தினசரி நடப்பு நிகழ்வுகள் 30.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 30.7.2021 (Daily Current Affairs)

இந்தியா

வங்கி கடன் தள்ளுபடி செய்த பொதுத்துறை வங்கிகளின் பட்டியலில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முதலிடம்..!

💠2021 ஆம் நிதியாண்டில் கடன்களை தள்ளுபடி செய்த பொதுத்துறை வங்கிகளின் பட்டியலில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா State Bank of India (SBI) (Rs 34,402 crore) முதலிடத்தில் உள்ளது.

💠இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை பெற்றுள்ளன.

💠ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி 2020-2021 ஆம் நிதியாண்டில் மொத்தமாக தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி கடன் தொகை ரூ. 1,31,894 கோடி ஆகும். இந்த தொகை 2019-20 நிதியாண்டில் ரூ.1,75,877 கோடியாக இருந்தது.

இந்தியா

உலக அளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு 9 ஆவது இடம்..!!

💠2019 ஆம் ஆண்டில் உலக அளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization (WTO)) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

💠இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகள் பெற்றுள்ளன.

விளையாட்டு

ஒலிம்பிக் மகளிர் சைக்கிள் போட்டி - தங்கப் பதக்கம் வென்ற கணிதப் பேராசிரியர்..!!

💠கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணியாற்றும் ஆஸ்திரியாவின் அண்ணா கிஸன்ஹோபர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சாலையில் நீண்டதூரம் சைக்கிள் ஓட்டும் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

💠137 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டும் மகளிர் சைக்கிள் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்பிருப்பதாக கருதப்பட்ட நெதர்லாந்து மற்றும் இத்தாலி வீராங்கனைகளின் கணக்கை தப்புக் கணக்காக்கி வெற்றி பெற்றுள்ளார் அண்ணா கிஸன்ஹோபர்.

💠இதன்மூலம், 125 ஆண்டுகளுக்குப் பிறகு சைக்கிள் போட்டியில் ஆஸ்திரியா தங்கம் வென்றிருக்கிறது, இதற்கு முன் 1896 ஆம் ஆண்டு தங்கம் வென்றது.

💠மொத்த தூரத்தை கடக்க மூன்று மணி நேரம் ஐம்பத்திரெண்டு நிமிடம் நாற்பத்தி ஐந்து விநாடி (3:52:45) எடுத்துக்கொண்ட கிஸன்ஹோபர், தனக்கு அடுத்து வந்த நெதர்லாந்து வீராங்கனை அந்நேமிக்க வான் வ்லுட்டேனை விட ஒரு நிமிடம் பதினைந்து வினாடிகள் முன்னதாக இலக்கை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...