தினசரி நடப்பு நிகழ்வுகள் 29 - 05 - 2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 29 - 05 - 2021 (Daily Current Affairs)

சாதனைகள்

எவரெஸ்ட் சிகரத்தை வேகமாக ஏறிய சாதனையை ஹாங்காங் பெண் முறியடித்தார்..!!

🔷ஹாங்காங்கை தளமாகக் கொண்ட மலையேறுபவர் சாங் யின்-ஹங் உலகின் மிக வேகமாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய சாதனையை உருவாக்கியுள்ளார், வெறும் 26 மணி நேரத்திற்குள் எறி இச்சதனையை நிகழ்த்தியுள்ளார்.

🔷44 வயதான சாங் 8,848.86 மீட்டர் (29,031அடி) எவரெஸ்ட் மலையை மே 23 அன்று 25 மணி 50 நிமிடங்களில் இமயமலை சிகரத்தை ஏறி சாதனை படைத்தார். இது மூன்றாவது முயற்சியாகும்.

🔷2017 ஆம் ஆண்டில், சாங் மலை உச்சியை அடைந்த முதல் ஹாங்காங் பெண்மணி ஆனார். இதற்கு முன் எவரெஸ்ட்டை ஏறிய மிக விரைவான பெண் என்ற சாதனையை நேபாளி புன்ஜோ ஜாங்மு லாமா வைத்திருந்தார் அவர் 2018 இல் 39 மணி 6 நிமிடங்களில் ஏறினார்.

விருதுகள்

Princess of Asturias விருது..!!

🔷இந்தியப் பொருளாதார வல்லுநரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா குமார் சென் அவர்களுக்கு சமூக அறிவியல் எனும் பிரிவில் “Princess of Asturias” விருதானது வழங்கப் பட்டுள்ளது.

🔷இது ஸ்பெயின் நாட்டினுடைய முன்னணி (சிறந்த) விருதாகும்.

🔷“Poverty and Famines” எனும் இவரது சிறந்தப் படைப்பிற்காக இந்த விருதானது வழங்கப்பட்டு இருக்கிறது.

விளையாட்டு

2021 ஆம் ஆண்டு PGA சாம்பியன்சிப்..!!

🔷அமெரிக்கத் தொழில்முறை குழிப்பந்தாட்ட வீரரான பில் மைக்கேல்சன் தனது 50 ஆவது வயதில் 2021 ஆம் ஆண்டு PGA சாம்பியன்சிப்பினை வென்று வரலாறு படைத்து உள்ளார்.

🔷இந்த வெற்றியின் மூலம், PGA போட்டிகளின் வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியினை வென்ற வயதான விளையாட்டு வீரர் எனும் பெருமையை மைக்கேல்சன் பெற்றுள்ளார்.

🔷இது இவர் பெற்ற 6 ஆவது வெற்றியாகும்.

தமிழ்நாடு

மாநில தோ்தல் ஆணையராக வெ.பழனிக்குமாா் நியமனம்..!!

🔷தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையராக வெ.பழனிக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், வெளியிட்டாா். அவா் மாநிலத் தோ்தல் ஆணையாளராக பொறுப்பேற்கும் நாளில் இருந்து இரண்டாண்டு காலத்துக்கு அந்தப் பதவியை வகிப்பாா் என தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷கடந்த 1959-ஆம் ஆண்டு மாா்ச்சில் பிறந்த பழனிக்குமாா், 2001-ஆம் ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ்., ஆகப் பொறுப்பு வகித்தாா்.

🔷சுற்றுலா, பொதுத் துறை உள்பட பல்வேறு துறைகளில் பொறுப்புகளை வகித்துள்ளாா். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஓய்வு பெற்ற அவா், மாநிலத் தோ்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்தியா

ஆந்திராவில் மருத்துவமனைகள் துவங்கினால் 5 ஏக்கர் நிலம் இலவசம் - ஜெகன் மோகன் ரெட்டி..!!

🔷ஆந்திர மாநிலத்தில் மாவட்ட தலைநகர் மற்றும் மாநகராட்சிகளில் மருத்துவமனைகள் துவங்க முன்வருபவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்‍.

🔷விஜயவாடாவில் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் பேசிய அவர், மாநிலத்தில் உள்ள 13 மாவட்டத் தலைநகர் மற்றும் திருப்பதி, விஜயவாடா உள்ளிட்ட 3 மாநகராட்சிகள் என மொத்தம் 16 இடங்களில் தலா 30 முதல் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறினார்.

🔷மூன்றாண்டுக்குள் நூறு கோடி ரூபாய் முதலீடு செய்து மருத்துவமனை தொடங்க முன்வருபவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...