நியமனங்கள்
தமிழ்நாடு புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்..!!
🔷தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவர் திரிபாதி ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
🔷பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றியதாக அறியப்படும் சைலேந்திரபாபு சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாகவும் பணியாற்றியவர்.
🔷கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த சைலேந்திரபாபு 1987ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் இணைந்தார். குடியரசுத் தலைவர் பதக்கம், பிரதமர் விருது, வீரதீர செயலுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்றவர்.
தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத் தலைவராக பீட்டா் அல்போன்ஸ் நியமனம்..!!
🔷மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவா்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் கடந்த 1989ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதியால், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு கடந்த 2010ஆம் ஆண்டில் சட்டப்பூா்வ அதிகாரமும் வழங்கப்பட்டது.
🔷தமிழ்நாட்டில் சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பணிகளை, மாநில சிறுபான்மையினா் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆணையம் இப்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
🔷சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவராக எஸ்.பீட்டா் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், கடந்த 1989, 1991-ஆம் ஆண்டுகளில் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் தென்காசி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றாா்.
டெல்லி காவல் ஆணையராக பாலாஜி ஶ்ரீவஸ்தவ் நியமனம்..!!
🔷டெல்லி காவல்துறை ஆணையராக பாலாஜி ஶ்ரீவஸ்தவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
🔷டெல்லி காவல் ஆணையராக இருந்த எஸ்.என்.ஶ்ரீவாஸ்தவா ஓய்வு பெறுவதையடுத்து புதிய காவல் ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளது.
🔷புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாலாஜி ஶ்ரீவஸ்தவ், டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு காவல் ஆணையராக உள்ளார். இவருக்கு கூடுதல் பொறுப்பாக டெல்லி காவல்துறை ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
🔷1988ஆம் ஆண்டு காவல் பணியில் தேர்வான இவர், கடைசியாக புதுச்சேரி காவல்துறை தலைவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த் பதவிக் காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு..!!
🔷நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் கந்த்தின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
🔷நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அமிதாப் கந்த். கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் நிதி ஆயோக் அமைப்பின் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
🔷இந்நிலையில் அமைச்சரவை நியமனக் குழுவின் ஒப்புதலின் படி அவரது பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகம்
சர்வதேச சைபர் பாதுகாப்பு குறியீடு - இந்தியா 10 ஆவது இடத்துக்கு முன்னேற்றம்..!!
🔷ஐ.நா. வெளியிட்டுள்ள சர்வதேச சைபர் பாதுகாப்பு அட்டவணையில் (குறியீடு) 47ஆவது இடத்தில் இருந்து 10 இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 6 ஆண்டுகளாக இத்தகைய பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தப்பட்டியலில் 2020 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்தியா 37 ஆவது இடங்கள் முன்னேறி 10 இடத்தை பிடித்துள்ளது.
🔷பயங்கரவாத குழுக்கள் பிரசாரங்களை மேற்கொள்ளவும் வெறுப்புணர்வை விதைக்கவும் இணையவெளியை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. இதுபோன்ற இணையவெளி தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உறுப்பு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார் சர்வதேச அமைதி மற்றும் சைபர் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா.
🔷இந்தப்பட்டியலில் சீனா 33ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 79ஆவது இடத்திலும் உள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு செலவுமிக்க நகரம் - அஸ்காபாத்..!!
🔷ஆலோசனை நிறுவனமான மெர்சரின் 2021 வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பில் அஸ்காபாத் (Ashgabat) நகரம் முதலிடத்தில் உள்ளது.
🔷வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மிகவும் செலவுமிக்க நகரமாக அஸ்காபாத் நகரம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது துருக்மெனிஸ்தானின் தலைநகர் ஆகும்.
🔷இந்த நகரமானது மெர்சர் (Mercer) எனப்படும் ஆலோசக நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைச் செலவினக் கணக்கெடுப்பில் முதலிடத்தைப் பெற்றது. இதில் ஹாங்காங் நகரம் இரண்டாமிடத்தில் உள்ளது.
🔷இதனையடுத்து லெபனானின் பெய்ரூட் மற்றும் ஜப்பானின் டோக்கியோ ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
விருதுகள்
அமீரகத்தில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உள்பட 22 பேருக்கு டயானா விருது..!!
🔷நடப்பு ஆண்டிற்கான ‘டயானா விருது’ அமீரகத்தில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உள்பட 22 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இளவரசர் ஹாரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
🔷உலக அளவில் மொழி, இனம் கடந்து மனிதநேய செயல்பாடுகளை அனைவருக்கும் செய்வதற்கான மனநிலையை இளைய தலைமுறையினருக்கு ஊக்கப்படுத்தும் வகையில் டயானா விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இங்கிலாந்து நாட்டின் மறைந்த இளவரசி டயானாவின் நினைவாக கடந்த 1999ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
🔷இந்த விருதானது சிறந்த மனிதநேயம் மற்றும் சமூக நல செயல்பாடு திட்டங்களை புதுமையாக கட்டமைக்கும் இளைஞர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விருதுக்காக மொத்தம் 46 நாடுகளை சேர்ந்த 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 9 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் துபாய் தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவியான இந்தியாவை சேர்ந்த ரியா சர்மாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.