தினசரி நடப்பு நிகழ்வுகள் 28.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 28.8.2021 (Daily Current Affairs)

உலகம்

32000 அடி உயரத்தில் நடந்த ஓட்டப் பந்தயம் 4 ஆவது முறையாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் பிரெஞ்சு வீரர்..!!

🌺பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைத் தொடரில் நடந்த UTMB ஓட்டத்தில் பிரெஞ்சு வீரர் பிராங்கோ டிஹேன் முதலிடத்தையும் அமெரிக்க வீரர் கோர்ட்னி டாவால்ட்டர் 2 ஆம் இடத்தையும் பிடித்தனர்.

🌺32 ஆயிரம் அடி உயரத்தில் 170 கிலோ மீட்டர் தூரம் ஓடும் இந்த சாகச போட்டியில் பலர் பங்கேற்றனர். இந்த தூரத்தை 20 மணி 45 நிமிடங்களில் கடந்து பிராங்கோயிசும், 22 மணி 30 நிமிடத்தில் கடந்து கோர்ட்னி டாவால்டும் முதல் மற்றும் 2 ஆம் இடத்தை பிடித்து வெற்றிக்கனியை பறித்தனர்.

🌺2003 இல் இந்த போட்டிகள் துவங்கியதில் இருந்து தொடர்ந்து 4 ஆவது முறையாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் பிரெஞ்சு வீரர்பிராங்கோ டிஹேன்.

🌺அமெரிக்காவின் கோர்ட்னி டாவால்ட்டர், இந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றுள்ளார்.

போஸ்னினாவின் Red Bull Cliff Diving World Series போட்டியில் ஆஸி வீராங்கனை தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடம்..!!

🌺போஸ்னினாவின் மோஸ்டாரில் நடந்த Red Bull Cliff Diving World Series போட்டியில் ஆஸ்திரேலியாவின் ரியான்னன் இஃப்லான்ட் தொடர்ந்து 10 ஆவது முறையாக வெற்றி பெற்றார்.

🌺Neretva நதிக்கு குறுக்கே உள்ள பழைய பாலத்தில் அமைக்கப்பட்ட தளத்தில் 28 மீட்டர் உயரத்தில் இருந்து குதிக்கும் இந்த போட்டியில் 385 புள்ளி 10 புள்ளிகளுடன் ரியான்னன் இஃப்லான்ட் முதலிடத்தை வென்றார்.

🌺மெக்சிகோவை சேர்ந்த Adriana Jimenez இரண்டாம் இடத்தை பெற்றார். ஆண்கள் பிரிவில் பிரான்சை சேர்ந்த ஹன்ட் முதலிடத்தையும், ருமேனியாவின் கான்ஸ்டான்டின் போப்போவிசி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

செயற்கைக்கோள் / ஏவுகணை

2022 இறுதிக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்..!!

🌺நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் எரிபொருள் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.

🌺இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இந்தியாவில் இருந்து முதன் முதலாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக ‘ககன்யான்’ என்ற பெயரில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டப் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

🌺அதன் முக்கிய அம்சமாக, விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டுக்கான திரவ எரிபொருள் சோதனை நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் சுமார் 450 விநாடிகள் நடைபெற்றது. இந்த சோதனை வெற்றியடைந்ததாக இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வட்டு எறிதல் போட்டியில் பதக்கம்..!!

🌺டோக்யோ பாரா ஒலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலம் வென்றார்.

🌺வட்டு எறிதல் போட்டியில் எஃப்52 பிரிவில் 19.91 மீட்டர் தூரம் எறிந்து வினோத்குமார் வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

🌺டோக்யோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார் நிஷாத் குமார்..!!

🌺டோக்யோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளி வென்றார்.

🌺டி47 உயரம் தாண்டுதல் பிரிவில் 2.06 மீட்டர் தாண்டி நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஏற்கெனவே டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல் வெள்ளி வென்ற நிலையில் தற்போது மேலும் ஒரு பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

டேபிள் டென்னிஸ் - வெள்ளிப்பதக்கம் வென்றார் பவினாபென்..!!

🌺டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிா் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பவினாபென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

🌺டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிா் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பவினாபென் படேல் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா். பாரா ஒலிம்பிக் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியா் என்ற பெருமையை பெற்ற்றார்.

🌺இதன் முலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ள பவினாபென், அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 3 ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் மியாவ் ஜாங்கை வீழ்த்தினாா். இதுவரை மியாவை 11 முறை சந்தித்துள்ள பவினாபென்னுக்கு, இது முதல் வெற்றியாகும்.

🌺பவினாபென் அடுத்தபடியாக, இறுதிச்சுற்றில் உலகின் முதல்நிலையில் இருக்கும் மற்றொரு சீன வீராங்கனையான யிங் ஸௌவை எதிா்கொண்டார். மூன்றாவது போட்டியில் யிங் ஸௌ வென்றார். அத்துடன் யிங் ஸௌ போட்டியை வென்றார். யிங் ஸௌவிடம் கடும் சவாலை எதிா்கொண்ட இந்தியாவின் பவினாபென், தோல்வியை தழுவினார். இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியதை அடுத்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார் பவினா.

🌺தேசிய விளையாட்டு தினமான டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார் பவினா. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

🌺டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி என இரண்டிலும் இந்தியாவின் முதல் பதக்கத்தை வீராங்கனைகளே வென்று அசத்தியுள்ளனர் என்பது மேலும் சிறப்பு.

இங்கிலாந்தின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் - ஜோ ரூட் சாதனை..!!

🌺இந்தியாவுடனான 3 ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற்றதையடுத்து, இங்கிலாந்துக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

🌺இந்தியாவுடனான 3 ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் ஜோ ரூட் தலைமையில் 55 ஆவது முறையாகக் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்துக்கு இது 27 ஆவது டெஸ்ட் வெற்றி.

🌺முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் இங்கிலாந்துக்கு 26 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத்தந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...