விளையாட்டு
தேசிய தடகளம் - 400 மீ ஓட்டத்தில் தமிழகத்துக்கு வெண்கலம்..!!
🔷தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டா் ஓட்டத்தில் தமிழகத்தின் வீரமணி ரேவதி 53.71 விநாடிகளில் இலக்கை எட்டி 3 ஆம் இடம் பிடித்தாா்.
🔷கா்நாடகத்தின் பிரியா ஹப்பதனஹள்ளி (53.29 விநாடிகள்), பூவம்மா (53.54 விநாடிகள்) ஆகியோா் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனா்.
🔷10,000 மீட்டா் ஓட்டத்தில் ராஜஸ்தானின் பூஜா ஹரிஜான் (35.29 நிமிடம்), உத்தர பிரதேசத்தின் பூலான் பால் (37.30 நிமிடம்), ஜோதி (38.23 நிமிடம்) ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.
🔷ஈட்டி எறிதலில் உத்தர பிரதேசத்தின் அன்னு ராணி (62.83 மீ), ராஜஸ்தானின் சஞ்சனா சௌதரி (52.65 மீ), ஹரியாணாவின் புஷ்பா ஜகாா் (52.48 மீ) ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் - தங்கம் வென்றாா் ராஹி சா்னோபத்..!!
🔷குரோஷியாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ராஹி சா்னோபத் தங்கப் பதக்கம் வென்றாா்.
🔷டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் நிலையில் ராஹி சா்னோபத் வென்றுள்ள இந்தத் தங்கம் அவருக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு இது முதல் தங்கமாகும். முன்னதாக ஒரு வெள்ளி, இரு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
🔷மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் இறுதிச்சுற்றில் ராஹி சா்னோபத் 39 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். பிரான்ஸின் மெதில்டே லமோலே 31 புள்ளிகளுடன் வெள்ளியும், ரஷியாவின் விடாலினா பத்சராஷ்கினா 28 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா். இப்பிரிவில் பங்கேற்றிருந்த மற்றொரு இந்திய வீராங்கனையான மானு பாக்கா் 11 புள்ளிகளுடன் 7 ஆம் இடம் பிடித்து ஏமாற்றமளித்தாா்.
🔷இதனிடையே, மகளிருக்கான 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த், அஞ்சும் முட்கில் ஆகிய இருவருமே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினா். தகுதிச்சுற்றில் சாவந்த் 1,168 புள்ளிகளுடன் 20 ஆம் இடமும், முட்கில் 1,162 புள்ளிகளுடன் 32 ஆம் இடமும் பிடித்தனா்.
இந்தியா
ரேபிஸ் இல்லாத முதல் மாநிலமாக கோவா திகழ்கிறது..!!
🔷ரேபிஸ் இல்லாத நாட்டின் முதல் மாநிலமாக கோவா மாறிவிட்டது என்று முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த் அறிவித்தார்.
🔷கடந்த மூன்று ஆண்டுகளில் இருந்து மாநிலத்தில் ஒரு ரேபிஸ் நோய் கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்று முதல்வர் தெரிவித்தார்.
🔷மிஷன் ரேபிஸின் குழு தனது பணியை மிகவும் திறம்பட செய்து வருகிறது, மேலும் நாய்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தது.
கேரளாவுக்கு 125 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவிக்கு உலக வங்கி ஒப்புதல்..!!
🔷கேரளாவுக்கு 125 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவிக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
🔷இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்ற பாதிப்புகள், நோய் வெடிப்புகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக மாநிலத்தில் தயாராக இருப்பதற்கு ‘Resilient Kerala Program’ திட்டத்திற்கு 125 மில்லியன் டாலர் நிதி உதவிக்கு உலக வங்கி நிர்வாக இயக்குநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
🔷புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கியின் International Bank for Reconstruction and Development (IBRD) 125 மில்லியன் டாலர் கடன் இறுதி முதிர்வு 14 ஆண்டுகள் ஆகும், இதில் ஆறு ஆண்டுகள் சலுகை காலம் உள்ளது.
காளஹஸ்தி சிவன் கோயில் அன்ன பிரசாதத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று..!!
🔷ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயில் அன்ன பிரசாதத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
🔷ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தில் உள்ள, பஞ்சபூதத் தலங்களில் வாயு தலமாக விளங்கும் காளஹஸ்தி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா் திருக்கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் அன்னதானம் வழங்கி வருகிறது. நாளொன்றுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தா்களுக்கு இங்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதானம் தரமாகவும், சுகாதாரமான முறையிலும் வழங்கப்பட்டு வருவதால் அதற்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
🔷எச்ஒய்எம் நிறுவன பிரதிநிதிகள் இந்த சான்றிதழை காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டியிடம் வழங்கினா். அவா் கோயில் செயல் அதிகாரி பெத்திராஜுவிடம் ஐஎஸ்ஓ சான்றிதழை வழங்கினாா். கோயிலில் வழங்கும் அன்னதானத்துக்கு தரச்சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.
🔷மேலும் கோயிலில் பாதுகாப்பை அதிகரிக்க இரு வாயில்களிலும் உடைமைகளை பரிசோதிக்கும் ஸ்கேனா்கள் ரூ.34 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தா்களின் உடைமைகள் நன்றாக பரிசோதிக்கப்பட்டு பின்னா் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.