உலகம்
சர்வதேச செல்வாக்கு 70 சதவீதம் உயர்வு ஜோ பைடன், ஜான்சன் உள்ளிட்டோர் வரிசையில் மோடிக்கு முதலிடம்..!
💠பிரதமர் மோடியின் சர்வதேச செல்வாக்கு 70 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டில் இது 84 சதவீதமாக இருந்த போதும், தொடர்ந்து பல உலக நாடுகளின் 13 பெரிய தலைவர்களை விட மோடியின் செல்வாக்கு உயர்ந்தே காணப்படுவதாக Approval Rating ஆய்வு நடத்திய மார்னிங் கன்சல்ட் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
💠இந்த ஆய்வின்படி மோடி முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 5 ஆவது இடத்தில் உள்ளார்.
💠இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 8 ஆவது இடத்திலும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் 12 ஆவது இடத்திலும் உள்ளனர்.
கண்டுபிடிப்பு
ராஜஸ்தான் பாலைவனத்தில் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் காலடித் தடம் கண்டுபிடிப்பு..!!
💠ராஜஸ்தான் மாநிலத்தில் பாலைவனப் பகுதியில் டைனோசரின் காலடித் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
💠ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள தார் பாலைவனத்தில் பன்னெடுங்காலம் முன்பு மாபெரும் டைனோசர்கள் வாழ்ந்தது தெரியவந்துள்ளது.
💠யூப்ரான்டெஸ் சிஎஃப். ஜிகாண்டியஸ், யூப்ரோன்டெஸ் க்ளென்ரோசென்சிஸ் மற்றும் கிரல்லேட்டர் டெனுஸ் ஆகிய 3 இனங்களைச் சேர்ந்த டைனோசர்களின் காலடித் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
💠இதில் யூப்ரோன்டெஸ் 12 முதல் 15 மீட்டர் நீளமும் 500 கிலோ முதல் 700 கிலோ எடையும் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த உயிரினங்களின் தடங்கள் 200 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது.
விளையாட்டு
பாரா ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சுகாஸ் யதிராஜ் வெள்ளிப் பதக்கம்..!!
💠உத்தரப்பிரதேசத்தின் கவுதம் புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் சுகாஸ் யதிராஜ் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
💠பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் அவர் பிரெஞ்சு வீரர் லூக்காசை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் லூக்காஸ் வெற்றிபெற்றுத் தங்கப்பதக்கம் வென்றார்.
💠இரண்டாமிடம் பெற்ற இந்திய வீரர் சுகாஸ் யதிராஜ் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ள முதல் ஐஏஎஸ் அதிகாரி என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.
விளையாட்டு
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்..!!
💠டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
💠எஸ்எச்6 என்னும் பிரிவில் பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர், ஹாங்காங்கின் கை மான் சூ ஆகியோர் விளையாடினர்.
💠இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் வெற்றிபெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார். இதனால் இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
விளையாட்டு
பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் மனோஷ் சர்க்கார் வெண்கலம் வென்றார்..!!
💠பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் மனோஷ் சர்க்கார் வெண்கலம் வென்றார்.
💠ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16 ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் மனோஷ் சர்கார் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
💠வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஜப்பான் வீரர் டைசுகேவை வீழ்த்தினார். அரையிறுதியில் தோல்வி அடைந்த நிலையில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் மனோஷ் சர்க்கார் வென்றார்.
💠மனோஜ் சர்க்கார் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு இதுவரை 17 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
விளையாட்டு
பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்றார்..!!
💠டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
💠ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16 ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
💠இறுதிபோட்டியில் இங்கிலாந்து வீரர் டேனியலை பிரமோத் வீழ்த்தினார். ஒடிசாவை சேர்ந்த 33 வயதாகும் பிரமோத் பகத் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று தந்துள்ளார்.
💠டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள பதக்கங்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு
வ.உ.சிதம்பரனார் மறைந்த தினமான நவம்பர் 18 தியாக திருநாளாக அனுசரிக்கப்படும்..!!
💠கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மறைந்த நவம்பர் 18 ஆம் தேதி தியாக திருநாளாக அறிவித்து கொண்டாடப்படும். இந்த ஆண்டு, செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5, 2022 வரை, தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும் உருவாகும் அரசு கட்டிடங்களுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும்.
💠பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து பயனடையும் வகையில், போக்குவரத்து துறையின் சார்பில் பஸ் ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்து பள்ளி களுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும். தமிழ் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வ.உ.சிதம்பரனார் குறித்த இணையவழி கருத்தரங்கம் நடைபெறும்.
💠தமிழ் நிகர்நிலை கல்வி கழகத்தின் வாயிலாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்து பிரதிகள் ஆகியவை முழுவதும் இணையத்திலே மின்மயப்படுத்தி வெளியிடப்படும்.