தமிழ்நாடு
1 கோடி கார் தயாரித்து ஹுண்டாய் சாதனை..!!
🔷சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும் ஹுண்டாய் தொழிற்சாலையில் இதுவரையில் ஒரு கோடி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
🔷1996ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் 25 ஆண்டுகளில் ஒரு கோடி கார்கள் உற்பத்தி செய்ய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அங்கு தயாரிக்கப்பட்ட ஒரு கோடியாவது கார், முதலமைச்சர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
🔷தொடர்ந்து, ஹுண்டாய் தொழிற்சாலையில் இருந்து சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து ஏழை, எளிய மக்களுக்கு 200 கறவை மாடுகளை வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர், தெற்காசியாவிலேயே தொழிற்சாலை மிகுந்த மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்றார்.
நியமனங்கள்
கேரள சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் நியமனம்..!!
🔷கேரள மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காவல் துறை டிஜிபியாக அனில் காந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
🔷இதற்கு முன்பு டிஜிபியாக இருந்த லோகநாத் பெஹ்ராவின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், புதிய டிஜிபியாக அனில் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
🔷1988ஆம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த அனில் காந்த் தெற்கு கேரளாவில் ஏடிஜிபியாக பணிபுரிந்து வந்தார்.
🔷சுரேஷ் குமார், பி.சந்தியா, அனில் காந்த் ஆகியோர் பெயரை குடிமையியல் பணிகள் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
🔷பின்னர் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் அனில் காந்தை டிஜிபியாக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசின் அட்டா்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் மேலும் ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.
🔷அவருக்கு வயது 90. அட்டா்னி ஜெனரலாக நியமிக்கப்படுபவா் மூன்றாண்டுகளுக்கு அப்பதவியை வகிப்பாா். இந்நிலையில் மத்திய அரசின் அட்டா்னி ஜெனரலாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக நியமிக்கப்பட்ட கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவடைய இருந்தது. அவா் பணிநீட்டிப்பு கோரியதையடுத்து அவரின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அவரின் பணிநீட்டிப்பு காலம் நிறைவடைந்தது.
🔷இந்நிலையில் அவரை ஜூலை 1 ஆம் தேதி முதல் ஓராண்டு காலம் மீண்டும் அட்டா்னி ஜெனரலாக குடியரசுத் தலைவா் நியமித்துள்ளதாக சட்ட அமைச்சகத்தீன் கீழ் செயல்படும் சட்ட விவகாரங்கள் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
விளையாட்டு
உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற இடத்தை பிடித்தார் கேன் வில்லியம்சன்..!!
🔷உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற இடத்தை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார்.
🔷சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் லேட்டஸ்ட் தரவரிசைகளின் படி 901 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளார். இந்திய வீரர்கள் விராட் கோலி 4 ஆம் இடத்திலும் ரோகித் சர்மா 6 ஆம் இடத்திலும் உள்ளனர்.
🔷அண்மையில் நடந்த டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய அணியை வில்லியம்சன் தலைமையிலான அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. அதில் 2 இன்னிங்சுகளிலும் 49 மற்றும் 52 ரன்களை வில்லியம்சன் எடுத்தார்.