விளையாட்டு
ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை உலக சாதனை..!!
🔷டோக்கியோ ஒலிம்பிக் தொடர் மகளிர் நீச்சல் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை Tatjana Schoenmaker தங்கம் வென்று உலக சாதனை படைத்தார்.
🔷மகளிருக்கான 200 மீட்டர் breaststroke பிரிவில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை Tatjana Schoenmaker பந்தய தூரத்தை 2 நிமிடம் 18 விநாடிகளில் கடந்து புது உலக சாதனை படைத்து தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.
🔷ஏற்கனவே Tatjana Schoenmaker மகளிருக்கான 100 மீட்டர் breaststroke பிரிவில் வெள்ளி வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
இருபுறமும் சூரிய உருவம் பொறித்தது கீழடியில் கிமு 6 ஆம் நூற்றாண்டு வெள்ளி நாணயம் கண்டெடுப்பு..!
🔷கீழடியின் 7 ஆம் கட்ட அகழாய்வில் கி.மு 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கீழடியில் தங்கத்தால் ஆன பொருள் கிடைத்த நிலையில் தற்போது சதுர வடிவிலான வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது.
🔷மதுரை நகருக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்துவரும் அகழாய்வில் முத்திரையிடப்பட்ட வெள்ளியிலான காசு ஒன்று கிடைத்துள்ளது. இந்தக் காசு மகத பேரரசைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
🔷மதுரை நகருக்கு அருகில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி அகழாய்வுத் தளத்தில் தற்போது ஏழாவது கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் சில நாட்களுக்கு முன்பாக, வெள்ளியினால் ஆன முத்திரையிடப்பட்ட காசு என்று கிடைத்துள்ளது.
🔷146 செ.மீ ஆழத்தில் கிடைத்த இந்தக் காசில் முன்புறம் சூரிய சந்திரர்கள், காளை, எருது, நாய் போன்ற குறியீடுகளும் பின்புறம் அரைவட்டம் மற்றும் 'ட' வடிவக் குறியீடுகளும் காணப்படுகின்றன.
🔷இந்தக் காசு குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "2.20 கிராம் எடையுள்ள இந்த வெள்ளிக் காசு, வட புலத்தாருடன் நம் பழந்தமிழர் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளுக்கான மற்றுமொறு சான்று" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா
இராணுவ தளவாட உற்பத்தி மையம் - மத்திய அரசு ஒப்புதல்..!!
🔷தமிழ்நாடு மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
🔷இதற்காக தமிழகத்தில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. (சென்னை, கோவை, ஓசூர், திருச்சி மற்றும் கோயம்புத்தூர்)
🔷உத்திரப் பிரதேசத்தில் 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. (ஆக்ரா, அலிகார், சித்ரகூட், ஜான்சி, கான்பூர் மற்றும் லக்னோ)
சர்வதேச தூய்மையான காற்று வினையூக்கி திட்டத்தில் இணைந்த இந்தியாவின் ஒரே நகரம்..!!
🔷சர்வதேச தூய்மையான காற்று வினையூக்கி திட்டத்தில் இணைந்த இந்தியாவின் ஒரே நகரம் என்ற சிறப்பை, மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் பெற்றுள்ளது.
🔷இந்தூர் மாநகராட்சி மற்றும் மத்திய பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒத்துழைப்புடன் நகரத்தில் காற்றை சுத்திகரிக்க இந்த திட்டம் ஐந்து வருட காலத்திற்கு இயக்கப்படும்.
பிளாட்டினம் தரச்சான்று பெற்ற இந்தியாவின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலம்..!!
🔷பிளாட்டினம் தரச்சான்று பெற்ற இந்தியாவின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற சிறப்பை குஜராத்தின் கண்டலா சிறப்பு பொருளாதார மண்டலம் பெற்றுள்ளது.
🔷இந்திய பசுமை கட்டிட கவுன்சில் வழங்கும் இச்சான்று, நீர் பாதுகாப்பு மற்றும் காடு வளர்ப்பு தொடர்புடைய வகையில், கண்டலா பொருளாதார மண்டலம் சிறப்பாக செயலாற்றியதற்காக வழங்கப்பட்டுள்ளது.
உலகம்
வியாழனின் நிலவான கணிமேடில், நீராவி இருப்பதற்கான ஆதாரம்..!!
🔷வியாழனின் நிலவான கணிமேடில், நீராவி இருப்பதற்கான ஆதாரத்தை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்டது.
🔷ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன் வியாழனின் பனிக்கட்டி நிலவான கணிமேட்டின் வளிமண்டலத்தில் நீராவி உள்ளதற்கான முதல் ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் சந்திரனின் பனிக்கட்டி மேற்பரப்பில் இருந்து நீராவியின் வெப்ப தப்பிப்பைக் கண்டுபிடித்தனர்.
🔷வியாழனின் நிலவான, கணிமேட் சூரிய மண்டல நிலவுகளிலே மிகப்பெரியது ஆகும். மேலும் சூரிய மண்டல கோள்களிலே 9 ஆவது பெரிய கோளாகும்.