தினசரி நடப்பு நிகழ்வுகள் 25.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 25.8.2021 (Daily Current Affairs)

விளையாட்டு

செக் குடியரசில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்..!

💠செக் குடியரசு ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சத்தியன் ஞானசேகரன் சாம்பியன் பட்டம் வென்றார்.

💠ஓலோமாக் நகரில் நடந்த இறுதி போட்டியில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், உக்ரைன் வீரர் Yevhen Pryshchepa-ஐ எதிர்கொண்டார்.

💠ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சத்தியன், ஆட்டயிறுதியில் உக்ரைன் வீரர் Yevhen Pryshchepa-ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி - முதல் தங்கத்தை ஆஸ்திரேலியா வென்றது..!!

💠டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் முதல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய நிலையில், முதல் தங்கப் பதக்கத்தை ஆஸ்திரேலிய சைக்கிளிங் வீராங்கனை பெய்ஜ் கிரேகோ வென்றாா்.

💠மகளிருக்கான சைக்கிளிங் போட்டியில் ‘சி1-2-3’ 3000 மீட்டா் பிரிவில் பெய்ஜ் கிரேகோ 3 நிமிஷம் 50.81 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தாா். சீனாவின் வாங் ஜியாவ்மெய் 3 நிமிஷம் 54.97 விநாடிகளில் வந்து வெள்ளியும், ஜொ்மனியின் டெனிஸ் ஷின்ட்லா் 3 நிமிஷம் 55.12 விநாடிகளில் வந்து வெண்கலமும் வென்றனா். கிரேகோவுக்கு இது முதல் பாரா ஒலிம்பிக் பதக்கமாகும்.

💠டோக்கியோ பாரா ஒலிம்பிக்லில் முதல் நாளில் 7 விளையாட்டுகளில் 24 பதக்க போட்டிகள் நடைபெற்றன.

உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைகிறது உலகின் மிகப் பெரிய ராட்டினம்..!!

💠ஐக்கிய அரபு அமீரகத்தின் புளு வாட்டர்ஸ் தீவில் கட்டுப்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய ராட்டினம் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

💠புளு வாட்டர்ஸ் தீவில் 250 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட ராட்டினம், இங்கிலாந்தில் உள்ள லண்டன்-ஐ ராட்டினத்தை விட 2 மடங்கு உயரமானதாகும்.

💠ஐக்கிய அரபு அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை முன்னிட்டு ராட்டினம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்..!!

💠பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

💠இதன்படி ஊழியர் ஒருவர் பெற்ற கடைசி சம்பளத்தில் 30 சதவீத தொகையை ஓய்வூதியமாக குடும்பத்தினர் பெற முடியும். வங்கி ஊழியர்களின் குடும்பத்துக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை குடும்ப ஓய்வூதியமாகக் கிடைக்கும்.

💠தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு பங்களிப்பு தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக ராஜவேலு தேர்வு..!!

💠புதுச்சேரி சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ராஜவேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

💠என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலுவை தவிர வேறு யாரும் அந்த பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.


Share Tweet Send
0 Comments
Loading...