தினசரி நடப்பு நிகழ்வுகள் 30.8.2021 ( Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 30.8.2021 ( Daily Current Affairs)

விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2 ஆவது தங்கம்..!!

💠ஏற்கெனவே ஈட்டி எறிதல் எஃப்-46 பிரிவில், வெள்ளி, வெண்கலம் என இந்தியா 2 பதக்கங்களை வென்றிருந்த நிலையில், எஃப்-64 ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்றுள்ளார்.

💠போட்டியில் 68.55 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அவர் உலக சாதனையும் படைத்துள்ளார். இதன் மூலம் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என இதுவரை 7 பதக்கங்களை வென்றுள்ளது.

💠சுமித் அண்டிலின் உலக சாதனை மூலம் தேசம் பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, நமது வீரர், வீராங்கனைகள் பாராலிம்பிக்கில் தொடர்ந்து ஜொலிப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 9 பேர் பதவியேற்பு..!

💠உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் முதன் முறையாக புதிய நீதிபதிகள் 9 பேர் ஒரே நாளில் பதவி ஏற்றனர்.

💠உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலமையிலான கொலிஜியம், புதிய நீதிபதிகளாக நியமிக்கலாம் என 9 பேரின் பட்டியலை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

💠அதை ஏற்று இந்த 9 பேரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, எம்எம்.சுந்தரேஷ், அபய் ஶ்ரீனிவாஸ் ஓகா, விக்ரம் நாத், ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, ஹிமா கோலி, நாகரத்தினா, ரவிகுமார், மதுர்யா திவேதி, ஶ்ரீநரசிம்மா ஆகிய 9 புதிய நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விளையாட்டு

பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கைக்கு முதல் தங்கம்.!!

💠டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் மூலம் பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கை முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

💠ஆடவர் ஈட்டி எறிதலில் இலங்கையின் தினேஷ் ஹெரத் முடியன்சலேகே F46 பிரிவில் 67 புள்ளி 79 மீட்டர் தூரம் வீசி உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.

💠நீச்சல் போட்டியில் சீனா 4 தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் சீன வீரர் Zheng Tao, மற்றும் வீராங்கனை Lu Dong முறையே தங்கம் வென்றனர். அதேபோல் 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் ஆடவரில் சீனாவின் Wang Jingang-ம், மகளிரில் Jian Yuyan-ம் தங்கம் வென்றனர்.

உலகம்

வாரத்தில் 3 மணிநேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டு - சீனா..!!

💠சீனாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி 18 வயதுக்குட்பட்டவர்கள் வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

💠சீனாவில் 18 வயதுக்கு கீழான மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக நேரங்களை செலவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

💠குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மட்டுமே நேரத்தை செலவிடுவதாக அந்நாட்டு அரசு கவலை அடைந்தது.

💠இதனை அடுத்து 18 வயதுக்குட்பட்டவர்கள் வாரத்தில் 3 மணி நேரத்திற்கு மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டும் என கட்டுப்பாடு விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

💠குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...