தினசரி நடப்பு நிகழ்வுகள் 25.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 25.7.2021 (Daily Current Affairs)

தமிழ்நாடு

1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசரின் அரிய சிலை உத்திரமேரூரில் கண்டுபிடிப்பு..!

🔷காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கோழியாளம் கிராமத்தில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பல்லவர் காலத்தைச் சேர்ந்த சைவ சமய பிரிவுகளில் ஒன்றான பாசுபதத்தை நிறுவிய லகுலீசரின்அரிய சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

🔷லகுலம் என்றால் தடி, ஈசம் என்றால் ஈஸ்வரன். தடியைக் கொண்டு சைவ சமயத்தை பரப்ப சிவபெருமான் மனித உருவில் 28 ஆவது அவதாரமாக உருவெடுத்தார் என்று கூறப்படுகிறது. அவரே லகுலீசன் என்று அழைக்கப்படுகிறார்.

🔷சைவ சமயத்தின் முக்கிய பிரிவான பாசுபதத்தில் இருந்து லகுலீச பாசுபதம் தோன்றியது. இந்த சிலையானது 95 செ.மீ. உயரமும், 65 செ.மீ. அகலமும் கொண்டது.

மாநாடுகள்

2021 உலக பல்கலைக்கழக உச்சி மாநாடு..!!

🔷2021 உலக பல்கலைக்கழக உச்சி மாநாட்டை (WUS 21) துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.

🔷இந்த உச்சிமாநாட்டை பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் “எதிர்கால பல்கலைக்கழகங்கள்: நிறுவன பின்னடைவை உருவாக்குதல், சமூக பொறுப்புணர்வு மற்றும் சமூக பாதிப்பு” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்தது.

விருதுகள்

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) விருதுகள்..!!

🔷சந்தேஷ் ஜிங்கன் 2020-21 ஆம் ஆண்டின் AIFF (All India Football Federation) ஆண்கள் கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

🔷2014 ஆம் ஆண்டில் வளர்ந்து வரும் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது பெற்ற பின்னர் அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

🔷2020-21 ஆம் ஆண்டின் AIFF மகளிர் கால்பந்து வீரராக நங்கோம் பாலா தேவி தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது முறையாக அவர் இந்த விருதை வென்றார்.

🔷மனிஷா கல்யாண் மற்றும் சுரேஷ் வாங்ஜாம் முறையே பெண்கள் மற்றும் ஆண்கள் வளர்ந்து வரும் ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளை வென்றுள்ளனர்.

இந்தியா

யுனெஸ்கோவின் உலக பாரம்பரியப் பட்டியலில் இடம் பெற்றது தெலங்கானாவின் ருத்ரேஷ்வரா கோவில்..!!

🔷தெலங்கானா மாநிலம் வாராங்கல் அருகே பாலம்பேட்டில் உள்ள ருத்ரேஷ்வரா கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

🔷13 ஆம் நூற்றாண்டில் இதனை உருவாக்கிய சிற்பியின் பெயரால் இந்தக் கோயில் ராமப்பா கோவில் அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஏற்று உலக பாரம்பரிய இடமாக சேர்க்கப்பட்டுள்ளதாக யுனேஸ்கோ அறிவித்துள்ளது.

🔷இதையொட்டி, பிரதமர் மோடி ட்விட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கம்பீரமான இந்த கோயில் வளாகத்துக்கு சென்று, அதன் பிரம்மாண்டத்தின் முதல் அனுபவத்தை பெற வேண்டும் என மக்களைக் கேட்டுக் கொண்டார்.


Share Tweet Send
0 Comments
Loading...