தினசரி நடப்பு நிகழ்வுகள் 26.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 26.6.2021 (Daily Current Affairs)

சாதனைகள்

மலையேற்ற சைக்கிள் பந்தய வீரரின் புதிய சாதனை - 3 ஆயிரம் அடி உயரமுள்ள மலை மீது சைக்கிளில் பயணம்..!!

🔷இத்தாலியில் மலையேற்ற சைக்கிள் பந்தய வீரர் ஒருவர், 3 ஆயிரம் அடி உயரத்திலுள்ள கரடு முரடான மலை மீது அநாயசமாக சைக்கிள் ஓட்டி அசத்தினார்.

🔷400 மீட்டர் தடை தாண்டிய சைக்கிள் பந்தயம் மற்றும் சைக்கிள் மூலம் உயரம் தாண்டும் பந்தயம் உள்ளிட்டவற்றுக்காக இரண்டு முறை கின்னஸ் சாதனை படைத்த 37 வயதான டாம் ஓஹ்லர் (Tom Oehler ), ஆஸ்திரிய இத்தாலிய மலைத்தொடரான டோலோமைட்டுகளுக்கு சவாலான இத்தாலிய பாதைகளை கண்டுபிடிப்பதற்காகவே உயரமான மலைப்பாதையில் பயணித்ததாக தெரிவிக்கிறார்.

ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனையான கெய்லீ மெக்கவுன் புதிய உலக சாதனை..!!

🔷ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனையான கெய்லீ மெக்கவுன் என்பவர் 100 மீட்டர் அளவிலான பின்னோக்கி (backstroke) நீந்தும் நீச்சல் போட்டியில் முன்பு மேற்கொள்ளப் பட்ட ஒரு உலகச் சாதனையை முறியுடித்துள்ளார்.

🔷தெற்கு ஆஸ்திரேலிய நீர்சூழ் மையத்தில் இந்தச் சாதனையானது நிகழ்த்தப்பட்டது. இவர் இந்தத் தொலைவை வெறும் 57.45 விநாடிகளில் நீந்தி சாதனை ஒன்றைப் படைத்து உள்ளார்.

🔷இதற்கு முந்தைய உலகச் சாதனையானது 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ரேகன் ஸ்மித் என்பவரால் (57.57 விநாடிகளில்) நிகழ்த்தப்பட்டது.

இந்தியா

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கி கப்பல்..!!

🔷உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் ஒன்று அடுத்தாண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கபட உள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கி கப்பல் என்ற பெருமையை ஐஎன்எஸ் விக்ராந்த் பெற்றுள்ளது.

🔷இந்த கப்பல் கேரள மாநிலம் கொச்சி கடற்படைத் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேரில் ஆய்வு செய்தார்.

🔷இந்தியா தயாரித்துள்ள முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், அடுத்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவதையொட்டி இந்த கப்பல் கடற்படையில் சேர்க்கப்படும். சுயசார்பு இந்தியாவின் சிறந்த உதாரணமாக இந்த விமானம் தாங்கி கப்பல் இருக்கும். இந்த கப்பல் மூலம் இந்தியா கடல்சார் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும்.

உலகம்

பாகிஸ்தானில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய சுகர் - ஃப்ரீ மாம்பழங்கள் அறிமுகம்..!!

🔷நீரிழிவு நோயாளிகள்ளும் சாப்பிடும் வகையில் சர்க்கரை அளவு குறைவாக கொண்ட புதுவகை மாம்பழங்கள் பாகிஸ்தான் நாட்டில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

🔷மாம்பழங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு காரணமாக, நீரழிவு நோயாளிகள் அதிகம் சாப்பிட முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, Sindh மாகாணத்தின் Tando Allahyar நகரில் உள்ள M H Panhwar Farm என்ற தனியார் வேளாண் பண்ணையை சேர்ந்த Ghulam Sarwar இந்த sugar free மாம்பழங்களை உருவாக்கியுள்ளார்.

🔷Sonaro, Glenn, மற்றும் Keitt என 3 வகைகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாம்பழங்கள், உள்ளூர் கடைகளில் கிலோ 150 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

🔷சாதாரண மாம்பழங்களில் சர்க்கரை அளவு 15 சதவீதமாக உள்ள நிலையில் இந்த புதுவகை மாம்பழங்களில் சர்க்கரை அளவு 4 முதல் 5 சதவீதம் மட்டுமே உள்ளது தெரியவந்துள்ளது.

ஒட்டகச்சிவிங்கியை விட உயரமான ஒரு பெரிய வகை காண்டா மிருகத்தின் புதைபடிவம் கண்டுபிடிப்பு..!!

🔷வடமேற்கு சீனாவில் விஞ்ஞானிகள் 2.65 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த “ஒட்டகச்சிவிங்கியை விட உயரமான” ஒரு பெரிய வகை காண்டா மிருகத்தின் புதைபடிவ ஆதாரங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

🔷இது நம் பூமிக்கோளில் சுற்றித் திரிந்து உலாவிய மிகப்பெரிய பாலூட்டிகளில் ஒன்றாகும். இத்தகவல் “திஜர்னல் கம்யூனிகேஷன்ஸ் பயாலஜி” (The Journal Communications Biology) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காண்டா மிருகத்தின் பெயர் பராசெராதேரியம் லிங்க்சியன்ஸ் (Paraceratheriumlinxiaense) என்பதாகும்.

🔷இதன் எடை 21 டன். இந்த காண்டாமிருகம், சுமார் 2.65 கோடி ஆண்டுகளுக்கு முன்வந்திருக்கலாம் என அனுமானிக்கின்றனர்.

விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - சவுரப், மனு பாக்கர் வெள்ளி பதக்கம் வென்றனர்..!!

🔷உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் குழு போட்டியில் சவுரப் சவுத்ரி மற்றும் மனு பாக்கர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.

🔷உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி குரோசியா நாட்டின் ஓசிஜெக் நகரில் நடந்து வருகிறது. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட சவுரப் சவுத்ரி மற்றும் மனு பாக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

🔷அவர்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.


Share Tweet Send
0 Comments
Loading...