தினசரி நடப்பு நிகழ்வுகள் 29.8.2021 ( Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 29.8.2021 ( Daily Current Affairs)

விளையாட்டு

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்..!

💠பாரா ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர்-ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றுள்ளார். பாரா ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.

💠மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியான பாரா ஒலிம்பிக்ஸ், டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்-ரைபிள் பிரிவில், இந்தியாவின் அவனி லெகரா அபாரமான திறனை வெளிப்படுத்தி, தங்கப் பதக்கம் வென்றார்.

💠பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனை ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் அவர், பாரா ஒலிம்பிக் போட்டியில் மூவர்ணக் கொடியை பட்டொளி வீசிப் பறக்கச் செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்..!!

💠பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

💠இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்த நிலையில், மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

💠இந்தியா இதுவரை ஒரு தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.

💠வட்டு எறிதல் போட்டியில், 44.38 மீட்டர் தூரம் வட்டு எறிந்து இந்திய வீரர் யோகேஷ் வெள்ளி பதக்கம் வென்றார்.

பாரா ஒலிம்பிக் - ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டைப் பதக்கம்..!!

💠பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டைப் பதக்கம் கிடைத்துள்ளது.

💠ஈட்டி எறிதல் எஃப் 45 பிரிவில் இந்தியாவின் தேவேந்திரா வெள்ளிப் பதக்கமும், சுந்தர் சிங் வெண்கலப் பதக்கமும் வென்றனர். தேவேந்திரா 64.35மீ, சுந்தர் சிங் குர்ஜார் 64.01மீ ஈட்டி எறிந்து வெள்ளி, வெண்கலத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.

💠பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.

நோசியல் செஸ் ஓபன் - இனியன் சாம்பியன்..!!

💠பிரான்ஸின் நோசியல் நகரில் நடைபெற்ற செஸ் ஓபன் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டா் பி.இனியன் சாம்பியன் பட்டம் வென்றாா்.

💠நோசியல் நகரில் சா்வதேச செஸ் ஓபன் 2021 போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில் நடைபெற்ற ஆடவா் இறுதிச் சுற்றில் தமிழக வீரரான பி. இனியன் 7.5 புள்ளிகளைப் பெற்று உக்ரைனின் யூரி சோலோனிசென்கோவை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினாா். பிரான்ஸ் கிராண்ட்மாஸ்டா் கம்பரத் யானிக் மூன்றாம் இடத்தைப் பெற்றாா்.

💠மொத்தம் நடைபெற்ற 9 ஆட்டங்களில் இனியன் 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றாா். 2 ஆட்டங்களில் டிரா கண்டாா். கடந்த 2020 ஜனவரிக்கு பின் இனியன் பெறும் முதல் வெற்றி இதுவாகும். மேலும் பிளிட்ஸ் போட்டியிலும் 7.5 புள்ளிகளுடன் வெற்றி கண்டாா் இனியன்.

ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை - இந்தியாவுக்கு 2 தங்கம், 1 வெள்ளி..!!

💠ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரா்கள் தலா 2 தங்கம், 1 வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினா்.

💠துபாயில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 48 கிலோ எடைப்பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீரா் ரோஹித் சமோலி மங்கோலியாவின் ஓகோன்பயாா் டுவிஷின்ஸயாவை போராடி வீழ்த்தி தங்கம் வென்றாா். 81 கிலோ எடைப்பிரிவில் கஜகஸ்தான் வீரா் எா்டோஸ் ஷரிபெக்கை வீழ்த்தி தங்கம் வென்றாா் பாரத் ஜூன்.

💠70 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரா் கௌரவ் சைனி உஸ்பெகிஸ்தானின் போல்தேவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினாா். இந்தியா ஏற்கெனவே இப்போட்டியில் 6 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. கடந்த 2019 ஆசிய ஜூனியா் போட்டியில் 6 தங்கம் உள்பட 21 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றது இந்தியா.

💠ஆசிய யூத் சாம்பியன்ஷிப் பிரிவில் இந்தியா சாா்பில் 15 போ் தங்கத்துக்கான போட்டியில் உள்ளனா்.


Share Tweet Send
0 Comments
Loading...