தினசரி நடப்பு நிகழ்வுகள் 27.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 27.7.2021 (Daily Current Affairs)

விளையாட்டு

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குட்டிநாடு..!

💠இங்கிலாந்து ஆட்சியின் கீழ் வடக்கு அட்லான்டிக் கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு பெர்முடா. அந்த நாட்டில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை வெறும் 63 ஆயிரம் தான். அவர்கள் 2 பேரை டோக்கியோ ஒலிம்பிக்குக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் தங்கப்பதக்கத்தை வென்று வியப்பூட்டியுள்ளார். அவரது பெயர் டப்பி புளோரா.

💠பெண்களுக்கான டிரையத்லானில் (நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகிய 3 பந்தயங்களை உள்ளடக்கியது) 33 வயதான டப்பி 1 மணி 55 நிமிடம் 36 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்க மேடையில் ஏறினார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தங்கத்தை ருசித்த குறைந்த மக்கள் தொகையை கொண்ட நாடு என்ற பெருமையை பெர்முடா பெற்றது.

💠பெர்முடா ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது இது 2 ஆவது நிகழ்வாகும். இதற்கு முன்பு அந்த நாட்டைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் கிளாரென்ஸ் ஹில் 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இருந்தார்.

பிரமோத் பகத் 2019 ஆம் ஆண்டின் மாற்று திறனாளி விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்டார்..!!

💠2019 ஆம் ஆண்டி சிறந்த மாற்றுத்திறனாளி வீரர் என்ற கவுரவத்தை, உலகின் நம்பர் 1 மாற்றுத்திறனாளி இறகுபந்து வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் அவர்கள் பெற்றுள்ளார்.

💠இந்திய விளையாட்டு கௌரவங்கள் ஆண்டுதோறும் RPGS குழுமத்தால் விராட் கோலி அறக்கட்டளையுடன் இணைந்து இந்தியாவின் சிறந்த விளையாட்டு ஆளுமைகளுக்கு வழங்கப்படும் விருதுகள் ஆகும். இந்த விருதுகள் 2017 இல் நிறுவப்பட்டன.

உலகம்

வியாழனின் ஐரோப்பா நிலவினை ஆராய செலுத்தப்படும் உலகின் முதல் விண்கலம்..!!

💠வியாழனின் நிலவான “ஐரோப்பா” வினை ஆராய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, “ஐரோப்பா களிப்பர் மிசன்” என்ற விண்கலத்தை ஏவ உள்ளது.

💠இதற்காக எலான் மஸ்கின், “ஸ்பேஸ் எக்ஸ்” விண்வெளி நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது நாசா. வியாழனின் ஐரோப்பா நிலவினை ஆராய செலுத்தப்படும் உலகின் முதல் விண்கலம் இதுவாகும்.

💠2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்தியா

ரஷ்ய கடற்படை தின கொண்டாட்டங்களில் ஐஎன்எஸ் தபார் பங்கேற்றது..!!

💠இரஷ்ய கடற்படையின் 325 ஆவது கடற்படை நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் தபார் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்கை 2021 ஜூலை 22 அன்று சென்றடைந்தது.

💠இரஷ்ய கூட்டமைப்பிற்கான இந்திய தூதர் திரு டி பி வெங்கடேஷ் வர்மா கப்பலை பார்வையிட்டார். கப்பலின் தலைமை அதிகாரி அவருக்கு தற்போதைய பயணம் குறித்து எடுத்துரைத்தார். நமது கடல் பகுதிகளை காப்பதிலும், இந்திய-ரஷ்ய உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்திய கடற்படை ஆற்றி வரும் பங்கை தூதர் பாராட்டினார்.

💠ரஷ்ய கடற்படையின் பால்டிக் பிரிவின் துணை தளபதி, துணை அட்மிரல் செர்ஜெய் யெலிசெயேவ் 2021 ஜூலை 23 அன்று தபாரை பார்வையிட்டார். அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு கடற்படைகளுக்கிடையேயான வலுவான நட்பு குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

💠செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள வரலாறு சிறப்புமிக்க நினைவுக் கல்லறையில் கப்பலின் தலைமை அதிகாரி கேப்டன் மகேஷ் மங்கிபுடி அஞ்சலி செலுத்தினார்.

💠ஜூலை 25 அன்று, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதின் ஆய்வு செய்த ரஷ்ய கடற்படையின் 325 ஆவது ஆண்டு விழாவில் தபார் பங்கேற்றது.

💠மேலும் இந்தியா மற்றும் ரஷ்ய கடற்படைகள் இணைந்து விரைவில் “இந்த்ரா” (EXERCISE INDRA, NAVAL EXRCISE BETWEEN INDIA AND RUSSIA) போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளன.


Share Tweet Send
0 Comments
Loading...