தினசரி நடப்பு நிகழ்வுகள் 27.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 27.6.2021 (Daily Current Affairs)

உலகம்

கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.

🔷ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்றைய தினம் விமானம் மூலம் கிரீஸ் நாட்டிற்குச் சென்றடைந்த அவர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் நிகோஸ் டெண்டியாஸை, சந்தித்துப் பேசினார்.

🔷இதனை தொடர்ந்து கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதேன்ஸ் நகரில், அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிகோஸ் டெண்டியாஸ் இருவரும் திறந்து வைத்தனர். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், மகாத்மா காந்தியின் போதனைகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய ஆயுா்வேத மருத்துவா்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா..!!

🔷இந்தியாவைச் சோ்ந்த இரு ஆயுா்வேத மருத்துவா்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கோல்டன் விசா(நுழைவு இசைவு) வழங்கியுள்ளது. அதன்படி, அந்நாட்டில் அவா்கள் நீண்ட காலம் தடையின்றி வசிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

🔷கேரளத்தைச் சோ்ந்த டாக்டா் ஷியாம் விஸ்வநாதன் பிள்ளை, டாக்டா் ஜஸ்னா ஜமால் ஆகிய இருவருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமை ஆணையம் கோல்டன் விசா வழங்கி வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

பொலிவுரு நகரம் திருப்பதிக்கு 5 விருதுகள்..!!

🔷நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்மாா்ட் சிட்டிகளில் (பொலிவுரு நகா்) திருப்பதியும் ஒன்று. அதனால் திருப்பதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இங்கு சுத்தம் சுகாதாரமும் நன்றாகப் பேணப்பட்டு வருகிறது.

🔷இதற்காக ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மாநகரம் மத்திய அரசிடமிருந்து ஒரு விருதை பெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக 5 விருதுகளை பெற்றுள்ளது.

🔷இந்தூா், சூரத் நகரங்களுக்கு அடுத்து 5 விருதுகளைப் பெற்ற ஒரே ‘பொலிவுரு நகா்’ திருப்பதி என்ற பெருமையை பெற்றுள்ளது. அதில் சுத்தம் சுகாதாரம் பேணுதற்கும், இ-ஹெல்த் பிரிவுகளின் கீழ் நாட்டின் முதலிடமும், சிறந்த நகரம் மற்றும் எகானமி பிரிவுகளின் கீழ் இரண்டாம் இடமும், நகா்ப்புற சுற்றுச்சூழல் பிரிவின் கீழ் 3-ஆம் இடத்தையும் தக்க வைத்து கொண்டுள்ளது. முதன் முறையாக திருப்பதி நகருக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் அரசுப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை - ஆந்திரா அரசு அறிவிப்பு..!!

🔷ஆந்திர மாநிலத்தில், குரூப் 1 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத் தேர்வு நடத்தப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

🔷இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆந்திர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இனி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷தேர்வு நடைமுறையின் மீதான வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்கும், நம்பிக்கையை உறுதி செய்யும் வகையிலும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

உலக கோப்பை வில்வித்தை - இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார்..!!

🔷ஆண்களுக்கான ‘காம்பவுண்ட்’ தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா, அமெரிக்க வீரர் கிரிஸ் ஸ்கேப்பை எதிர்கொண்டார்.

🔷உலக கோப்பை வில்வித்தை போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்சில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ‘காம்பவுண்ட்’ தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா, அமெரிக்க வீரர் கிரிஸ் ஸ்கேப்பை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த போட்டியின் முடிவில் இருவரும் சமநிலை வகித்தனர்.

🔷இதனை அடுத்து நடந்த டைபிரேக்கரில் அபிஷேக் வர்மா கிரிஸ் ஸ்கேப்பை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். உலக கோப்பை போட்டியில் அபிஷேக் வர்மா தங்கம் வெல்வது இது 2ஆவது முறையாகும். ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு போலந்தில் நடந்த உலக போட்டியிலும் வென்று இருந்தார்.

தரவரிசை

இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால் உலகத் தரவரிசையில் முதலிடம்..!!

🔷ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் அமித் பங்கால் 52 கிலோ எடைப்பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

🔷ஆசியக் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் 52 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

🔷இதனால் அடுத்த மாதம் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார். அத்துடன் பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

உலக வில்வித்தை தரவரிசையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி முதலிடம்..!!

🔷வில்வித்தைப் போட்டிக்கான உலக தரவரிசையில் இந்திய வீராங்கனை தீபிக குமாரி நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.

🔷பாரிஸ் உலக கோப்பை வில்வித்தை போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் முதலிடத்திற்கு முன்னேறினார். உலக கோப்பை வில்வித்தைப் போட்டியில் ஒற்றையர், பெண்கள் குழு மற்றும் கலப்பு குழு பிரிவுகளில் தீபிகா குமாரி தங்கம் வென்றார்

🔷இதன் மூலம் ஒட்டுமொத்த உலக தரவரிசை பட்டியலில் கிடுகிடுவென புள்ளிகள் உயர்வை சந்தித்து முதல் இடத்துக்கு முன்னேறினார். ரஷ்ய வீராங்கனை elena osipova, அமெரிக்க வீராங்கனை Mackenzie Brown ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல் முறையாக முதல் இடத்துக்கு முன்னேறினார்.


Share Tweet Send
0 Comments
Loading...