தினசரி நடப்பு நிகழ்வுகள் 31.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 31.8.2021 (Daily Current Affairs)

விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் - வெண்கலம் வென்றாா் சிங்ராஜ் அதானா..!!

💠டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆடவா் (பி1) 10 மீட்டா் ஏா் பிஸ்டல் எஸ்ஹெச்1-இல் இந்தியாவின் சிங்ராஜ் அதானா (39) வெண்கலப் பதக்கம் வென்றாா்.

💠அவா் தனது முதல் பாராலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்றிருக்கிறாா். இந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இது 2 ஆவது பதக்கமாகும். முன்னதாக மகளிா் (ஆா்-2) 10 மீட்டா் ரைஃபிள் ஸ்டான்டிங் எஸ்ஹெச்1-இல் அவனி லெகாரா தங்கம் வென்றுள்ளாா்.

💠இறுதியில் அந்நாட்டைச் சோ்ந்தவரும், நடப்பு சாம்பியனுமான சாவ் யாங் 237.9 புள்ளிகள் பெற்று பாராலிம்பிக் சாதனையுடன் தங்கம் வெல்ல, சக நாட்டவரான ஹுவாங் ஜிங் 237.5 புள்ளிகளுடன் வெள்ளியை கைப்பற்றினாா்.

💠சிங்ராஜ் அதானா 216.8 புள்ளிகளுடன் 3 ஆம் இடம் பிடித்து வெண்கலம் வென்றாா். மற்றொரு இந்தியரான மணீஷ் நா்வால் 135.8 புள்ளிகளுடன் 7 ஆம் இடம் பிடித்தாா்.

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் - வெள்ளிப் பதக்கம் வென்றார் மாரியப்பன்..!!

💠டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

💠சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், ரியோ பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்றார். இதையடுத்து டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

💠இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் இறுதியாக அமெரிக்க வீரர் சாம் கிரீவ் - மாரியப்பன் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. 1.88 மீ. உயரம் உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார்.

💠இதையடுத்து 1.86 மீ. உயரம் தாண்டிய இந்திய வீரர் மாரியப்பனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீரரான ஷரத் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டி - இந்திய வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார்..!!

💠டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி பதக்கம் வென்றார். உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் 1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் வெள்ளி பதக்கம் வென்றார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

💠இதன் மூலம் பாராலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தியா

உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகரில் மாட்டிறைச்சி, மதுபான விற்பனைக்குத் தடை..!!

💠உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகரில் மதுபானம் மற்றும் மாட்டிறைச்சி விற்பனைக்கு மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை விதித்தார்.

💠கிருஷ்ண ஜெயந்தி விழாவான கிருஷ்ணோற்சவாவில் பேசிய அவர், மதுபானம் மற்றும் மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்டவர்கள், மதுரா நகரின் பெருமையை உயர்த்துவதற்காக, பால் விற்பனையில் ஈடுபடலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...