தினசரி நடப்பு நிகழ்வுகள் 31.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 31.7.2021 (Daily Current Affairs)

சாதனைகள்

ஒரே ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை..!

💠ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியோன் (Emma McKeon) ஒரே ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.

💠நூறு மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டி, மகளிருக்கான நானூறு மீட்டர் பிரீஸ்டைல் தொடர்நீச்சல், மகளிருக்கான நானூறு மீட்டர் மெட்லே தொடர் நீச்சல், 50 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

💠கலப்பு நானூறு மீட்டர் மெட்லே தொடர் நீச்சல், நூறு மீட்டர் பட்டர்பிளை நீச்சல், மகளிருக்கான 800 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் நீச்சல் ஆகிய போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

💠இவர் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், இரு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்றதும் குறிப்பிடத் தக்கது. அமெரிக்க நீச்சல் வீரர் காலேப் டிரசல் டோக்கியோ ஒலிம்பிக்கில் 5 பதக்கம் வென்றுள்ளார்.

விருதுகள்

சீரம் நிறுவன தலைவருக்கு லோகமானிய திலக் தேசிய விருது..!!

💠சீரம் நிறுவனத்தின் தலைவா் சைரஸ் பூனாவாலாவுக்கு ‘லோகமான்ய திலக்’ தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

💠சைரஸ் பூனாவாலாவின் அயராத அரும்பணியால் உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியானது பல்லாயிரக்காணக்கான உயிா்களை காப்பாற்ற பெரிதும் உதவியது. குறைந்த விலையில் பல்வேறு வகையான தடுப்பூசிகளை தயாரிப்பதில் சைரஸ் பூனாவாலா முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறாா்.

💠எனவே, அவரது சேவையைப் போற்றும் விதமாக 2021 ஆம் ஆண்டுக்கான லோகமான்ய திலக் தேசிய விருதை சைரஸ் பூனாவாலாவுக்கு வழங்கி கெளரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது என்றாா்.

உலகம்

பெலோமார்ஸ்கி கற்பாறை வேலைபாடுகளுக்கு உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரம் - யுனெஸ்கோ..!!

💠ரஷ்யாவின் பெலோமார்ஸ்கியில் அமைந்துள்ள பழங்கால கற்பாறை வேலைபாடுகளுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரம் வழங்கியுள்ளது.

💠பாறை மீது செதுக்கப்பட்டுள்ள பழங்கால ஓவியங்கள் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது.

💠ஆதிமனிதனின் பழக்கவழக்கங்களை காட்டும் வகையில் செதுக்கப்பட்டுள்ள இந்த 4 ஆயிரத்து 500 ஓவியங்கள், வட ஐரோப்பாவின் கற்கால வரலாற்றுச் சுவடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் - 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை புதிய சாதனை..!!

💠டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை Elaine Thompson-Herah பந்தய தூரத்தை 10 புள்ளி 61 விநாடிகளில் கடந்து புது ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கம் வென்றார்.

💠இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மற்றொரு ஜமைக்கா வீராங்கனை Shelly-Ann Fraser-Pryce பந்தைய தூரத்தை 10 புள்ளி 74 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு ஜமைக்கா வீராங்கனை Shericka Jackson வெண்கலம் வென்றார்.

💠ஒலிம்பிக் மகளிர் 100 மீட்டரில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் கைப்பற்றி ஜமைக்கா வீராங்கனைகள் சாதனை படைத்தனர்.


Share Tweet Send
0 Comments
Loading...