செயற்கைக்கோள் / ஏவுகணை
நிலவை 9 ஆயிரம் முறை சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலம்..!!
💠சந்திரயான் 2 விண்கலம் நிலவினை 9 ஆயிரம் முறை சுற்றி வந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
💠நிலவு தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் அனுப்பப்பட்டு 2 ஆண்டுகள் ஆனாலும் நிலவின் மேற்பரப்பில் சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்தில் ஆய்வு நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். அதன் செயல்பாடுகள் தங்களுக்கு ஊக்கமளிப்பதாகக் கூறிய அவர், சந்திரனில் தரையிறங்க சந்திரயான் 3 விண்கலம் தயாராகி வருவதாகவும் சிவன் தெரிவித்தார்.
💠கடந்த 2019 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.
நியமனங்கள்
இயல், இசை, நாடக மன்ற உறுப்பினா் செயலராக மு.இராமசுவாமி நியமனம்..!!
💠தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினா் செயலராக மு.இராமசுவாமி நியமிக்கப்பட்டுள்ளாா்.
💠தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற அமைப்பு விதிகளின் கீழ் தற்போது மன்றத்தின் உறுப்பினா் செயலராக உள்ள தி.சோமசுந்தரத்துக்குப் பதிலாக, முனைவா் மு.இராமசுவாமி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினா் செயலராக நியமிக்கப்படுகிறாா்.
💠ஆணை வெளியிடப்படும் நாள் முதல் மூன்றாண்டுகளுக்கு அவா் பதவியில் நீடிப்பாா் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாடுகள்
சர்வதேச அவைத் தலைவர்கள் மாநாடு..!!
💠ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச அவைத் தலைவர்கள் மாநாட்டில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
💠5 ஆவது சர்வதேச அவைத் தலைவர்கள் மாநாட்டை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடத்துகின்றது.
💠இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா தலைநகர் வியன்னாவிற்கு இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோர் சென்றுள்ளனர்.
விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 விக்கெட் வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா சாதனை..!!
💠இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா புது மைல்கல்லை எட்டி உள்ளார்.
💠இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் Ollie Pope விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதுவரை 24 ஆட்டங்களில் கலந்து கொண்டு 100 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தி உள்ளார்.
💠இதன்மூலம், குறைந்த இன்னிங்ஸில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக, கபில் தேவ் 25 ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது.