தமிழ்நாடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டெடுப்பு..!
🔷புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரத்திலுள்ள மலையடிப்பட்டி, மேலப்பனையூர், தேவர்மலை ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன் தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு பணி ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளனர்.
🔷புதுக்கோட்டை மாவட்டத்தில் 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலையான ஒருங்கிணைந்த ஆட்சி முறை மறையத் தொடங்கிய சூழலில் அதிக நிலம் படைத்தவர்கள் குறுநில மன்னர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள், தமது நிர்வாகத்துக்குட்பட்ட மக்களுக்கும், அவர்களின் உடைமைகளுக்கும், வெளியூரிலிருந்து வணிகம் செய்யும் வணிகர் மற்றும் வணிகப் பொருட்களுக்கும் உரிய பாதுகாப்பாளர்களை நியமித்தனர்.
🔷இத்தகைய, பாதுகாவல் பணியை அறிவிக்கும் ‘ஆசிரியம்’ கல்வெட்டுகள், திருமயம் வட்டம் தேவர்மலை, மேலப்பனையூர், மலையடிப்பட்டி ஆகிய இடங்களில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் ஊரையோ, கோயிலையோ நிர்வகிப்போரை அறிவிக்கும் ஆசிரியம் கல்வெட்டுகள் என்பதை அறிய முடிகிறது.
🔷மேலும், இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 67 கல்வெட்டுகளை எமது ஆய்வில் பட்டியலிட்டதில் 53இல் ஆசிரியம், 8இல் ஆஸ்ரீயம், 3இல் ஆசுரியம், 3இல் ஆஸ்ரயம் மற்றும் ஆச்ரயம் ஆகிய சொல்லாடல்கள் கையாளப்பட்டுள்ளன.
🔷எனவே, ஆசிரியம் என்ற தமிழ்ச்சொல் சங்கப்பாடல்களிலும் காணப்படுவதால், இதை சம்ஸ்கிருத சொல்லாடலாக மட்டுமே கருதுவது அனைத்து கல்வெட்டுகளுக்கும் பொருந்தாது.
இந்தியா
சதீஷ் அக்னிஹோத்ரி NHSRCL இன் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்று கொண்டார்..!!
🔷தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குநராக சதீஷ் அக்னிஹோத்ரி பொறுப்பேற்றுள்ளார்.
🔷மெகா ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் இருந்து வருகிறார்.
🔷ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் ‘A’ CPSE அட்டவணை 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.
நீர், பருவநிலை தகவமைப்பு மையம் ஐஐடியில் தொடக்கம்..!!
🔷ஜெர்மனி அரசு நிறுவனமான ஜெர்மன் அகாடமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸ் உதவியுடன் சென்னை ஐஐடியில் சர்வதேச நீர் மற்றும் பருவநிலை தகவமைப்பு மையம்தொடங்கப்பட்டுள்ளது.
🔷இதன் தொடக்க நிகழ்ச்சி இணையவழியில் நடைபெற்றது. ‘‘நீர்பாதுகாப்பு, பருவநிலை மாற்றம்ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு பல்வேறு புதிய வாய்ப்புகளை இந்த மையம் கொண்டுவரும்’’ என்றார் ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி.
விளையாட்டு
ஆஸ்திரியன் கிராண்ட்பிரி கார்பந்தயப் போட்டி - பெல்ஜியம் வீரர் மாக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம்..!!
🔷ஆஸ்திரியன் கிராண்ட்பிரி கார்பந்தயத்தில் பெல்ஜியம் வீரர் மாக்ஸ் வெர்ஸ்ட்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பீல்பெர்கில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்றனர்.
🔷306 கிலோ மீட்டர் இலக்கை ஒரு மணி 23 நிமிடம் 54 வினாடிகளில் கடந்து ரெட்புல் அணியின் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். உலக சாம்பியனான ஹாமில்டன் பின்தங்கியதால் 4 ஆவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.