத் துறையில் மிகவும் மதிப்புமிக்க கௌரவங்களில் ஒன்றான ஏர் டிரான்ஸ்போர்ட் வேர்ல்ட்ஸ் (ATW) 2021 ஆண்டிற்கான விருதின் வெற்றியாளராக கொரிய ஏர் விமான நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
🔷முன்னறிவிப்பில்லாத நெருக்கடியால் உலகளாவிய தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டின் விருது கொரிய ஏர் நிறுவனத்திற்கு இன்னும் அர்த்தமுள்ளது.
🔷1974 இல் தொடங்கப்பட்டது, ATW இன் வருடாந்திர விமானத் தொழில் சாதனை விருதுகள் விமானத் துறையின் அகாடமி விருதுகளுடன் ஒப்பிடப்படுகின்றன.
🔷இந்த ஆண்டின் விருது வழங்கும் விழா அக்டோபர் 5, 2021 அன்று யு.எஸ்., பாஸ்டனில் (Boston) நடைபெறும்.
இந்தியா
நிபுண் பாரத் திட்டம்..!!
🔷நிபுண் பாரத் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தொடங்கி வைத்தார்.
🔷நாட்டில் 3 வயது முதல் 11 வயது வரையில் சுமார் 5 கோடி குழந்தைகள் உள்ளனர். இதை முன்னிட்டு, 2026-27 ஆம் ஆண்டுக்குள் மூன்றாம் வகுப்பை நிறைவு செய்வதற்குள் ஒவ்வொரு குழந்தையும் புரிதலுடனான எழுத்து வாசிப்பிலும், எண்ண றிவில் போதிய தகுதியைப் பெறுவதற்கும் ஏதுவான சூழலியலை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. இதை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மெய்நிகர் முறையில் தொடங்கி வைக்கிறார். இதில் அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
🔷இந்தத் திட்டம், அனைத்து மாநிலங்கள், யூனியன் தேசங்களில் தேசிய - மாநில - மாவட்ட - வட்டார - பள்ளிகள் ஆகிய 5 நிலைகளில் மத்திய அரசின் ‘சமக்ரா ஷிஷா (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
இந்தியப் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை10%-ஆக குறைத்தது ஃபிட்ச்..!!
🔷நடப்பு நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 10 சதவீதமாக குறைப்பதாக ஃபிட்ச் தெரிவித்துள்ளது.
🔷நடப்பு 2021-22 ஆம் நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளா்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என தற்போது குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய மதிப்பீட்டில் இது 12.8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
🔷2021 ஜூலை 5 நிலவரப்படி 137 கோடி மக்கள் தொகையில் 4.7 சதவீதத்தினருக்கு மட்டுமே முழுமையான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது, நிலையான பொருளாதார மீட்சிக்கான வாய்ப்புக்கு ஆபத்தானதாகவே பாா்க்கப்படுகிறது என ஃபிட்ச் தெரிவித்துள்ளது.
🔷2019-20 ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 4 சதவீத வளா்ச்சியை கண்டிருந்தது. இந்த நிலையில், கரோனா முதல் அலையின் தாக்கம் காரணமாக 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீத பின்னடைவை சந்தித்து குறிப்பிடத்தக்கது.
தரவரிசை
ஐசிசி டி20 கிரிகெட்டுக்கான பேட்டிங் தரவரிசை..!!
🔷ஐசிசி டி20 கிரிகெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 5ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளார். கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
🔷இங்கிலாந்து டேவிட் மலான் 888 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் (830), பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் (828), நியூசிலாந்தின் டெவான் கான்வே (774) ஆகியோர் உள்ளனர். இதைத் தொடர்ந்து, கோலி (762), ராகுல் (743) உள்ளனர்.
🔷இந்திய அணியிலிருந்து முதல் 10 இடங்களில் ராகுல் மற்றும் கோலி மட்டுமே இடம்பெற்றுள்ளனர். பந்துவீச்சில் ஒரு இந்தியர்கூட முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.
🔷ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே முதல் 5 இடங்களில் உள்ளனர். இருவரும் முறையே 2 மற்றும் 3ஆவது இடத்தில் உள்ளனர். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் முதலிடத்தில் உள்ளார்.
🔷பந்துவீச்சு தரவரிசையில் இந்திய அணியிலிருந்து ஜாஸ்பிரீத் பூம்ரா மட்டுமே முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளார். ஆல்-ரௌண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 9ஆவது இடத்தில் உள்ளார்.
🔷இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடிய கிறிஸ் வோக்ஸ் முதன்முறையாக 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.