தினசரி நடப்பு நிகழ்வுகள் 31.5.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 31.5.2021 (Daily Current Affairs)

சாதனைகள்

எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த சீனாவை சோ்ந்த பாா்வையற்ற மலையேற்ற வீரா்..!!

🔷எவரெஸ்ட் மலையின் மீது ஏறி சாதனை படைத்துள்ளாா் சீனாவை சோ்ந்த பாா்வையற்ற மலையேற்ற வீரா். எவரெஸ்டில் ஏறிய ஆசியாவை சோ்ந்த முதல் பாா்வையற்றவா், உலகின் மூன்றாவது பாா்வையற்றவா் என்கிற சாதனையையும் அவா் சொந்தமாக்கியுள்ளாா்.

🔷ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான மலைச்சிகரங்களில் ஏறவும், பின்னா், வட, தென் துருவங்களுக்குப் பயணம் செல்லவும் விரும்புவதாக அவா் தெரிவித்துள்ளாா்.

🔷சீனாவை சோ்ந்தவா் ஷாங் காங் (44), பாா்வையற்றவரான இவா், மலையேறும் வழிகாட்டிகளுடன் எவரெஸ்ட் மலை மீது ஏறத் தொடங்கி, கடந்த மே 24-ஆம் தேதி உச்சியை அடைந்தாா். பின்னா் பாதுகாப்பாக காத்மாண்டு திரும்பினாா்.

🔷தனது 21 வயதில் கிளாகோமாவால் பாா்வையை இழந்த ஷாங், திபெத்தில் தன் மனைவியுடன் வசித்து வருகிறாா். அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறாா். எவரெஸ்டில் ஏறுவதற்காக அவா் 30 கிலோ எடைகொண்ட சுமையை முதுகில் சுமந்து, தான் பணியாற்றி வரும் மருத்துவமனையின் படிக்கட்டுகளில் ஏறி சுமாா் 5 ஆண்டுகளாகப் பயிற்சியில் ஈடுபட்டாா். சீனாவில் உள்ள சிறிய மலைகளிலும் ஏறியுள்ளாா்.

இந்தியா

சிஐஐ கூட்டமைப்பின் புதிய தலைவராக நரேந்திரன் தோ்வு..!!

🔷இந்திய தொழிலக கூட்டமைப்பின் புதிய தலைவராக டி.வி. நரேந்திரன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

🔷டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிா்வாக இயக்குநருமான டி.வி.நரேந்திரன் சிஐஐ கூட்டமைப்பின் புதிய தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா், 2021-22 ஆண்டுக்கான புதிய தலைவராக இருப்பாா்.

🔷முன்பு இப்பதவியில் இருந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும், நிா்வாக இயக்குநருமான உதய் கோட்டக்கிடமிருந்து நரேந்திரன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளாா். சிஐஐ கூட்டமைப்பில் நரேந்திரன், மண்டல, மாநில, தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.

🔷மேலும், ஹீரோ மோட்டோகாா்ப்பின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவன் முன்ஜால் சிஐஐ-யின் துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன் 5.7 சதவீதம் உயா்வு..!!

🔷வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

🔷உணவு சாரா வங்கி கடன் நடப்பாண்டு ஏப்ரலில் 5.7 சதவீதம் உயா்ந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் இந்த கடன் 6.7 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.

🔷நடப்பாண்டு ஏப்ரலில் வேளாண் மற்றும் அது சாா்ந்த நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட கடனளவு 11.3 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளது. அதேசமயம், 2020 ஏப்ரலில் இந்த கடன் வளா்ச்சி விகிதமானது 4.7 சதவீதமாக மட்டுமே காணப்பட்டது.

🔷அதேசமயம், தொழிற்துறைக்கான வங்கி கடன் நடப்பாண்டு ஏப்ரலில் 0.4 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, 2020 ஏப்ரலில் 1.7 சதவீதமாக அதிகரித்திருந்ததாக ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

நியமனங்கள்

மம்தாவின் தலைமை ஆலோசகராக ஆலன் பந்தோபத்யாய் நியமனம்

🔷மத்திய பணிக்கு மாற்றப்பட்ட மேற்கு வங்க தலைமைச் செயலாளர் ஆலன் பந்தோபத்யாய், முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமனம் செய்து மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

🔷மேற்கு வங்க தலைமைச் செயலாளர் ஆலன் பந்தோபத்யாயை மத்திய பணிக்கு திரும்ப உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில், கரோனா காலகட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்திருந்தார்.

🔷இந்நிலையில், ஆலன் பந்தோபத்யாயை தனது தலைமை ஆலோசகராக நியமனம் செய்து தற்போது உத்தரவிட்டுள்ளார்.

🔷மேலும், மேற்கு வங்கத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஹெச்.கே.திவேதி, உள்துறை செயலாளராக கோபாலிகா ஆகியோரையும் முதல்வர் மம்தா பானர்ஜி நியமனம் செய்துள்ளார்.

🔷புதிய தலைமைச் செயலரை நியமிப்பதற்கு பதிலாக அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க முதல்வர் மமதா பானர்ஜி அனுமதி கோரியிருந்தார்.

🔷இந்நிலையில் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதையொட்டி தில்லி உள்துறை அமைச்சகத்தில் ஆலன் பந்தோபத்யாய் ஆஜராக வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...