தினசரி நடப்பு நிகழ்வுகள் 28.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 28.7.2021 (Daily Current Affairs)

சாதனைகள்

ஒலிம்பிக் ஆடவர் பளுதூக்குதல் மொத்தமாக 364 கிலோ எடை தூக்கி சீன வீரர் உலக சாதனை..!

⚡டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆடவர் பளுதூக்குதலில் 73 கிலோ எடைப் பிரிவில் சீன வீரர் Shi Zhiyong தனது முந்தைய உலக சாதனையை முறியடித்து புது சாதனை படைத்தார்.

⚡73 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய Shi Zhiyong ஓட்டுமொத்தமாக 364 கிலோ எடையை தூக்கி தனது பழைய உலக சாதனையான 363 கிலோவை முறியடித்து தங்கம் வென்றார்.

⚡ஏற்கனவே Shi Zhiyong, கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்சில் 69 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கி அப்போதைய உலக சாதனையை முறியடித்து தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

⚡வெனிசூலா வீரர் Julio Ruben Mayora Pernia வெள்ளிப் பதக்கமும், இந்தோனேசியாவின் Rahmat Erwin Abdullah வெண்கலமும் வென்றனர்.

விருதுகள்

தகைசால் தமிழர் விருதுக்கு மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்வு..!!

⚡தகைசால் தமிழர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

⚡தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், சுதந்திரதின விழாவின்போது தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

⚡அதன்படி மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, அண்மையில் 100 வயதை அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்குத் “தகைசால் தமிழர்" விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.

விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வோருக்கு 3 கோடி ரூபாய் பரிசு - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..!!

⚡ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு சலுகைகளை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

⚡தங்கப் பதக்கம் வெல்வோருக்கு 3 கோடி ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்வோருக்கு ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

⚡இதேபோல தடகள போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கும் பரிசுத்தொகையை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

⚡டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ரயில்வே சார்பில் 25 விளையாட்டு வீரர்கள் 5 பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு பிசியோதெரபிஸ்ட் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

முக்கிய இடங்கள்

உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலவிரா..!!

⚡உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலவிரா சேர்க்கப்பட்டுள்ளது.

⚡உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலவிரா நகரை யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் கலாசார அமைப்பு சேர்த்துள்ளது.

⚡தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள ராமப்பா கோயில் உலக பாரம்பரிய பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்டது. குறிப்பிடத்தக்கதாகும்.

⚡இந்நிலையில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளமாக விளங்கும் தோலவிரா நகரை உலக பாரம்பரிய பட்டியலில் யுனெஸ்கோ ​சேர்த்துள்ளது. இத்துடன் சேர்த்து உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் நம் நாட்டின் 40 இடங்கள் இடம் பெற்றுள்ளன.

⚡தோலவிரா என்பது சதுப்புநிலமாக பாலைவனமாக விரிந்து பரந்து கிடக்கும் குஜராத்தின் ரான் ஆப் கட்ச் என்ற பகுதியின் நடுவே இருக்கிறது. தோலவிரா நகரத்தின் கட்டமைப்பு இன்றைய நவீனத்தைவிட மிக அற்புதமானதாக திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கிறது. சிந்துசமவெளி மக்கள் எப்படியான உச்சநிலை பண்பாட்டில் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரமாக பாலைவனத்துக்கு நடுவே சாட்சியமாக தோலவிரா உள்ளது.

⚡இந்நிலையில் சிந்து சமவெளி நாகரிக மக்களின் வாழ்விடங்களில் ஒன்றான குஜராத்தின் தோலவிரா தற்போது யுனெஸ்கோவினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் தோலவிரா 40 ஆவது இடத்தை பிடித்துள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...