தினசரி நடப்பு நிகழ்வுகள் 6.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 6.6.2021 (Daily Current Affairs)

விருதுகள்

ஆண்டின் சிறந்த வணிகப் புத்தகத்திற்கான சர்வதேச விருது - 2021..!!

🔷நிதின் ராகேஷ் மற்றும் ஜெரீ விண்ட் ஆகிய எழுத்தாளர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான “ஆண்டின் சிறந்த வணிகப் புத்தகத்திற்கான” சர்வதேச விருதினை வென்றுள்ளனர்.

🔷நோஷன் பிரஸ் என்ற பதிப்பகத்தினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘Transformation in times of crisis’ எனும் புத்தகத்திற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

🔷ஆண்டின் சிறந்த தொழில்நுட்பப் புத்தாக்கத்திற்காக கோல்டு ஸ்டீவி விருது பெற்ற எழுத்தாளர் நிதின் ராகேஷ் அவர்கள், 2017 ஆம் ஆண்டு முதல் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான mphasis என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

🔷இப்புத்தகத்தின் இணை ஆசிரியர் ஜெர்ரி விண்ட் அவர்கள் சர்வதேச அளவில் ஒரு புகழ்பெற்ற கல்வியாளர் ஆவார்.

சர்வதேச டப்ளின் இலக்கிய விருது 2021..!!

🔷மெக்சிகோவைச் சேர்ந்த எழுத்தாளரான வலேரியா லூயிசெல்லி அவர்கள் “Last Children Archieve” எனும் படைப்பிற்காக 2021 ஆம் ஆண்டின் சர்வதேச டப்ளின் இலக்கிய விருது என்ற விருதினை வென்றுள்ளார்.

🔷1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த விருதானது உலகின் செல்வாக்கு மிக்க இலக்கிய விருதுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

🔷மேலும் இவர் இதே புத்தகத்திற்காக 2020 ஆம் ஆண்டில் ராத்போன்ஸ்ஃ போலியோ என்ற பரிசினை வென்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

செயற்கைக்கோள் / ஏவுகணை

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா விண்வெளி திட்டத்தில் கோவை பெண் ராக்கெட் ஒருங்கிணைப்புக்கு தலைமை..!!

🔷சந்திரனுக்கு மனிதர்களுடன் விண்கலத்தை அனுப்பும் நாசாவின் லட்சிய திட்டத்தில், கோவையை சேர்ந்த சுபாஷினி ஐயர் முக்கிய பங்காற்றி வருகின்றார்.

🔷அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, விரைவில் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ‘ஆர்ட்டெமிஸ்’ என்னும் லட்சிய திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. நாசாவின் இந்த திட்டத்தில் கோவையை சேர்ந்த பெண் பொறியாளர் சுபாஷினி ஐயர் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

🔷கோயம்புத்தூரில் பிறந்தவர் சுபாஷினி ஐயர். அங்குள்ள விஎல்பி ஜானகியம்மாள் கல்லூரியில் 1992ஆம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்றார். இந்த கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் பிரிவில் முதன் முறையாக பட்டம் பெற்ற பெண்களில் சுபாஷினியும் ஒருவர். இவர், கடந்த 2 ஆண்டுகளாக நாசாவில் பணியாற்றி வருகிறார்.

🔷சந்திரனுக்கு அனுப்பப்படும் விண்கலத்தின் முக்கிய பகுதிகளை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பணியில் இவர் தலைமை தாங்கி ஈடுபட்டுள்ளார். ஆர்ட்டெமிஸ் திட்டமானது, எஸ்எல்எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை சந்திரனின் சுற்றுப்பாதைக்கு அனுப்பவதாகும்.

விளையாட்டு

பார்முலா1 கார்பந்தயம் - மெக்சிகோ வீரர் செர்ஜியோ வெற்றி..!!

🔷மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் (ரெட்புல் அணி) 2 மணி 13 நிமிடம் 36.410 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.

🔷இந்த சீசனுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6-ஆவது சுற்றான அஜர்பைஜான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள பாகு ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.049 கிலோமீட்டர் இலக்கை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

🔷இதில் மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் (ரெட்புல் அணி) 2 மணி 13 நிமிடம் 36.410 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். பார்முலா1 கார்பந்தயத்தில் அவர் வசப்படுத்திய 2-ஆவது வெற்றி இதுவாகும். அவரை விட 1.385 வினாடி பின்தங்கிய செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) 2-வதாகவும், பியரே கேஸ்லி (பிரான்ஸ்) 3-வதாகவும் வந்தனர்.

🔷7 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தாலும் பிரேக் பிரச்சினையால் நேரம் விரயமானதால் 15-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு முன்னணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பெனின் (நெதர்லாந்து) கார் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதால் பாதியிலேயே வெளியேற நேரிட்டது.

🔷ஆனாலும் 6 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் வெர்ஸ்டப்பென் 105 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஹாமில்டன் 101 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், செர்ஜியோ பெரேஸ் 69 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனர். 7-ஆவது சுற்று போட்டி பிரான்சில் வருகிற 20-ந் தேதி நடக்கிறது.


Share Tweet Send
0 Comments
Loading...