நியமனங்கள்
ஜூன் 2021 முதல் ஜூன் 2024 வரை உலக வங்கி கல்வி ஆலோசகராக ரஞ்சித்சிங் டிசாலே நியமிக்கப்பட்டுள்ளார்.
🔷2020 ஆம் ஆண்டில் உலகளாவிய ஆசிரியர் விருது வழங்கப்பட்ட முதல் இந்தியர் இவர், இப்போது 2021 மார்ச் மாதம் உலக வங்கியால் தொடங்கப்பட்ட பயிற்சியாளர் திட்டத்தில் பணியாற்றவுள்ளார். திட்டத்தின் நோக்கம் ‘ஆசிரியர் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலம் கற்றலை விரைவுபடுத்த நாடுகளுக்கு உதவுதல்’.
🔷மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பரிதேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ஆரம்பத்தில் ஒரு பொறியியலாளராக விரும்பினார், ஆனால் பின்னர் ஆசிரியரின் பயிற்சித் திட்டத்தை மேற்கொண்டார்.
உலகம்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
🔷ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார். பிராந்திய அடிப்படையில் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும்.
🔷இந்த நிலையில் 2021-22 க்கான வாய்ப்பு ஆசிய -பசிபிக் குழுவிற்கு வழங்கப்பட்டது. அப்போது ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மாய் ரசூல் எதிர்த்துப் போட்டியிட்டார்.
🔷இதையடுத்து நடந்த தேர்தலில் அப்துல்லா ஷாகித்துக்கு 143 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஐநா சபையின் 76வது தலைவராக அப்துல்லா ஷாகித் பொறுப்பேற்கிறார்.
இந்தியா
லடாக்கின் லெப்டினன்ட் கவர்னர் ஆர்.கே.மாத்தூர் ‘யூன்டாப் (YounTab)’ என்ற திட்டத்தை தொடங்கினார் இதன் கீழ் 12,300 டேப்லெட்டுகள் யூனியன் பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும்.
🔷அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 12300 மாணவர்கள் பயனடைவார்கள்.
🔷டேப்லெட்டுகள் பாடநூல்கள், வீடியோ விரிவுரைகள் மற்றும் ஆன்லைன் வகுப்பு பயன்பாடுகள் உள்ளிட்ட ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் உள்ளடக்கத்துடன் முன்பே ஏற்றப்படும், டிஜிட்டல் கற்றலை ஊக்குவிப்பதும், இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத பகுதிகளுக்கு இடையில் டிஜிட்டல் பிளவுகளை ஏற்படுத்துவதும் யூன்டாப் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்.
இந்திய கடற்படைக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 3 இலகுரக ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு..!!
🔷இந்திய கடற்படைக்காக மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 3 இலகு ரக ஹெலிகாப்டர்கள் கடற்படையின் கிழக்கு பிராந்திய குழுமத்தில் சேர்க்கப்பட்டன.
🔷கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியில் அமர்த்தப்பட உள்ள இந்த ஹெலிகாப்டர்களில் கடல் பிராந்திய உளவுப்பணிக்காக சிறப்பு வாய்ந்த நவீன ரேடார் கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் இரவு மற்றும் பகலில் கடலில் தேடும் பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்புகளுடன் இந்த ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
வருமான வரி தாக்கல் - பயன்பாட்டுக்கு வந்தது புதிய வலைதளம்..!!
🔷நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்துவந்த வலைதளம் நீக்கப்பட்டு புதிதாக https://incometaxindia.gov.in என்ற வலைதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
🔷வருமான வரி கணக்கு தாக்கல் தொடா்பான அனைத்து சேவைகளையும் ஒற்றைச்சாளர முறையில் எளிமையாக கையாளும் வகையில், தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் ‘இணையவழி தாக்கல் 2.0’ என்ற பெயரில் இந்த புதிய வலைதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அறிமுகம் செய்துள்ளது.
🔷புதிய வலைதளம் வாயிலாகத் தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்குகள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு கணக்கு தாக்கல் செய்வோருக்கு தொகை விரைந்து கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளின் விவரங்களை புதிய வலைதளத்தின் வாயிலாக பயனாளா்கள் அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.