தினசரி நடப்பு நிகழ்வுகள் 3.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 3.9.2021 (Daily Current Affairs)

இந்தியா

ராஜீவ் காந்தி தேசிய பூங்காவின் பெயர் மாற்றம்..!

💠அசாம் மாநிலத்திலுள்ள ‘ராஜிவ் காந்தி ஒராங் தேசிய பூங்காவின்’ (Rajiv Gandhi Orang National Park) பெயர் ‘ஓராங் தேசிய பூங்கா’ (Orang National Park) என மாற்றப்பட்டுள்ளது.

💠அசாமின் தரங் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் சுமார் 79 சதுர கி.மீ. பரப்பளவில் தேசிய பூங்கா ஒன்று உள்ளது. பிரம்மபுத்ரா நதியின் வடக்கு கரையில் பரந்து விரிந்து காணப்படும் இந்த பூங்கா, இந்திய காண்டாமிருகங்கள், ஆசிய யானைகள், வங்கப்புலி உள்ளிட்ட வன விலங்குகளின் சரணாலயமாக விளங்கி வருகிறது.

💠1985 ஆம் ஆண்டு தேசிய சரணாலயமாகவும், பின்னர் 1999 இல் தேசிய பூங்காவும் அறிவிக்கப்பட்ட இந்த பூங்காவுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

💠அந்தவகையில் ‘ராஜீவ் காந்தி ஒராங் தேசிய பூங்கா’ என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மிகவும் புகழ்பெற்று விளங்கும் இந்த தேசிய பூங்காவின் பெயரை மாநில பா.ஜனதா அரசு மாற்றியுள்ளது. ‘ராஜீவ் காந்தி ஒராங் தேசிய பூங்கா’ என்பதற்கு பதிலாக, ‘ஒராங் தேசிய பூங்கா’ என்று மட்டுமே இனி இது அழைக்கப்படும்.

விருதுகள்

யெஸ்.பாலபாரதியின் நூலுக்கு பால சாகித்திய புரஸ்காா் விருது..!!

💠யெஸ்.பாலபாரதியின் “மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற குழந்தைகள்” நூலுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான ‘பால சாகித்திய புரஸ்காா் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

💠சாகித்திய அகாதெமியின் தலைவா் டாக்டா் சந்திரசேகர கம்பாா் ஒப்புதலுடன் அகாதெமியின் செயலாளா் கே.ஸ்ரீனிவாசராவ் வெள்ளிக்கிழமை இதை அறிவித்துள்ளாா்.

💠இந்த விருதுக்காக அமைக்கப்பட்ட மூன்று போ் கொண்ட நடுவா் குழு ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ நூலை ஒருமனதாகத் தோ்வு செய்துள்ளதாக அகாதெமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் எம்.கமலவேலன், டாக்டா் ருத்ர துளசிதாஸ், யூமா வாசுகி ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

💠‘இதை குழந்தைகளுக்கான நூல் என்று மட்டும் கருத முடியாது. பெற்றோரும் ஆசிரியா்களும் படிக்க வேண்டிய நூலாகக்கூட கருதலாம். குழந்தைகளின் வெகுளித்தனம், ஆா்வம், சிந்தனையைத் தூண்டக்கூடிய நூல்’ என இந்நூல் குறித்த விமா்சனங்களும் வெளியாகியிருந்தன.

💠‘பால சாகித்திய புரஸ்காா்’ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள இந்த நூல் ஆசிரியருக்கு கேடயமும், ரூ 50,000 ரொக்கப் பரிசும் அளிக்கப்படும்.

விளையாட்டு

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் மகளிர் ரிலேவில் அமெரிக்க வீராங்கனை உலக சாதனை..!!

💠டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டு புது சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. மகளிர் 400 மீட்டர் ரிலேவில் அமெரிக்க வீராங்கனை டாடியானா மெக்பாடன் பந்தய தூரத்தை 45.52 விநாடிகளில் கடந்து புது உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.

💠ஆடவர் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் ரஷ்ய வீரர் ரோமன் ஜிதேனாவ் 40.99 விநாடிகளில் கடந்து புது உலக சாதனை படைத்தார்.

💠மகளிர் 50 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் கனடா வீராங்கனை டேனியல் டோரிஸ் உலக சாதனை படைத்தார்.

ஜப்பான் பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் 2 பதக்கங்கள்..!!

💠டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில், 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்கமும், மற்றொரு இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெள்ளியும் வென்றனர்.

💠இறுதிச் சுற்றில், மணீஷ் நர்வால் 218.2 புள்ளிகள் எடுத்து, புதிய பாரா ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

💠சிங்ராஜ் அதானா, 216.7 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

💠மணீஷ் நர்வால் தங்கம் வென்றுள்ளது விளையாட்டுத் துறையில் சிறப்பான தருணம் என குறிப்பிட்டுள்ள பிரதமர், சிங்ராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...