தினசரி நடப்பு நிகழ்வுகள் 3.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 3.6.2021 (Daily Current Affairs)

நியமனங்கள்

கென்யாவைச் சேர்ந்த டாக்டர் பேட்ரிக் அமோத் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்..!!

🔷கென்யாவின் சுகாதார அமைச்சின் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் பேட்ரிக் அமோத் ஒரு வருட காலத்திற்கு உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்வாக வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷WHO நிர்வாக சபையின் 149 ஆவது அமர்வின் போது, ​​ஜூன் 21, 2021 அன்று வெளியேறும் தலைவர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

🔷2021 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதி WHO நிர்வாகக் குழுவின் தலைவராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த இந்திய அரசாங்கத்தின் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனுக்கு பதிலாக திரு அமோத் நியமிக்கப்பட்டார்.

🔷டாக்டர் வர்தன் 2023 வரை WHO இன் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருப்பார். தலைவரின் பதவி பிராந்திய குழுக்களிடையே ஒரு வருடம் சுழற்சி அடிப்படையில் நடைபெறுகிறது.

நியமனங்கள்

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக திலகரத்னே நியமனம்..!!

🔷இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக திலகரத்னே நியமனம் செய்யப்பட்டார்.

🔷இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் கேப்டன் ஹசன் திலகரத்னே நியமிக்கப்பட்டு உள்ளார். இப்போதைக்கு அவரது ஒப்பந்த காலம் ஆண்டின் இறுதிவரை போடப்பட்டுள்ளது. இது மேலும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

🔷2022-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கும், காமன்வெல்த் விளையாட்டு தகுதி சுற்றுக்கும் இலங்கை அணியை தயார்படுத்துவதே அவரது முதல் பணியாக இருக்கும்.

🔷கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு எந்த சர்வதேச போட்டிகளிலும் ஆடாத இலங்கை பெண்கள் அணிக்கு அடுத்த சில மாதங்களில் ஒன்றிரண்டு தொடருக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. 53 வயதான திலகரத்னே 1996-ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம் பெற்றவர் ஆவார்.

இந்தியா

நாட்டில் கடந்த மே மாதத்தில் உணவு தானியம் பெற்ற பயனாளர்கள் எண்ணிக்கை 55 கோடி..!!

🔷நாட்டில் கடந்த மே மாதத்தில் 55 கோடி பயனாளர்கள் உணவு தானியங்களை பெற்றுள்ளனர் என உணவு மற்றும் பொது வினியோக செயலாளர் கூறியுள்ளார்.

🔷பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்.) 3 ஆவது கட்ட திட்டம் பற்றி உணவு மற்றும் பொது வினியோக துறையின் செயலாளர் சுதான்சு பாண்டே கூறும் பொழுது, இந்திய உணவு கழக கிடங்குகளில் இருந்து 63.67 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் எடுத்து சென்றுள்ளன.

🔷இது மே மற்றும் ஜூன் மாதத்திற்கான பி.எம்.ஜி.கே.ஏ.ஒய். திட்ட ஒதுக்கீட்டில் 80 சதவீதம் ஆகும். ஏறக்குறைய 28 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 55 கோடி தேசிய உணவு பாதுகாப்பு சட்ட பயனாளிகளுக்கு கடந்த மே மாதத்தில் வழங்கியுள்ளது.

🔷இதேபோன்று நடப்பு ஜூன் மாதத்தில் 2.6 கோடி பயனாளிகளுக்கு 1.3 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார். இதற்காக மொத்தம் ரூ.13 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக உணவு மானியம் செலவிடப்பட்டு உள்ளது.

செயற்கைக்கோள் / ஏவுகணை

500 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட வெள்ளி கிரகத்துக்கு 2 விண்கலங்கள் - நாசா அனுப்புகிறது..!!

🔷வெள்ளி கிரகம் கடைசியாக 1990-ம் ஆண்டு மெகல்லன் ஆர்பிட்டர் மூலம் ஆராயப்பட்டது.

🔷500 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட வெள்ளி கிரகத்துக்கு 2 விண்கலங்கள் - நாசா அனுப்புகிறது. வீனஸ் என்று அழைக்கப்படுகிற வெள்ளி கிரகத்துக்கு 2 விண்கலங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாசா அனுப்புவதாக அறிவித்துள்ளது.

🔷இந்த திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,750 கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக ஆய்வு செய்யப்படாத வெள்ளி கிரகத்தை ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த திட்டங்கள் அமைந்துள்ளன.

🔷இவ்விரு திட்டங்களும் வெள்ளி எவ்வாறு நரகத்தைப்போன்றதொரு உலகம் ஆனது, மேற்பரப்பில் ஈயம் உருகும் திறன் வந்தது எப்படி என்பதை ஆராய்வதுடன், இந்த கிரகத்தின் காற்று மண்டலம், பூகோளம் சார்ந்த அம்சங்களும் ஆராயப்படும்.

🔷வெள்ளி கிரகம் கடைசியாக 1990-ம் ஆண்டு மெகல்லன் ஆர்பிட்டர் மூலம் ஆராயப்பட்டது. வெள்ளி கிரகம், சூரியனுக்கு அடுத்தபடியாக அதிக வெப்பமான கிரகம் ஆகும். இதன் மேற்பரப்பு வெப்ப நிலை, 500 டிகிரி செல்சியஸ் ஆகும்.

🔷நாசாவின் வெள்ளி கிரக ஆய்வுப்பயணங்கள் 2028-2030 இடையே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...