தினசரி நடப்பு நிகழ்வுகள் 5.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 5.9.2021 (Daily Current Affairs)

இந்தியா

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள் - 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை..!!

💠டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

💠ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் முடிவடைந்து உள்ளன.

💠டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் 5 தங்கம் உள்பட 19 பதக்கங்கள் என்ற பிரம்மாண்ட சாதனையை இந்தியா படைத்தது

💠இதுவரை நடைபெற்ற பாரா லிம்பிக் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 15 பதக்கங்களை மட்டுமே பெற்றிருந்தது

💠நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று குவித்து உள்ளனர். 1968 முதல் 2016 வரைக்கும் பாராஒலிம்பிக்கில் இந்தியா 4 தங்கங்களுடன் 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தநிலையில், தற்போது இதுவரை இல்லாத வகையில், 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெங்கலம் உள்பட19 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

உலகம்

உலகம் முழுவதும் கண்டறியப்பட்ட 1,38,374 உயிரினங்களில் 28 விழுக்காடு அழியும் ஆபத்தில் உள்ளது..!!

💠உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 1,38,374 உயிரினங்களில் 28 விழுக்காடு உயிரினங்கள் அழிந்து போகும் ஆபத்தில் உள்ளதாக IUCN எனப்படும் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.

💠இதுதொடர்பான ஆய்வறிக்கையில், பல்வேறு கடல் பிராந்தியங்களில் டூனா எனப்படும் சூரை மீன்கள் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

💠சுறா மீன்கள் எண்ணிக்கை 37 விழுக்காடு குறைந்துள்ளதாகவும், கொமேடோ டிராகன்களும் பெருமளவு அழிவைச் சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

💠காலநிலை மாற்றம், வாழ்விடம் சுருங்குதல், போதிய உணவின்மையே உயிரினங்கள் அழிவுக்கு காரணம் என IUCN அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

389 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது..!!

💠ஆசிரியர் தினத்தை ஒட்டி, கடந்த கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த 389 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

💠அந்த விருதுகளை வழங்குவதன் அடையாளமாக தலைமை செயலகத்தில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு இந்த விருதை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

💠அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கணினிப் பயிற்றுநர் பணியிடத்திற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

💠இவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக, 3 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் நேரில் வழங்கினார்.

பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

💠தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

💠சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் இவை இரண்டும் தான் பெரியாரின் அடிப்படைக் கொள்கை என்றும், சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தன ஒழிப்பு ஆகிய இரண்டும் தான் அவரது இலக்குகளாக இருந்தன என்றும் குறிப்பிட்டார்.

💠அடக்கி ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மேன்மை அடைவதற்காக, சமூக நீதி கதவைத்திறந்து வைத்தது அவரது கைத்தடி என மு.க.ஸ்டாலின் கூறினார் நாடாளுமன்றத்தின் வாசலுக்கே செல்லாத பெரியாரால் தான், இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதன்முதலாக திருத்தப்பட்டது என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

💠பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் ஆண்டுதோறும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்த முதலமைச்சர், அனைத்து அரசு அலுவலகங்களிலும் செப்டம்பர் 17ஆம் நாள் உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம் என்றார்.


Share Tweet Send
0 Comments
Loading...