தினசரி நடப்பு நிகழ்வுகள் 26.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 26.8.2021 (Daily Current Affairs)

சாதனைகள்

அதிக பாரம் சுமந்து செல்லும் சரக்கு விமானத்தை இழுத்து சென்று 8 உக்ரைன் வீரர்கள் தேசிய சாதனை..!

💠உக்ரைனில் உலகின் பெரிய மற்றும் அதிக பாரம் சுமந்து செல்லும் சரக்கு விமானத்தை 4 புள்ளி 30 மீட்டர் தூரம் இழுத்து 8 பேர் சாதனை படைத்துள்ளனர்.

💠250 டன் சரக்கை சுமந்து 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து கின்னஸ் புத்தகத்தில் இருக்கும் Antonov-225 என்றழைக்கப்படும் Mriya சரக்கு விமானத்தை இழுக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

💠8 பேர் சேர்ந்து ஒரு நிமிடம் 13 விநாடிகளில் 4 புள்ளி 30 மீட்டர் அளவிற்கு விமானத்தை நகர்த்தினர்.

💠தேசிய சாதனையாக அறிவிக்கப்பட்ட நிலையில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு

18 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 25ஆயிரம் ரொக்கத்துடன் கவிமணி விருது..!!

💠குழந்தை எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் 25ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கவிமணி என்ற பெயரில் விருது வழங்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

💠இது குறித்த பள்ளிக்கல்வி துறையின் கொள்கை விளக்க குறிப்பில், 18வயதிற்கு உட்பட்ட சிறார்களின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 3 சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து விருது வழங்கப்படவுள்ளது.

💠அரசுப் பள்ளிகளில் பாரம்பரிய கலைகளையும், தற்காப்பு கலைகளையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க உரிய பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு குப்பையை 48 நாளில் உரமாக்கும் பைப் கம்போசிங் திட்டம்..!!

💠தமிழகத்தில் முதன்முறையாக வீடுகளில் உருவாகும் மக்கும் குப்பைகளை பைப் கம்போசிங் மூலம் வீட்டிலேயே உரமாக்கும் திட்டம் திருநெல்வேலி மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.

💠நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள், இவற்றிலிருந்து நாள்தோறும் 170 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகிறது. அதில் 102 மெட்ரிக் டன் மக்கும் தன்மையுடையது. 68 மெட்ரிக் டன் மக்காத தன்மையுடையது. மேற்படி 102 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகளை ராமையன்பட்டி குப்பை கிடங்கிற்கு செல்லாமல் தடுக்கும் பொருட்டு நெல்லை மாநகரில் 45 இடங்களில் (MCC ) எனப்படும் "நுண் உர மையங்கள்" மூலம் குப்பைகள் உரமாக்கப்படுகிறது.

💠இந்தநிலையில் பொதுமக்கள், தங்கள் வீட்டு கழிவுகளை தாங்களே கையாண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு நாமும் பொறுப்பு என்ற வகையில் அவரவர் வீட்டில் உருவாகும் மக்கும் கழிவுகளை உரமாக்கும் வகையில் திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்தில் "வி.எம்.சத்திரம் மேம்பாட்டு அமைப்பு" மூலம் இளைஞர்களின் ஒத்துழைப்புடன் 500 வீடுகளில் பைப் கம்போஸ்டிங் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக 150 வீடுகளில் இத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

💠இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட ஆட்சியர், மிகவும் குறைந்த செலவில் இத்திட்டத்தை ஒவ்வொருவர் வீட்டிலும் செயல்படுத்தலாம் என்றும் இதன்மூலம் மக்கும் குப்பைகள் பொதுவெளியில் டன் கணக்கில் சேராமல் அவரவர் வீட்டிலேயே உரமாக மாற்றப்படுவதால் வீட்டில் தேவையான காய்கறி தோட்டங்களை மாடித் தோட்டங்களை உருவாக்கி கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு..!!

💠பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

💠தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

💠அதேபோல, பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதாவை பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

செயற்கைக்கோள் / ஏவுகணை

மறுசுழற்சி முறையில் தயாரான ராக்கெட்டை ஏவியது புளூ ஆரிஜின் நிறுவனம்..!!

💠அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ்சின் ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், சார்பில் முற்றிலும் மறுசுழற்சி முறையில் தயாரான ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

💠அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ்சில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப்பட்டு புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு 11 நிமிடங்களுக்கு பின் இரு பிரிவாக தரையிரக்கப்பட்டன.

💠தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக ராக்கெட் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ராக்கெட்டின் பூஸ்டர் மற்றும் கேப்சூல் தனித் தனியாக பிரிக்கப்பட்டு தரையிறக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் ஜெப் பெசாஸ் குழுவினரின் விண்வெளி பயணத்திற்கு பின் அந்நிறுவனம் செலுத்திய முதல் ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

புது வாக்காளா்களுக்கு அடையாள அட்டையுடன் தோ்தல் ஆணையத்தின் கடிதம் - புதிய திட்டம் அறிமுகம்..!!

💠புது வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டையுடன், தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பும் புதிய திட்டத்தை தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

💠புதிய வாக்காளா்களுக்கான வழிகாட்டுதல்கள், நெறிமுறையுடன் வாக்களிப்பதற்கான உறுதிமொழி, வாழ்த்துச் செய்தி ஆகியவை அந்தக் கடிதத்தில் இடம்பெற்றிருக்கும் என்று தோ்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

💠முறைப்படுத்தப்பட்ட வாக்காளா்களுக்கான கல்வி மற்றும் வாக்களிப்பில் பங்கேற்பது குறித்து இரண்டு நாள் பயிலரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இதில், புது வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டையுடன் தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் அனுப்பும் புதிய திட்டத்தை, தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் ஆகியோா் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தனா்.

காசநோய் தடுப்பு கூட்டுக் குழு தலைவராக அமைச்சா் மன்சுக் மாண்டவியா பொறுப்பேற்பு..!!

💠மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, காசநோய் தடுப்பு கூட்டுக் குழுவின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.

💠2024 ஆம் ஆண்டு வரை அவா் இந்தப் பொறுப்பை வகிப்பாா். ஐக்கிய நாடுகளின் காசநோய் இலக்கை 2022 ஆம் ஆண்டுக்குள் அடையவும், 2030 ஆம் ஆண்டுக்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைல்கல் தருணத்தை அடையவும், காசநோய் தடுப்பு கூட்டுச் செயலகம், கூட்டாளிகள் மற்றும் காசநோய் சமூகத்தின் முயற்சிகளை அவா் முன்னெடுத்துச் செல்வாா்.

💠இந்த நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, ‘வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலும் ஒழிக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினாா்.

💠இந்தக் குழுவின் தலைவா் பதவியில் இருந்து விடைபெறும் முன்னாள் சுகாதார அமைச்சா் டாக்டா் ஹா்ஷ்வா்தனுக்கு நன்றி தெரிவித்த மன்சுக் மாண்டவியா, அவரது வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டினாா்.

💠காசநோய் தடுப்பு கூட்டுக் குழுவின் துணைத் தலைவராக பொறுப்பேற்கவுள்ள ஆஸ்டின் அரின்ஸுக்கு உறுப்பினா்கள் வரவேற்பளித்தனா். அவா் 2022, ஜனவரி 1 ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பாா்.


Share Tweet Send
0 Comments
Loading...