தினசரி நடப்பு நிகழ்வுகள் 26.5.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 26.5.2021 (Daily Current Affairs)

இந்தியா

பொறியியல் பாடத்திட்டங்களை தமிழ் உள்பட 8 மொழிகளில் பயில அனுமதி..!!

🔷நடப்பாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட எட்டு மொழிகளில் கற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் கல்வித்துறை அறிவித்துள்ளது.

🔷தமிழ், இந்தி, மராத்தி, வங்காளம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, ஆகிய மொழிகளில் பொறியியல் கல்லூரிகள் பாடத்திட்டங்களை வழங்கலாம். இதன் மூலம் ஆங்கில குறைபாடு உடைய கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்கள் தங்கள் பிராந்திய மொழியில் பொறியியல் படிப்பை படிக்க இயலும்.

🔷பலர் அச்சம் காரணமாக பொறியியல் படிப்பை ஏற்க மறுக்கும் சூழலையும் இது மாற்றியமைக்கும். பாடத்திட்டங்களை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான புதிய மென்பொருள் ஒன்றையும் தொழில் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவராக க.லட்சுமி நாராயணன் பதவியேற்பு..!!

🔷புதுவை சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக க. லட்சுமி நாராயண் பதவியேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

🔷புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா் காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து என். ரங்கசாமி, கடந்த 7 ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றாா்.

🔷இதனிடையே, கடந்த 21 ஆம் தேதி தற்காலிக பேரவைத் தலைவராக என்.ஆா்.காங்கிரஸை சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா் க.லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டாா்.

🔷இதையடுத்து புதுவை சட்டப்பேரவையின் தற்காலிகத் தலைவராக லட்சுமி நாராயணன் புதன்கிழமை (மே 26) காலை 9.30 மணியளவில் ஆளுநா் மாளிகையில் பதவியேற்ற்றார். அவருக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

🔷புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் முடிவுகள் வந்த 23 நாள்களுக்குப் பிறகு பதவியேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயம்

30.54 கோடி டன் உணவு தானியங்கள் 2020-21 நிதியாண்டில் விளைவிக்கப்படும்..!!

🔷2020-21-ம் ஆண்டுக்கான முக்கிய வேளாண் பயிா்களின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது.

🔷உணவு தானியங்களின் மொத்த விளைச்சல் சாதனை அளவாக 30.54 கோடி டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நியமனங்கள்

இஸ்ரேலிய நாட்டின் உளவு நிறுவனமான மொசாட்டின் புதிய தலைவர் நியமனம்..!!

🔷இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டின் உளவு நிறுவனமான மொசாட்டின் புதிய தலைவராக டேவிட் பார்னியாவை நியமித்தார்.

🔷முன்னாள் நீண்டகால மொசாட் செயல்பாட்டாளரான பார்னியா ஜூன் 1 ஆம் தேதி இஸ்ரேலின் உளவு அமைப்பின் தலைவராக யோசி கோஹனுக்குப் பதவி ஏற்றி உள்ளார். கோஹன் 2016 இல் பதவியேற்றதிலிருந்து இஸ்ரேலின் ஸ்பைமாஸ்டராக பணியாற்றினார்.

கொலினெட் மாகோசோ காங்கோ குடியரசின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்..!!

🔷காங்கோ குடியரசின் தலைவர் டெனிஸ் சசோ ங்குஎஸ்ஸோ (Denis Sassou Nguesso) நாட்டின் பிரதமராக அனடோல் கொலினெட் மாகோசோவை (Anatole Collinet Makosso) நியமித்துள்ளார். அவர் 2016 முதல் பதவியில் இருந்த கிளெமென்ட் மௌஅம்பா வை (Clement Mouamba) க்கு அடுத்து பதவி ஏற்றுள்ளார்.

🔷இந்த நியமனத்திற்கு முன்பு மாகோசோ மத்திய ஆபிரிக்க நாட்டின் கல்வி அமைச்சராக இருந்தார். 2011 முதல் 2016 வரை இளைஞர் மற்றும் குடிமை அறிவுறுத்தல் அமைச்சராகவும் இருந்தார்.

🔷2016 முதல் கல்வியறிவு பொறுப்பில் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பதவியை வகித்துள்ளார். திரு கொலின்நெட் மாகோசோ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் சசோ ங்குஎஸ்ஸோ வின் துணை பிரச்சார மேலாளராக இருந்தார்.


Share Tweet Send
0 Comments
Loading...