தினசரி நடப்பு நிகழ்வுகள் 30 - 05 - 2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 30 - 05 - 2021 (Daily Current Affairs)

விருதுகள்

கவிஞா் வைரமுத்துவுக்கு ஒ.என்.வி. இலக்கிய விருது..!!

🔷கேரளத்தில் இலக்கியத்துக்கான உயா்ந்த தேசிய விருதாக வழங்கப்படும் ஓ.என்.வி. இலக்கிய விருது இந்த ஆண்டு கவிஞா் வைரமுத்துவுக்கு வழங்கப்படுகிறது. மலையாளி அல்லாத ஒருவா் பெறும் முதல் விருது இதுதான். ஓ.என்.வி. கல்சுரல் அகாதெமி இந்த விருதை வழங்குகிறது.

🔷மலையாளப் பெருங்கவிஞா்களுள் ஒருவா் ஓ.என்.வி குறுப். சிறந்த இலக்கியவாதியாகவும் பாடலாசிரியராகவும் விளங்கியவா். இந்தியாவின் உயா்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருது பெற்றவா். சிறந்த பாடலுக்கென்று ஒரு தேசிய விருதும் பெற்றவா். 25 கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறாா். அவா் பெயரால் 2017-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது.

🔷இந்த ஆண்டுதான் மலையாளி அல்லாத ஓா் இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது அகில இந்திய அளவில் வழங்கப்படும் தேசிய விருதாகும். இந்திய இலக்கியத்திற்கு கவிஞா் வைரமுத்துவின் ஒட்டுமொத்த பங்களிப்பைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது.

🔷கவிஞா் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாதெமி விருது பெற்றது. அவரது தண்ணீா் தேசம் ஆதித்தனாா் இலக்கியப் பரிசு பெற்றது. அவா் எழுதிய மூன்றாம் உலகப்போா் உலகத் தமிழ் இலக்கியத்தின் சிறந்த நாவல் என்று மலேசியா டான்ஸ்ரீ சோமா அறக்கட்டளையால் தோ்ந்தெடுக்கப்பட்டு 10,000 அமெரிக்க டாலா்கள் பரிசு பெற்றது.

இந்தியா

சிஆா்பிஎஃப் தலைவருக்கு என்ஐஏ இயக்குநராக கூடுதல் பொறுப்பு..!!

🔷மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) தலைமை இயக்குநா் குல்தீப் சிங்குக்கு கூடுதலாக தேசியப் புலனாய்வு அமைப்பின்(என்ஐஏ) தலைமை இயக்குநா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

🔷என்ஐஏ தலைமை இயக்குநராக இருக்கும் ஒய்.சி.மோடி, மே மாதம் 31-ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறாா். இதைத் தொடா்ந்து, அந்தப் பொறுப்பை சிஆா்பிஎஃப் தலைமை இயக்குநா் குல்தீப் சிங்குக்கு கூடுதலாகக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிா்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அல்லது தேசியப் புலனாய்வு அமைப்புக்கு புதிய இயக்குநா் நியமிக்கப்படும் வரை என்ஐஏ இயக்குநா் பதவியை குல்தீப் சிங் கூடுதலாகக் கவனித்துக் கொள்வாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 1986-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான குல்தீப் சிங், கடந்த மாா்ச் மாதம் சிஆா்பிஎஃப் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றாா்.

திட்டங்கள்

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க பிரதமரின் யுவா திட்டம்..!!

🔷பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணத்தின் படி, பல்துறைகளில் வளரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க மத்திய உயர்கல்வித் துறை "யுவா' வழிகாட்டி திட்டத்தை தொடங்கியுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்ததுள்ளது.

🔷30 வயதுக்கு குறைவான இளைஞர்களுக்கான இந்தத் திட்டத்தில் புத்தகம் படித்தல், புத்தகம் எழுதுதல் போன்ற கலாசாரங்களை ஊக்குவித்து இந்திய மற்றும் சர்வதேச அளவிலான எழுத்தாளர்களாக அவர்களை ஊக்குவிக்கும் பயிற்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷2020 - புதிய கல்விக்கொள்கையும், இளையோரை மேம்படுத்துவதற்கும் கற்றல் சூழல் அமைப்பை உருவாக்கவேண்டும் என வலியுறுத்தியது. இவைகளின் அடிப்படையில் இளம், வளரும், பல்துறை திறன் எழுத்தாளர்களுக்கான "யுவா" திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

🔷மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள "நேஷனல் புக் டிரஸ்ட்' இந்தத் திட்டத்தை வரைமுறைகளின்படி செயல்படுத்தும் அமைப்பாக இருக்கும். இது முப்பது வயதுக்குட்ட இளம் தலைமுறையினருக்கான திட்டம். இதற்கு தேர்வு நடக்கும்.

🔷இதுவரை புத்தகத்தில் இடம்பெற்று தெரியவராத வீரர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், அறியப்படாத இடங்கள், மறந்து போன இடங்கள், தேசிய இயக்கங்களில் பங்குபெற்றவர்கள் மற்றும் பல புதிய கண்டுபிடிப்புகள், புது உருவாக்கங்கள் ஆகிய தலைப்புகளில் புத்தகம் எழுதும் போட்டி நடத்தப்படும். இந்திய பாரம்பரியம், கலாசாரம் மற்றும் அறிவு முறையை மேம்படுத்துவதும் முறையில் இவை எழுதப்படவேண்டும்.

🔷இதற்கான அகில இந்திய தேர்வு வருகின்ற ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதிவரை நடத்தப்படும். இதில் 75 புத்தக எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதோடு ஆறு மாத காலத்திற்கு மாதம் ரூ. 50,000 உதவித்தொகையும் அளிக்கப்படும்.

🔷இந்த எழுத்தாளர்கள் பெயர் மற்றும் புத்தகங்கள் விவரங்கள் 2021 ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் அவர்களது புத்தகங்கள் அச்சுக்கு அனுப்பப்படும். இந்த புத்தகங்கள் தேசிய இளைஞர்கள் தினமான ஜனவரி 12 (2022) அன்று வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...