தினசரி நடப்பு நிகழ்வுகள் 27.8.2021 ( Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 27.8.2021 ( Daily Current Affairs)

நியமனங்கள்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக நியமனம்..!

💠தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைக் கூடுதல் பொறுப்பாகப் பஞ்சாப் ஆளுநராகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

💠குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூடுதல் பொறுப்பாகப் பஞ்சாப் மாநில ஆளுநராகவும் செயல்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ஒன்றிய ஆட்சிப் பகுதியான சண்டிகரின் நிர்வாகியாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நபர்கள்

5500 கோடி ரூபாயை ஊதியமாக பெறுகிறார் ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி..!!

💠ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் ஆண்டு ஊதியம் மற்றும் போனசாக 5500 கோடி ரூபாயைப் பெறுகிறார்.

💠ஆப்பிள் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்சிடம் இருந்து தலைமைச் செயல் அதிகாரி பதவியைப் பத்தாண்டுக்கு முன் டிம் குக் பெற்றார்.

💠நிறுவனத்தின் இலாபம், பங்கு மதிப்பு உயர்வின் அடிப்படையில் அவருக்கு ஊதியம் கணக்கிடப்படுகிறது. இவரது பதவிக்காலத்தில் ஆப்பிள் பங்கு மதிப்பு 11 மடங்கு உயர்ந்துள்ளது.

💠கடந்த மூன்றாண்டுகளில் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துள்ளதால் அவர் ஊதியம் மற்றும் போனசாக ஐயாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் மதிப்புக்கு 50 இலட்சம் பங்குகளைப் பெறுகிறார்.

கண்டுபிடிப்பு

7,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் டிஎன்ஏவில் புதிய மனித மரபணு கண்டுபிடிப்பு..!!

💠இந்தோனேசியாவில் 7,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து புதிய மனித மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

💠இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 7,200 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடி வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து புதிய மனித மரபணுவை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகில் வேறு எந்த பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்படாத இந்த மனித மரபணு, தனித்துவமானது என ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

💠தெற்கு சுலாவேசியில் சுண்ணாம்பு குகையில் கண்டெடுக்கப்பட்ட 17 அல்லது 18 வயது இளம் பெண்ணின் எலும்புகள் ஒப்பிட்டளவில் சேதமாகாமல் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, வயிற்றில் இருக்கும் குழந்தை படுத்திருப்பது போன்ற நிலையில் அப்பெண் புதைக்கப்பட்டிருக்கிறாள்.

💠வேட்டையாடி வாழ்ந்த டோலியன் மக்கள் பயன்படுத்திய கலைப்பொருட்களிலிருந்து இந்த எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெற்கு சுலாவேசி பகுதியின் முதல் நாகரிகமாக டோலியன் மக்கள் கருதப்படுகின்றனர். 2015 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவருகிறது.

💠இந்தோனேசியா மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஆடம் ப்ரூம் இதுகுறித்து கூறுகையில், "ஆசியாவின் முக்கிய நிலபரப்புக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய தீவு பகுதியில் முதல்முறையாக இம்மாதிரியாக பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் டிஎன்ஏ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

💠ஈரப்பதமான வெப்ப மண்டலங்களில் பண்டைய கால மனிதர்களின் டிஎன்ஏ கண்டுபிடிப்பது அரிதான ஒன்று. எனவேதான், இதை மிகவும் அதிர்ஷ்டமான கண்டுபிடிப்பாக கருதுகிறேன்" என்றார். வெப்ப மண்டல வானிலையில் டிஎன்ஏக்கள் எளிதாக அழுகுவிடும் என்பதால் இங்கு அகழ்வாராய்ச்சிகள் நடத்துவது மிகவும் சவால் நிறைந்ததாக கருதப்படுகிறது.

இந்தியா

உலகிலேயே அதிக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ள நகர பட்டியல்..!!

💠உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தியுள்ள நகராக இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலிடத்திலும் சென்னை 3 ஆவது இடத்திலும் உள்ளன.

💠அதிக எண்ணிக்கையில் கண்காணிப்புக் கேமராக்களை நிறுவியுள்ள உலகின் 20 நகரங்களை போர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. இதில் சராசரியாக ஒரு சதுர மைல் பரப்பளவில் ஆயிரத்து 826 கேமராக்கள் பொருத்தி டெல்லி முதலிடத்தில் உள்ளது.

💠பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஒரு சதுர மைல் பரப்பளவில் ஆயிரத்து 138 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு சதுர மைல் பரப்புக்கு 610 கேமராக்களைப் பொருத்திய சென்னை மூன்றாமிடத்தில் உள்ளது.

💠சாங்காய், சிங்கப்பூர் நகரங்கள் முறையே ஏழாம் எட்டாமிடங்களில் உள்ளன. மாஸ்கோ, நியூயார்க், பெய்ஜிங் நகரங்கள் முறையே 13, 14, 15ஆம் இடங்களில் உள்ளன. சதுர மைலுக்கு 157 கேமராக்களுடன் மும்பை 18 ஆவது இடத்தில் உள்ளது.

விளையாட்டு

பாா்சிலோனா ஓபன் செஸ் - சேதுராமன் சாம்பியன்..!!

💠பாா்சிலோனா ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டா் எஸ்.பி. சேதுராமன் சாம்பியன் பட்டம் வென்றாா். மற்றொரு இந்திய வீரா் காா்த்திகேயன் முரளி மூன்றாவது இடத்தைப் பெற்றாா்.

💠பாா்சிலோனாவில் நடைபெற்ற இப்போட்டியில் 9 மற்றும் இறுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் சேதுராமன் 7.5 புள்ளிகளை குவித்து ரஷிய வீரா் டேனில் யுஃபாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா். 9 சுற்றுகளிலும் சேதுராமன் தோல்வியை சந்திக்கவில்லை. 6 ஆட்டங்களில் வெற்றியும் 3 ஆட்டங்களில் டிராவும் கண்டாா்.

💠5 ஆவது சுற்றில் காா்த்திகேயனுடன் டிரா கண்ட சேதுராமன் கடைசி மூன்று சுற்றுகளில் அபார வெற்றி பெற்றாா். முரளி 6 ஆட்டங்களில் வெற்றி, 2 டிரா, 1 தோல்வியைப் பெற்றாா்.


Share Tweet Send
0 Comments
Loading...