விளையாட்டு
டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வங்காளதேசம் அணி வெற்றி..!
💠டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவை, முதல் முறையாக வங்காளதேச அணி வென்றது. டாக்காவில் நடந்த முதலாவது டி20 போட்டியில், முதலில் களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்தது.
💠அடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய வீரர்கள், வங்காளதேச அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
💠20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 108 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. வங்கதேச வீரர் Nasum Ahmed 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆன்ட்ராய்டு செயலி
இந்தியாவின் முதல் நிலநடுக்க முன்னெச்சரிக்கை செயலி அறிமுகம்..!!
💠இந்தியாவின் முதல் நிலநடுக்க முன்னெச்சரிக்கை செயலியை உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, டேராடூனில் அறிமுகப்படுத்தினாா்.
💠ரூா்கேலா ஐஐடி உருவாக்கியுள்ள இந்த செயலிக்கு ‘உத்தரகண்ட் பூகம்ப் அலா்ட்’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் அதிக அளவில் ஏற்பட்டு வருவதால் இந்த செயலியை மாநில மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் தாமி கேட்டுக் கொண்டாா்.
💠ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் என இரண்டு தளங்களிலும் இந்த செயலி கிடைக்கிறது. உத்தரகண்ட் மாநில பேரிடா் நிா்வாக ஆணையத்தின் நிதியுதவியுடன் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
💠நிலநடுக்கம் தொடா்பாக முன்னெச்சரிக்கை தகவல் அளிக்கும் செயலி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். நிலநடுக்கத்துக்குப் பிறகு மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தால் அதனைக் கண்டறியவும் இந்த செயலி உதவும்.
💠நிலநடுக்கம் லேசாக ஏற்படத் தொடங்கும்போதே அதனை உடனடியாக இந்த செயலி உணா்ந்து முன்னெச்சரிக்கை விடுக்கும். இதன் மூலம் நிலநடுக்கத்தின் வேகம் அதிகரிக்கும் முன்பு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியும் என்று இதனைத் தயாரித்துள்ள ரூா்கேலா ஐஐடி தெரிவித்துள்ளது.
💠இந்த செயலி ஏற்கெனவே உத்தரகண்ட் மாநிலத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையின்போது வெற்றிகரமாக முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பியது என்று தெரிவிக்கப்பட்டது.
உலகம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முதல்-மந்திரியாக அப்துல் காயிம் நியாசி தேர்வு..!!
💠பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முதல்-மந்திரியாக அப்துல் காயிம் நியாசி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
💠பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு அண்மையில் தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
💠இதன் மூலம் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முதல்முறையாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சி அமைக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதியான கூறிவரும் இந்தியா அங்கு நடந்த இந்த தேர்தலை நிராகரித்துள்ளது. இது பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மூடி மறைக்கும் ஒரு முயற்சி என சாடியது.
💠இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முதல்-மந்திரியாக அப்துல் காயிம் நியாசி என்பவரை பிரதமர் இம்ரான் கான் தேர்வு செய்துள்ளார்.
💠புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்கு பிறகு அப்துல் காயிம் நியாசியை இம்ரான் கான் தேர்வு செய்ததாக பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது.
சாதனைகள்
உலகிலேயே மிக உயரிய இடத்தில் சாலை - பொலிவியாவின் சாதனையை முறியடித்த இந்தியா..!!
💠பொலிவியாவில், 18,953 அடி உயரத்தில் உதுருஞ்சு எரிமலைக்கு செல்லும் சாலையே இதுவரை உலகின் உயரமான சாலை என்ற பெருமையை பெற்றிருந்தது. அதனை இந்தியா இப்போது முறியடித்துள்ளது.
💠கிழக்கு லடாக்கின் - உம்லிங்லா பாஸ் பகுதியில் 19,300 அடி உயரத்தில், சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 52 கி.மீ., நீளம் கொண்டது இந்த தார் சாலை. இதன்மூலம் உலகிலேயே மிக உயரமான சாலையை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
💠தற்போது அமைக்கப்பட்டுள்ள உம்லிங்லா பேருந்து சாலை லடாக்கின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும். இந்த சாலை கிழக்கு லடாக்கின் சுமர் செக்டாரில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கிறது.
💠லே பகுதியில் இருந்து சிசும்லே மற்றும் டெம்சோக் பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த 52 கி.மீ., சாலை புதிய வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இதனால் உள்ளூர் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த சாலையின் மூலம் சுற்றுலாவும், சமூக பொருளாதாரமும் உயரும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
💠இந்த பகுதியில் குளிர் காலங்களில் மைனஸ் 40 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சென்றுவிடும். இப்படியொரு சவாலான சூழலில் இந்திய எல்லை சாலைகள் அமைப்பு ஊழியர்கள் இந்த சாலையை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.